சனி, 12 நவம்பர், 2011

குற்றம் செய்யாத கைதிகள்
வீட்டில் -
முதிர் கன்னி ...!
நட்பு என்பது புனித வரமாகும்
தூய்மையாய் பழகி வாழு ...!
பொறாமை உள்ளத்தை வளர்க்காத இதயம்
சுகம் தரும் தென்றளின் தடவல் ...!
இலக்கியப் பணியை நேசிக்காத மனிதன்
பொழியும் அருளினை பெறாத மனசு
காதலையும் மனதையும் புரியாதோன் வாழ்வை
அரிக்கும் (அழிக்கும்) விஷக்கிருமி
ஏழை இதயத்தை பேணிக்காப்பான்
வாழும் படைப்புக்களில் உயர் மனசு ...!
தோழி ,
நான்
ஓயாது கிழம்பும்
கடல் அலையாய் ;
விடாது தொடரும்
... கண் இமைகளின் சிமிட்டள்களாய்:
சுவாசமாய் நகரும்
மூச்சுக்களாய்....... இருப்பேன்...!
நீ ,
மின்னலோடு தொடரும்
இடியாய் மாறினாலும்
நான் தாங்குவேன்,
எரிமலையாய் வெடித்தாலும் ,
விசப் புயலாய் மாறினாலும் ,
நிழ நடுக்கமாய் அதிர்ந்தாலும் தாங்குவேன்
ஏனெனில் ,
நான் உன்னுயிராக வேண்டும் ...!
நீ -
என்னுயிராக வேண்டும் ...!
கற்பு என்பது பெண்ணின் உயிராகும்
காக்கும் மனசு உயர்வு ...!
தோழி ,
நீ
அன்புக்கு என்றும்
அடைக்கும் தாழ் போடாதே ...!
வீணென்று நெஞ்சம்
விரக்தியுறுப் போகும் ...!
தோழி ,
என்
உறவுப் பூவை
உன்_
மனப் பெட்டிக்குள் போட்டு வை
பெரிதாய் மணக்கும் ...!

இலக்கியத்தில் இலங்கி விடு
இகமதிலே சிறந்து விடு
பல நூறு பாக்கள் படைத்துப்
பாவலனே அஸ்மி மகிழ்ந்து விடு ..!

... செந்தாழப் பூ மணக்கும்
செந்தமிழால் வாய் மணக்கும்
மந்தாரப் பூப் போல அஸ்மி
மானிடர் கை கொட்டிடுவார்

பாவலனே .! நீ வித்திட்ட
பா மணிகள் பல நூறாய்
இத்தரையில் இதழ் விரிக்கும்
முத்திரையாய் முகம் சிரிக்கும் ..!

பொன்னாடையும் போர்த்திய நீ
புகழ் கோடி பெற்றனை நீ
பற்றுதலாய் உன் மீது அஸ்மி
பாசத்தை பொழிபவள் நான்..! (சகோதரி)

பொத்துவில் (அஸ்மியே )
அகிலத்தின் நல் இதயமே ..!கவியே ..!
என் பா மலர் தூவும்
இனிமையான வாழ்த்துக்களை ஏற்றிடுக
பணம் படைத்த ஹாஜிகள் மக்காவில்
தரிசிக்கும் கடைமைகள் இறை பரிசு..!
ஹஜ்ஜை தூயமையுடன் புரிதல்
பச்சிலும் குழந்தையின் மனசுக்குச் சமன் ...!
இறை தூது இறங்கிய ஹிறாமலை தரிசித்தல்
அருள் பொலியும் சுடருக்கு நிகர்...!
புனித மக்காவை பணம் படைத்தோர் தரிசித்தல்
தூய உழைப்பிற்கு அங்கீகாரம்........
நபிகள் நாயகம் ( ஸல் )அவர்கள் பிறந்த மறைந்த இடம்
ஹாஜிகள் மனதால் பொழியும் பிராத்தனைப் பணி ..!
ஹஜ்ஜுக் கடமையை இனிதேசெயலில் காட்டாதோர்
வாழ்வினில் இழப்பான் நன்மை ..!
மக்கத்தில் பிறந்த மலர் நபி (ஸல் )அவர்கள்
மதீனத்தின் மண்ணறையை சொந்தமாக்கிய நிலவு
எழிலுரு இலங்கா புரி நின்று - புனித
இஸ்லாம் மறை சொல்! கடமையினை
இனிதாய் இங்கே நிறை வேற்றி - வந்த
இறையோன் ஹாஜிகாள் வருக...!

... வெள்ளையுளத் தெளிவோடு - மண்ணில்
விளங்கும் பக்தி நெறியோடு !
கொள்ளை அழகு மக்காவில் - வந்து
குவியும் ஹாஜிகாள் வருக....!

அண்ணல் நபியின் சியாரத்தை - உயர்
அருமை மதீனா நகர் தன்னில்
கண்ணால் கண்டு மனந்துதிக்க - வரும்
ஹாஜிகாளே வாருங்கள்...!

அரபா பாலைவனத்தரையில் - மனக்
கறைகள் அகலப் பிராத்தித்து;
இறைவன் வீட்டைத் தரிசித்தே - நன்கு
இலங்கும் ஹாஜிகாள் வருக...!

"சபா மர்வா"மலையிடையே - எழு
தடவை ஓடி தொங்கோட்டம்
"ஸம் ஸம்" தண்ணீர் தனையருந்தி - வரும்
தூயஹாஜிகாள் வருக....!

இப்ராஹீம் நபி செய்த தியாகத்தை - எண்ணி
தல்பிய்யா ஓதிய ஹாஜிகளே!
என்றும் இறையோன் துதிபாடும் - நல்ல
இலங்கை ஹாஜிகளே வருக....!
இலக்கிய உலகில் கலை பணி செய்யும்
பெண்கள் எழுத்து மதிக்கப்படும் சொத்து ..!
பொறாமை என்பது உறவுக்கு கால் தூசு
சுடராய் உதிக்கும் நட்பு
இலக்கியச செடியில்வளரும் உறவு
மனசுக்கு இல்லை இழிவு .!
இதயத்தை வெளிப்படுத்தும் காதல் வாழும்
உறவுக்கு வழிகாட்டும் கருவி ...!
எழிமை வாழ்வை பொறுமையாய் அடைதல்
இறையோனின் அருள் மழை...!
வரும் துயரத்தை இனங்கண்டு கொள்ளல்
மன ஆறுதலுக்கு மருந்து
சாதி மத பேதம் உறவுகளுக்கு அப்பால்
மனிதனாய் மதிக்கும் பண்பு
மனம் புரிந்து இணைந்து வாழும்
இரு மனமே ஒரு மனசு ..!
இதயத்தரையில் வளரும் கற்பனை துளிகள்
மனிதவுள்ளத்தை சிந்திக்கத் தூண்டும் எழுத்து ..!
பெண் என்பவள் சூரியன் உதிக்கா ((பிறக்கா)விட்டால்
இருளாகிப் போகும் உலகம்....!
வாழ்ந்து காட்டுவதே மனித வாழ்க்கை
வீ ழ்ந்து விடாது தடுப்பது வீரம் ...!

வெள்ளி, 11 நவம்பர், 2011

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்களுக்கு தாயின் தொப்புள் கொடி
காதலுக்கு இல்லை இரத்த உறவு
வழி காட்டும் கருவி நட்பு
இதயங்களை புரியாதவர் எவனோ அவன்
திசையரு கருவியற்ற கப்பல் ...!
முதியோரை மதித்து நடத்தல்
இளையோரின் கடமை அது
குடி போதையொரு கேவலம்
குடும்ப நிலை உணர்ந்து வாழ் ..!
சோதனைகள் தொடரும் போது பிரியாது தொடரும்
பிடிவாத உறவு நட்பு ...!
உருக்கமும் ,இரக்கமும் நிறைந்த அன்பு
மன நோய்க்கொரு மருந்து ..!
என்னுயிர் தோழி,
உன்னால்......
வானிலிருந்து பொழியும் மழைத்துளிகளை
தடுத்து நிறுத்த முடியுமா ...?
உதிக்கும் சூரியனை _
... மறைக்க முடியுமா ...?
இரவை பகலாக்கி
பகலை இரவாக்க முடியுமா ...?
கரையை முத்தமிடும் கடலலையை
நிறுத்த முடியுமா ..?
வானத்தை பூமியாக்கி
பூமியை வானமாக்க முடியுமா ...?
அப்படியாயின்
எப்படி ......
நான்
உன் மீது சுரக்கும்
என் தூய அன்பை
உன்னால் தடுத்து நிறுத்த முடியும் ...?
பிரித்துப் போட முடியும் ...?
வாய் சொல் மாறாதவன் என்றும்
பொழியும் வாழ்வில் அருள் ..!
தீமை செய்யாதவன் வாழ்வில் என்றும்
கெடுதியாய் வராதாம் துயர் ..!
உண்மைக்கு முன்னே பொய் உரைப்பவன்
இதயத்தை அரிக்குமாம் நோய் ..!
ஏழையைக் கண்டு இதயம் மகிழ்பவன்
கொடையாளி முன் ஏணி..!
தாய் மண்ணாய்( நாட்டை ) மதித்தல்
உயிர்யுணர்வின் மேன்மை ...!
இறை நம்பிக்கையில் மனம் பதித்தல்
மதத்தின் பற்று உயர்வு ...!
அருட்ச் சுடராய் இறங்கிய குர்ஆன்
ஓதும் நாவு அருள் தடவும் நாவு ...!
அறம் இருக்கும் இதயத்தில்
அச்சம் வராது நம்பு ..!
நல்லொழுக்கம் ஒன்றை நல் நிலைபார்த்தல்
பெண் குணத்தின் உயர் பண்பு ..!
இல்லறவாழ்வை நல்லறமென காத்தல்
மனைவி குணத்தின் உயர் குன்று ..!
நன்றி மறவா நற்பொறுமை
மண்ணில் வீசும நறு மனக் காற்று ...!