சனி, 2 ஜூன், 2012

இது ஏழைகள் வடிக்கும
கண்ணீர்
எனக்கு சம்பந்தமில்லை

தூசுக்கள் கிடந்தவள்
அழுக்குகளை
கழுவிக் கொண்டாள்

பட்டமரத்து விறகாய்
பிரகாசமற்ற வாழ்க்கை

துயரத்தில் வாழ்ந்தவள்
இன்று கை ஏந்தி வாழ்கின்றாள்

லயங்களில் வாழ்ந்தவள்
இன்று மாடி வீட்டில்
வாழ்கின்றாள்
சில்லறை காசுக்காக சொல்லடி பட்டவள்
இன்று ரூபாய் நோட்டுகளில்
புரலுகிறாள்!

என்ன ஒரு மாற்றம்
ஏழை பணக்காரனாகவும்
பணக்காரன் ஏழையாகவும்
மாறிய வாழ்க்கையின் அற்புதம் ..!
மனமாறும் உணர்வு
..........................................
தன் மனைவியை வைத்துக் கொன்டு
தரம் கெட்ட வாழ்கையொன்றை
தமதாக்கிக் கொள்வது சரிதானோ...? ...

மனமாறும் உணர்வுக்குள்
முகமாறும் சூழ்ச்சிக்குள்
மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது
தேவை தானா ..?

.மானத்தை விற்ற பின்
பொருமையிழந்த தூக்கத்தை
ஏனந்தக் கண் தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன் இருளை சாடுது?

சுகமான நிகழ்வுகள்
சுமையாகும் நினைவுகள்
சுமைதாங்க்கு ம் போது மனைவியை தேடுது..?

தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம்
புழுதியாய் போகின்ற
துரு நாற்றத்தின் நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?

இச்சைக்கு ஆசை காட்டும்
பேதயை வெறுக்காது
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
காமத்தை சரியென்கிறாய்?

காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!

வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!

விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம் சொலலாததேன்?

வெஞ்சுடரின் தீ
விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப் அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
Mohammed Kalaimahan தாத்தா உங்கள் கவிதையோடு நானு மிணைந்து...
--------------------------------

மனைவியை நீ மண்ணவியாக்காதே
மறைக்கு மவளின் மகிமைநீபார்!
மனைவிளக்கும் துணைவி அவளேதான்
மகிமைசேர் - மாண்பினைப்பார்நீ!

சதைத்துண்டத்திற் கலைகிறாய் காமாநீ
சகத்திலனைவரும் ஞமலி யென்பர்தினம்
நாதியற்று அவள்சென்றிட நிலைபார்உன்
நன்மை யவளிலே யுண்டு நீதெளி!

விட்டில்களி னுறவுக்கு ஏங்குகிறாய்
விரைத்துத் தணிந்ததும் உன்நிலையேது?
முட்டாள்தனம் நீநீங்கி அவளைச்சேர்
மிருகக் குணத்தை நீக்கிடு இன்றே!

உன்னிலைகண்டு இருளும்கூசுதுபார்
உறவினை விலக்கி உறவாடுகிறாய்நீ
தன்னிலை அறிந்து அவளைச் சேர்நீ
தரமான காதலன் நீயெனச் சொல்வா ளவள்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்....

கலைமகள் ஹிதாயா றிஸ்வி வாழ்க ...!

கவிஞன்
கதை சொலபவ னல்ல
கற்பனைத் தீயை
கலங்கரை விளக்காக்கி
சமுதாய இருட்டுக்கு
வெளிச்சமிடுபவன்

மானுட உறவுக்குள்
மறு பிறப்பெடுக்கும்
ஊத்தைகள்
கவிதைக் கரங்களால்
சலவை செய்யப் படுகிறதென்றால்

கவிதை
மரணிக்கவில்லை என்பது
அர்த்தம்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
இலக்கிய உலகில்
நிறுத்திக் கொண்ட
ஆளுமைப் பங்கை
இங்கே
கவிதைகள் மூலம்

பிரசவத்தை
பிரசுரத்தின் மூலம்
செய்து காட்டிவருவது
இலக்கியத்துறையில்
அவள்
இறுகிக் கொண்ட இணைப்பை
இனங்காட்டி வைக்கிறது .

வாழ்வுச் சுவட்டை
அநுசரித்துபோன
சகோதரி ஹிதாயாவின்
அர்த்தமுள்ள
சிந்தனைக் கரங்கள்
அமாவாசைக் கருப்புக்கு
நிலவுகளை அழைத்து வந்து
நிறுத்தி விடுகிறது

கற்பனைகளின்
மெல்லிய சுவாசங்களால்
வாசகர்களுக்கு
தீனி போட்டுவருவது
பாண்டிய த்தை
விவாகரத்துச் செய்து விட்டு
படிக்கின்ற உள்ளங்களை
இலக்கிய பந்தலுக்குள் வைத்து
பழந் தமிழ்
தாலி கட்டுகிறது

இலக்கிய உலகில்
அறுவடை செய்கின்ற
கலைமகள் ஹிதாயாவின்
இலக்கியக் கனிகள்
ஒரு
நலிந்த சமூகத்தின்
அவலப் பசிக்கு
சோறு போடுமென்பது
என் கணிப்பு ...!

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
நெஞ்சுறுதிச் சாயல்கள்
கவிதைத் தொழிலில்
புலப்படும் போது
இந்தச் சகோதரியாலும்
கலையுலகின் காவலனாய்
கணிக்கப் படுகிறாள்

பாவை இவளின்
பா -தொகுதி
முதன் முதலில்
முஸ்லீம் பெண் வரிசையில்
பெண் இனத்தின் வரிசையில்
இலக்கிய வரலாற்றில்
ஈ ழத்திற்கொரு
பெருமைக் கொடு

கலைக்காக
கலைமகள் ஹிதாயா
எழுது கோலைநிறுத்தியிருப்பது
சமுதாய ஏட்டில்
ஒரு
பற்றுக் கோட்டை
வரைந்து காட்டப்
பாடு பட்டிருக்கிறாள்
என்பது புலனாகின்றது !

இறுதியாக ,
கறுப்புச் சுவரின்
வெள்ளைச் சித்திரங்களாக
இவளின்
கலை வடிவங்கள்
ஆளுமை பெற்று
வாழ்ந்து வழி காட்ட
இதயப் பிரியமுடன்
பிரிய வாழ்த்துகள்....!

ஈழத்த பாவரசு
கரங்கள் இரண்டும் காதுகள் இரண்டும்
மாறி மாறி
பேசிக் கொண்டிருந்தது!

தொலை பேசியின்
தொல்லை சத்தம்...

நாவு
வரண்டு போய்
தாகம் தீர்க்க
நீர் தேடிக் கொண்டிருந்தது.

சூரியன் விடை பெற
மெல்லமாய்,
இரவு தடவும் நேரம் அது!

முற்றத்துப் படியில்
அவனும் அவளும்...

தாயின் தொப்புள்
கொடி உறவு போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.

இருவரும் பேச ஆரம்பித்தது
இன்றாகவும் இருக்கலாம்.

சின்ன கொஞ்சல்கள்!
செல்ல கோபங்கள்!!
மெல்லிய வருடல்கள்!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
சங்கிலித் தொடறாய்
நீண்டுகொண்டிருந்தது.

சேட்டுப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
நம்பரை எடுத்தான் அவன்!

தீடிரென்று
அழைத்துப் பேசினான்
அந்த அழைப்பு
ஒருவேளை அது
காதல் தொடர்பாய் இருக்குமோ?
யோசித்தாள் அவள்!

அவன் தூரத்தில் நின்று ..பேசினான்
அவளோ தள்ளி நின்று சிரித்தாள்!

காதல் பேச்சு அல்ல அது!
தொல்லைப் பேச்சு
தொலையும் பேச்சு

அம்மா காதலியோடு பேசிக்கொண்டு உள்ளேன்
கையோடு
அழைத்துக் கொண்டு வரவா என்று கேட்டான்

அதற்க்கு அவள் சொன்னாள்
நான் ஒரு குழந்தையின் தாய் என்று ...


அங்கங்கே மெல்லமாய்
சலிக்க ஆரபித்தாள்.

கடைசியில்
வரலாறு பேசி முடித்தான் அவன்...
அவளோ புன்னகைத்தாள்!

பேசியது எப்படியிருக்கு
என்றான் அவன்.

கொட்டும் மழை போ(ல்)லிருந்தது என்று
மனதார பாரட்டினாள் அவள்.

கதை பேசிய - இந்த
கை பேசிக்கு
ஆயிரம் ரூபாய் ரீலோட் போடலாம்
என்றாள் அவள்.

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை!
என்
நண்பனின் கை பேசி
தன் கணவனின்
காணமல் போன தொ(ல்)லை பேசி
என்று..!
ஆழ்ந்த தூக்கம் ஒரு மரணம் என்பது உண்மைதான் -ஆனால்
மரணித்தவர்கள் எழும்ப முடியாது
தூங்கியவர்கள் எழும்ப முடியும் ..!
துயரமாய்
உன் -
கண்ணீர் துளிகள் ...
என் மனக் கன்னத்தோடு
வெள்ளமாய் கலந்து
இதய தூசை
அகற்றுகின்றது .... தோழி ...!
என்னிதயத்தை
மேலிருந்து
நீ -
காவல் காக்காதே தோழி

உனக்கான ,
என்னிதயத்துக்குள்
உன்னைத் தவிர
யாரும் வர முடியாது தோழி

அது
உன்னைத் தவிர யாருக்கும்
சொந்த்தமில்லை தோழி ...!
தேயிலைக்கூடையோடு துயர் மனச் சுமையோடு ...
அடுக்கு சோக சிந்தனையில் நிறுக்கு மிடம் வரை தூக்கிச் செல்ல
ஆறாத ரணங்களை இழுத்து..ஆற்றுவாயோ முதலாளி மார்களே ..!
ஓட்டை லயம் நானும்...சொந்த பந்தமில்லை எனக்கும்....!
சோகங்களை பார்த்து சொல்லு..என் மனதை தேற்றி சொல்லு..!
கங்காணி போல் நிறைகள் பார்த்து ..பெண்களை கேலிசெய்து
பேச்சுக்களை வீசி விட்டு..பணம் மட்டும் வாங்கிக் கொண்டு..
அணியாயம்செய்து விட்டு போயிடாதே ..என் நிலை பாரு
ஏங்கும் இதயம் கொஞ்சம் பாரு..ஏக்கம் கொஞ்சம் தீரு..!
கண்ணீர் விட்டழும் குருதித் துளிகளின் கதை கேளு..!
வேதனை தாங்காமல் எனக்குள் அழுகின்றேன்....
தவிப்பதும்..துடிப்பதும்...சம்பளத்தில் உயர்த்திக் காட்டு ..!
பாம்பறியும் பாம்பின் கால்....நீயரியாயோ என் கண்ங்கானியே
கதறி சொல்லும் கதையை காதோடு... கேட்டுச் பாரு ...!
சிந்திப்போன குருதித் துளிகளை நுலைந்து வந்த
அட்டையொன்று..பாசத்தோடு உறிஞ்ச ..
உடலிருந்தோ வலியை விழிநீரைத்
துடைத்த திருப்தி.. எனக்கும்..!மலையகத்துக்கும் ..!
கொள்ளையடிக்கும் யுகத்துக்கு மீண்டும்
போகும்
மனித ஆத்மாக்களை

ஏன் யாரும் தடுத்து நிறுத்துவதில்லை !

பினோக்கிச் செல்லும்
வாழ்க்கைச் செலவு
முன்னோக்கிச் செல்லாது

எந்த யுகத்திலும் !
கூட்டிய வருமானத்தை
குறைத்து விடாது ..!

தற்காலத்தில்
கை பேசி உண்டு
கணினி உண்டு
குறுந்தகவல் உண்டு
பறக்கும் விமானம் உண்டு!
நினைப்பதெல்லாம்
காலடி வரும்
கரங்களை நீட்டி யாசகம் கேட்டால்
நாடுகள்
முன்னேற்றம் அடையாது !

விலைவாசிகள் தான் கூடும்
பஞ்சத்தை நோக்கும் ...!
தோழி
என்னை இப்படி
நேசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
உன்னை - நான்
என்றோ எனக்குள்
சிறை பிடித்திருப்பேன் ..!
உன்
இனிய நினைவுகள்
என் பூந்தோ ட்டத்தில்
இப் பூக்களாய்
செழிக்கின்றன...!
கடலை கடந்த
தோணியாய் இங்கே....!
கரையை காணும் வரை... !


கணவர் இல்லாது
பிறந்த .பிள்ளையாய் ...
இணை உறவு தேடும் வரை...

!
பாசம் கொண்ட மனமிது ..
அன்புக்காய் ஏங்கும் இங்கே..
தாங்கும்உள்ளம் சேரும் வரை..!
வாழ்வின் இறுதி
முடியும் நேரம்..இது..!
தாகத்துக்கு கிடைக்காத தண்ணீருக்குள

மனக் காயம் ஆயிரமாய் ..வடுக்கள்
கொண்ட உள்ளம் இது..!

பாசம் தேடும் உணர்வுகளோடு
நடுக் கடலியல் தடுமாறும்
திசையரு கருவியற்ற கப்பல் இங்கே..

கரை சேரும் தவிப்போடு..!
எப்படியும் நட்பு வரும் ..
கவலை மறக்கும் ...இங்கே
எனக் காத்திருந்தேன்..!

பழுத்து விழுந்த
பழம் போல்..!
புழுத்து நிறைந்த சதையாய் ..!


உறிஞ்சி இழுத்தாய் கண்ணீரை..!
நெஞ்சத்து கங்கையை உன் இதய
கிடாரத்தில் தாங்கிய தோழியே ....


அன்பே இணைந்து வந்தால்..!!
கவலைகள் மாறிப் போகும் அங்கே .
நிம்மதி பெரு மூச்சு தேடி வரும் ..!
உன்

தொலை பேசி என்னை அழைக்கும்நேரங்களில்

உயிரின் சுவாசங்களில் இருக்கும்

மூச்சுக்கள்

உணர்வுகளை சிந்தி

உன்னை காணத் துடித்தழுகிறது ...!
வாடிய மனப் பயிரை
செழித்து மகிழ்விக்க
ஊற்றாய் வந்தாள்
எங்கிருந்தோ...
என்னுயிர் தோழி ..

வானம் பொழியும்
மழைபோல் நீ

வந்த மகிழ்ச்சியில்
நான் செழிப்பானேன்

மின்னலாய் நீ வந்து
மறைந்த போது...
நானே இடியானேன் ..!

எல்லாவற்றுக்கும்
காரணமாய்
போட்டி ..பொறாமை
சூ து வாது
பட்டம் பதவி
அத்தனைக்கும்
சாட்சியாய்...நட்பைக்
கலப்பது .
நீருக்குள் கரைத்த
உப்பை தேடுவது போலாகும்
!
கவிஞனுக்கு
காதலை
கண்டால் கவிதை
கவிதையாய் !

நட்பு இதயமோ
மகிழ்கிறது
அலை அலையாய்..
பாசக் கடலில் ..!
ஈரமுள்ள இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
ஆணி வே ர்போல்…

பாசம் நிறைந்த நட்பினால்
மனசு மகிழ்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்,

பசியில்லை…..
தாகமில்லை……
மனச் சோலையில்
மகிழ்ச்சி

விண்ணில்லிருந்து பொழியும்
மழைத் துளிகளாய்
விழுகின்றது ....!
என்னைப் பார்த்து அழுகிறாள் என் தோழி

என் உயிர் போல இருக்கிறாள்

மருந்தூட்டி தலை தடவ

பாசமானவள் முயல்கிறாள்


அன்போ அவள் கருணை என்று சொல்கின்றாள்

மனதில் வளர்க்கின்ற பாசத்தினை

இதயம் நிறைந்து நேசிக்கின்றாள் ...!
ஒவ்வொரு மனிதருக்கும்
ஏதேனும் ஒருவகையில்
இருக்கிறது அன்பு ..!

அன்புயின்றி யாரையும்
காண்பது கடினம்
என்கிற அளவில்
அன்பின் நினைவு களோடு மனிதர்கள்.
அவரவர் தொடர்பு ..!

அவரவர்க்கு
தேவையாகும் போது
ஏற்புடையாதாகும் அன்பு

அடுத்தவர் மனதில்
அன்பை வளர்ப்பது பற்றி ..?

அன்பான உள்ளத்துக்கு
நீண்ட வரிசையில் நின்று
உறவைத் தேடி
நல்லவர்கள் மனதில் இடம் பெற்று
பாசமுட நேசிப்பவர்களை
இணைத்துக் கொள்ளும்உறவு நட்பு ...!

இதயம் இணைக்கும்
மனசு மகிழும்
நட்புத்தான் உறவு

மனம் திறந்தது பேசும் மகத்தான உறவு

வண்ணத்துப்பூச்சியும்
வானவில்லும்
சிட்டுக்குருவியும்
சிறகடிப்புமாய் நீளும்
நட்பு எந்நாளும்...!

ஒளிவு இன்றி
மறைவு இன்றி ...!
மனித வாழ்க்கை கொஞ்சக் காலம் இதை மனிதர்கள் உணர்வதில்லை...
தனக்கொரு வியாதியோ, நோயோ, வந்தபின் தான் எல்லாவற்றையும் சிந்திக்கிறான்.

தன்னை சிந்திக்க வைக்கும் முன்,
வியாதி அவனை முந்திக் கொள்கிறது.
வாழும் வரை நன்மை செய்ய முனைவோம்,
பணத்தால் இல்லாவிட்டாலும்,
உடல் உழைப்பால் செய்வோமே.

பணம் மட்டுமே வாழ்கை இல்லை,

அடுத்தவரிடம் அன்பு செலுத்தி
வாழ்வதும் நன்மை செய்வதுமே வாழ்க்கை ...!
அன்பைக் கொண்டு பிறரை அவமதித்தல்
நிறைவேறா வாழ்க்கையின் எதிர்பார்ப்பு ...!
பணத்தை விட சிறந்தது அன்பு
தூய்மையாய் நின்று பழகு ...!
பாசத்தை காட்டும் அன்பான இதயங்கள்
மறவாது சொல்லுமாம் நன்றி ..!