சனி, 2 ஜூன், 2012

கரங்கள் இரண்டும் காதுகள் இரண்டும்
மாறி மாறி
பேசிக் கொண்டிருந்தது!

தொலை பேசியின்
தொல்லை சத்தம்...

நாவு
வரண்டு போய்
தாகம் தீர்க்க
நீர் தேடிக் கொண்டிருந்தது.

சூரியன் விடை பெற
மெல்லமாய்,
இரவு தடவும் நேரம் அது!

முற்றத்துப் படியில்
அவனும் அவளும்...

தாயின் தொப்புள்
கொடி உறவு போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.

இருவரும் பேச ஆரம்பித்தது
இன்றாகவும் இருக்கலாம்.

சின்ன கொஞ்சல்கள்!
செல்ல கோபங்கள்!!
மெல்லிய வருடல்கள்!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
சங்கிலித் தொடறாய்
நீண்டுகொண்டிருந்தது.

சேட்டுப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
நம்பரை எடுத்தான் அவன்!

தீடிரென்று
அழைத்துப் பேசினான்
அந்த அழைப்பு
ஒருவேளை அது
காதல் தொடர்பாய் இருக்குமோ?
யோசித்தாள் அவள்!

அவன் தூரத்தில் நின்று ..பேசினான்
அவளோ தள்ளி நின்று சிரித்தாள்!

காதல் பேச்சு அல்ல அது!
தொல்லைப் பேச்சு
தொலையும் பேச்சு

அம்மா காதலியோடு பேசிக்கொண்டு உள்ளேன்
கையோடு
அழைத்துக் கொண்டு வரவா என்று கேட்டான்

அதற்க்கு அவள் சொன்னாள்
நான் ஒரு குழந்தையின் தாய் என்று ...


அங்கங்கே மெல்லமாய்
சலிக்க ஆரபித்தாள்.

கடைசியில்
வரலாறு பேசி முடித்தான் அவன்...
அவளோ புன்னகைத்தாள்!

பேசியது எப்படியிருக்கு
என்றான் அவன்.

கொட்டும் மழை போ(ல்)லிருந்தது என்று
மனதார பாரட்டினாள் அவள்.

கதை பேசிய - இந்த
கை பேசிக்கு
ஆயிரம் ரூபாய் ரீலோட் போடலாம்
என்றாள் அவள்.

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை!
என்
நண்பனின் கை பேசி
தன் கணவனின்
காணமல் போன தொ(ல்)லை பேசி
என்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக