சனி, 2 ஜூன், 2012

தேயிலைக்கூடையோடு துயர் மனச் சுமையோடு ...
அடுக்கு சோக சிந்தனையில் நிறுக்கு மிடம் வரை தூக்கிச் செல்ல
ஆறாத ரணங்களை இழுத்து..ஆற்றுவாயோ முதலாளி மார்களே ..!
ஓட்டை லயம் நானும்...சொந்த பந்தமில்லை எனக்கும்....!
சோகங்களை பார்த்து சொல்லு..என் மனதை தேற்றி சொல்லு..!
கங்காணி போல் நிறைகள் பார்த்து ..பெண்களை கேலிசெய்து
பேச்சுக்களை வீசி விட்டு..பணம் மட்டும் வாங்கிக் கொண்டு..
அணியாயம்செய்து விட்டு போயிடாதே ..என் நிலை பாரு
ஏங்கும் இதயம் கொஞ்சம் பாரு..ஏக்கம் கொஞ்சம் தீரு..!
கண்ணீர் விட்டழும் குருதித் துளிகளின் கதை கேளு..!
வேதனை தாங்காமல் எனக்குள் அழுகின்றேன்....
தவிப்பதும்..துடிப்பதும்...சம்பளத்தில் உயர்த்திக் காட்டு ..!
பாம்பறியும் பாம்பின் கால்....நீயரியாயோ என் கண்ங்கானியே
கதறி சொல்லும் கதையை காதோடு... கேட்டுச் பாரு ...!
சிந்திப்போன குருதித் துளிகளை நுலைந்து வந்த
அட்டையொன்று..பாசத்தோடு உறிஞ்ச ..
உடலிருந்தோ வலியை விழிநீரைத்
துடைத்த திருப்தி.. எனக்கும்..!மலையகத்துக்கும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக