சனி, 2 ஜூன், 2012

மனமாறும் உணர்வு
..........................................
தன் மனைவியை வைத்துக் கொன்டு
தரம் கெட்ட வாழ்கையொன்றை
தமதாக்கிக் கொள்வது சரிதானோ...? ...

மனமாறும் உணர்வுக்குள்
முகமாறும் சூழ்ச்சிக்குள்
மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது
தேவை தானா ..?

.மானத்தை விற்ற பின்
பொருமையிழந்த தூக்கத்தை
ஏனந்தக் கண் தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன் இருளை சாடுது?

சுகமான நிகழ்வுகள்
சுமையாகும் நினைவுகள்
சுமைதாங்க்கு ம் போது மனைவியை தேடுது..?

தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம்
புழுதியாய் போகின்ற
துரு நாற்றத்தின் நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?

இச்சைக்கு ஆசை காட்டும்
பேதயை வெறுக்காது
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
காமத்தை சரியென்கிறாய்?

காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!

வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!

விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம் சொலலாததேன்?

வெஞ்சுடரின் தீ
விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப் அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
Mohammed Kalaimahan தாத்தா உங்கள் கவிதையோடு நானு மிணைந்து...
--------------------------------

மனைவியை நீ மண்ணவியாக்காதே
மறைக்கு மவளின் மகிமைநீபார்!
மனைவிளக்கும் துணைவி அவளேதான்
மகிமைசேர் - மாண்பினைப்பார்நீ!

சதைத்துண்டத்திற் கலைகிறாய் காமாநீ
சகத்திலனைவரும் ஞமலி யென்பர்தினம்
நாதியற்று அவள்சென்றிட நிலைபார்உன்
நன்மை யவளிலே யுண்டு நீதெளி!

விட்டில்களி னுறவுக்கு ஏங்குகிறாய்
விரைத்துத் தணிந்ததும் உன்நிலையேது?
முட்டாள்தனம் நீநீங்கி அவளைச்சேர்
மிருகக் குணத்தை நீக்கிடு இன்றே!

உன்னிலைகண்டு இருளும்கூசுதுபார்
உறவினை விலக்கி உறவாடுகிறாய்நீ
தன்னிலை அறிந்து அவளைச் சேர்நீ
தரமான காதலன் நீயெனச் சொல்வா ளவள்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக