செவ்வாய், 22 ஜூலை, 2014



உயிர் வாழும் போதினிலே
ஆரோக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
ஊசி துளையாமல் உடலினை
வியாதியின்றி காத்திடுவாய் ..!

நோயற்ற வாழ்கையை
குறைவற்ற செல்வமாக்கிடுவாய்
அல்லாஹ்வே உன்னருளினை
தொழுகையில் தந்திடுவாய்!

அவதிப்படும் நோயாளிகளை
வேதனையில்லாது காத்திடுவாய்
நலம் பெரும் வழியினை
நிறைவாக காட்டிடுவாய்!

கலீமாவுடன் மறையும்
பாக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
உறுதியான ஈமானை
நிலையாக வைத்திடுவாய்!

சோதனையான வாழ்க்கையை
பொறுமையோடு தாங்கிடச்செய்வாய்
மனித நேயம் காத்திட
அருளினை கொடுத்திடுவாய்!

இறையருள் கட்டளைகளை
ஏற்று நடத்திடச் செய்வாய்
பாவம் செய்யும் மனதினை
தந்திடாது காத்திடுவாய்!


என்
தொழுகையால் ,
பிராத்தனைகளால்,
நல் அமல்களால்
அல்லாஹ்வின்
அருட் கொடைகளை
என்னால்
பெற முடியுமென்றால்
ஜன்னத்துல் பிர்தௌஸ்யெனும் சுவர்க்கத்தை
உறுதிப்படுத்தி தருமாறு
ஐந்து நேரத் தொழுகையிலும்
தூஆ செய்து கொள்வேன்.....!

வேறு எதையும்
உலகில் -நான்
எதிர் பார்த்து வாழப் போவதில்லை ..!

முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை ...!



தொடரும் கடல் அலை போல்
நிறைகின்ற உறவு
இந்த மீனவர்களுடையது..!

கடலினுள் தோணி பயனிக்கையிலும்
சவலின் துணிவு
விசிறித்தரும் சிறகு
இயந்திரமொன்றின் பரிமாற்றம்

இவை,
மீன்களை பிடித்துக் குவித்த எண்ணிக்கையினும்
அலைகளை முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை அதிகம்

பணங்களின் மதிப்பை விட
இதயங்களின் இழப்புக்கள் அதிகம்..!

பணம் ,பிணம்
இரண்டுமே சரித்திரமாகும்
தரித்திரம் ஒன்று இல்லாத வரையில்

இன்று காலையில் சிக்கிய
வலையில் சடலமொன்று
ஒரு உயிரை மாட்டிக் கொள்ள ,
தண்ணீருடன் தனனிறகை அடித்துக் கொன்டது
திமிங்கிலமொன்று ..!

இறக்கும் வரை கடத் தொழிலைநம்பியிருக்கும்
மீனவர்களின் முன்னால்
கடலோ இறை கொடுக்கும்
அருட் கொடையாய் தவமிருக்கின்றன !

வாழ்விலும் ,சாவிலும்
குறையாமல் தான் கொடுக்கின்றன
மனிதர்கள் தான்எதையும் நிறைவாக பார்ப்பதில்லை ..!


நட்பு ஓர் அழகிய கண்ணாடி 
அது
ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்!
ஆனால்
உடைந்து விட்டால் ஒட்டவே முடியாது


விட்டுக் கொடு
விருப்பம் நிறைவேறும்

மன்னிப்புக் கொடு
தவறு குறையும்

மனம் விட்டுப் பேசு
அன்பு பெருகும்


நீ
எதை எழுதினாலும்
அது
கவிதையாகத்தான் விளங்கும்

உன்
சிந்தனை .
எழுத்து
அன்பு
பாசம் எல்லாமே
பேசப்படுகின்றன முக நூலில்

நீயே
என் நட்புக்கு மூச்சாக
சுவாசிக்கும் போது .
சகீ
தடவிக் கொள்வாய் என்ற
உணர்வோடு தான்
தொட்டுச செல்கின்றது
தென்றல் கூட..!


நட்பு எனும் நந்தவனத்தில்
மலர்ந்திட்ட அன்பு
நித்தம் பூத்திடும் நின்மதியில்
நினைவின் அலையாலே
நிம்மதி தந்திடும் அது
நிஜத்தின் நிழலாகவே


இரவு
விடியும் போதெல்லாம்
நாங்கள் கூடை சுமக்கின்றோம் ..

எங்கள் கரங்ககள்
நோன்டி நோன்டிகொழுந்து கிள்ளுகின்றன

ஆனால்
எங்களுக்கான வறுமை மட்டும்
மாறாமலிருக்கின்றன.

மகா கவி பாரதி








தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் - கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று --தினம்
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ....
 

பெண்மையா வேண்டும் ...?








இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனை எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையை யேன் மறந்தாய் ?

வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்ப தேன்...?

கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை எழுது
கவிதைகளை அருமையாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கையை எழுது
உலகின் அழகினை போற்றி எழுது!
ஆயிரமுண்டு எழுத,அவற்றை யெல்லாம் விட்டு..!விட்டு -
உலகினில் பெண்மையா வேண்டும் எழுத ....?
 

எட்டிப்பிடிக்காதயிவள்


நவம்பர் டிசம்பர் மாதம் கிழக்கில் குட்டை குளம் நிரம்பும்
குளிர் கால மழை வந்தாலே போதும் -அவள்
ஒட்டி உறவாடி நித்திரையில் காதுக்குள்
மதலை மொழி பேசி மகிழ வருவாளாம் 
சட்டென அடித்து விட்டு சனியனே போ என்றாலும்
வெட்கப்படாமல் திரும்பி வருவாளாம் அவள்
பாசமுடன் நம்முடலை உறிஞ்சி எடுக்கலாமென்ரென்னி
சட்ரென்று முத்த மழை பொழி வாளாம்

கட்டில்படுக்கையானாலும் கல்யாண வீடே யானாலும்
போகுமிடமெல்லாமே காதல் -நாம்
மண்ணிலே கிடந்தாலும் மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
உறவெனக் கொஞ்சி மகிழ் வாளாம்
அனுமதியின்றி எமையானுகி குருதியை வயிறா ர
உரிமையுடன் தானுறிஞ்சுவாளாம் -இந்தக்
பென்னழகி தன்னை யொரு காளையனும் விரும்பாத
காரனத்தை என்ன சொல்வேனான் ...?

பாசமற்ற இப் பேரழகி எதிரியாய் எமையணுகி
விரக்திக்குட் படுத்துவாளாம் -தினம்
நள்ளிரவு நேரத்திலும் நம்முடைய உறக்கத்தை
எழுப்பி விட்டு விடு வாளாம்
எட்டிப்பிடிக்காதயிவள் கட்டிப் பிடிக்கத்தான்
சங்கிதம் பாடி வருவாளாம் மிக
கெட் ட உறவாலே மலேரியா டெங்கு தந்துயிரை
மரணத்துக்குத் தள்ளி விடும் பாவியிவள் நுளம்பு

கொம்பியூட்டர் யுகம்



உள்ளதின் விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித் தளங்கள்--- 

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச் சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை பூக்கள்!

ஒருயுக விடிவில்
கலை நோய் பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய் மலிந்த
புதுக் கவிதை தொகுதிகள்----

தளம்பி வீழும்
மரபுகளில்
ஒரு சிறு
வழுக்கலை நீக்கும்
புது வடிவங்கள்!

கசிவுகளாய்
உள்ளத்து ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப் பதிவுகள்
தனி ரகமாய் ஜொலிக்கும்

விமர்சனம் வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்...

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....

யா அல்லாஹ் ...!





கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து தொழுது 

பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம்
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சி
தஜ்விதாய் ஓதிட அவை மனதில்
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில்

உள்ளத்தில் வஞ்சகமில்லா அன்பு
ரத்த நாளங்களிலே பாசத் துடிப்பு
மெல்லிய் இதயமென என் உள்ளத்து உணர்வு
குறை யேது மின்றியே பொழியுது
நபி வழியே சுவாசிக்கும் மூச்சு

கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்....!
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து
 


படைத்த நாயன் அல்லாஹ்விடம்
எதைக் கொண்டு
மண்ணறைக்கு செல்வாய் ?

பணமா ?
வீரமா ?
சொத்து சுகங்களா ?


வானம் மேலே
பூமி கீழே
நாடுவில் நாம்

என் சகீ
எது வந்தாலும் ,
நான் -
கலங்கிப் போகவே மாட்டேன் 

சகீ
நான்
இம் முறை -
பெருநாளைக்கு புதிய உடுப்பு
வாங்கவே மாட்டேன்

காரணம் -
காஸாவில்
என்
இஸ்லாமிய சகோதரங்கள் 
கபன் பிடவை வாங்கிக் கொண்டு உள்ளார்கள்

அத்தோடு -
பெரு நாள் அன்று
என்னுயிர் தாத்தா என்னை விட்டுப் பிரிந்து
40தாவது நாள் ..!

இறைவா
உன்னையே வணங்குகின்றோம்
உன்னிடமே
உதவி தேடுகின்றோம் ..!


மண்ணில் மனிதனாப் பிறந்து

உலகினைப் பார்த்தேன்

மனசு கலங்கத் துவங்கியது

மனிதனின் உயிர் இழப்புக்களைப் பார்த்து ..!

தென்றல்



காற்றுகள் பல வந்தும்
கலங்கிடாமல் நிற்கின்ற
ஆற்றலுள் ளொன் நானென்று
அகங்காரம் கொண்ட ஒரு
வாட்டமுள்ள ஆல மரம்
வாழை யொன்றை நோக்கியது !

சிறியவனே நீ இந்தச் 
செகத்தினிலே வாழ்ந்து விடும்
அரு கதையோ சில காலம்
அறிவாயோ என்று ரைத்துப்
பெருஞ் சத்தம் போட்டுத் தன்
பேரிரைச்சலைக் காட்டியது

வாழை மரமோ வாய்திறவா (து)
வருத்தமுடன் நிற்கையிலே
காலையிலே வீசிய புயற்
காற்றதனால் எதிர் நின்ற
அவவால மரம் விழுஞ் சத்தம்
அவ் வாழைக் கொலித்ததுவாம் !

குழந்தைகளின் உடம்பில்
இஸ்ரேலியர்களின் தாக்குதல்
உயிர் பலிகள்

ஆயிரம் ஆயிரம் இதயங்கள்
மன்ம்வருந்தியழுது பிராத்தனை
யா அல்லாஹ் .

குண்டுகள் துளைக்க
அப்பாவிகள் உடம்பு 
காஸாவில் .

உயிர் மரணித்து கிடக்கின்றது
பெருநாள் ஆடை என்பதில்
கபன் பிடவை மணக்கின்றது

எத்தனை முகங்களை பார்த்தவள் நீ
அத்தனையும் மாறும் நினைவிலிருந்தே - நேசமென
போலி யுறவுகளை நம்பாதே பேரழிவு சூழ்ந்திடும்;
நாடாதே நன்மையென்று உணர்.....!

ஞாயிறு, 13 ஜூலை, 2014



வாழ்க்கையின் எண்ணிக்கை  தலை மூடியில் 
தெரிகின்றது 
கருப்பின் நிறம் வெள்ளையின் மாற்றமாய் ...!


நட்பு புனிதமானது ! 
புரிந்துணர்வுடன் வாழும் வரையிலும்!! 

வாழ்ந்து பார்க்க ஆசை 
மரணம் 
தடவிச்கொள்ளும்  வாழ்க்கை 

உலகம் தான்
புரியவில்லை
எப்படி மதிப்பீடு செய்வது ...?

மனித உயிர் 
வாழும் வயிறு 
பாரமில்லை சுமப்பதற்கு  

இறைவன் அருள்
கருவின் உருவம் 
புரிவதில்லை மானிட பிறப்பு !

சூரியன் உதிக்கும்  வரையில் படுத்துக் கிடந்தால்விரைந்து தடவும்  தரித்திரம் ...!



விடியும் முன்பு எழுந்து தொழுதால் சுடராய் உதிக்கும்  (தடவும் ) அருள் !

காலத்தின் கோலம் !



பிறப்பு -இறப்பு
ஒருமுறை
ஓராயிரம் போராட்டங்கள்…!
காலத்திடம்
வயதினை ஒப்படைத்துக்
பழுத்துச் செல்கின்றன முடிகள் ..!
ஒவ்வொரு வெள்ளை முடிகளுக்குள்ளும் நகர்கின்றது
நிகழ் காலத்தின் ஆயுள்
சொந்தமாக்கிக்  கொண்டோம்
வாழ்வு
மின்னலாய் மறைகின்றது ..1
காலத்தின் கோலம் !
அவரவர் வயசு அடிப்படையில்
அவரவர் வாழ்வின் மறைவு ..!

காலத்தால் அழியாத கலை ..!




சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை 

தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப் 

பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின் 

கண்ணிரண்டும் காதற் கயல் !


சோலைக் கிளியைச்  சூவென்று நானோட்டும் 

சேலையுடுத்த   கிளி செவ்வந்தி -ஆளை 

மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள் 

நயந்தொழுகும் அவை நின்று நரை !


சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !

வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை 

இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது 

எது வென்று புரிய வில்லை ஏம !


வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை 

கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக் 

கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள் 

அருங்காதல் நெஞ்சத்து அலை !


வெடித்த வெள்ளரியின் விதை போன்ற   பற்சிரிப்பு !

கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த 

ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும் 

காலத்தால் அழியாத கலை ..!

மனதின் வலி



அந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய 
நினைவினூடே நான் நடக்கையில்
அதிசீக்கிரத்தில் மாறாது  மனதின் வலி.

அன்பின் தோழியாக இருந்த உறவின் 
நெருக்கத்தில்  இழப்பின் தாக்கம்.

நாடி நர்ம்புகளுடனே  ஓடிய  
குருதி யோட்டங்களுக்குப் 
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு 
முள்ளி வாய்க்காலில்  நான்.

தாமதமாகத்தான் தெரிந்தது அது
தாக்குதலிருந்து கசிந்து போனது 
நான் ஊட்டிய என்  சுசியுடைய 
ரத்த வாடை என்று....!

பிராத்தனை துளிகள் ..!





பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!
உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
நான்கு தோள்கள் கரம் கொடுக்க
மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..
பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்
இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்
வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..
எத்தியோப்பிய மண்ணில்
எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!

சுவர்க்கத்தின் பாதம் ..!



கருவறையிலிருந்து
கபூறறை வரை
தொடரும்உறவுஉம்மா ..!!

என் வாழ்கையின் 
சுவர்க்கத்தின் பாதம்
எ ன் உயிரின் மறு பாதி உம்மா 


கவி வடிக்க 
எனக்கு 
கரு தந்தவள் உம்மா 

ஆயுள்
சுருக்கத்தைக் கொடுத்து விட்டாய்யா   அல்லாஹ் 
என் மன -
சுமைகளையும் இறக்கிவைப்பாய் நீயே..!


இன்று அகில உலக அன்னையர் தினம். 

தாய்மைக்கு மகிழும் உலகம் போல் 
தாய்க்கு மகிழ்ச்சி அன்னையர் தினம்.
வாழ்த்துகள் வாழ்த்துக்கள் அன்னையர் எல்லோருக்கும் !

கடந்த காலங்கள்


மூச்சுக் காற்றில் 
சுவாசமாய் போய் விட்ட 
என் -
கடந்த காலங்கள் 
இன்றும் ...
என்றும் 
எப்போதும் 
இளமையானவை
பசுமையானவை 
இனிமையானவை 
மறக்கமுடியாதவை !

மரச்செடியினுள்ளே 
மொட்டாகி விட்ட என் 
வயதுப் பூக்கள் நாட்பத்தி நான்காவது 
இதழ்களை விரித்தபடி 
நாட்பத்தைந்தில் 
பழமாகின்றது
இந்த -
கோடை காலத்துப் பழங்களைப் போல 

சனி, 12 ஜூலை, 2014

எப்படி எப்படி தாங்கிக் கொள்ள ...?




ஒவ்வொரு பொழுதும்
வாழ்வா …? சாவா ..? எனும்
உள்ளத்தின் கேள்விகளுக்கு 
விடை சொல்லமுடியாமல் ,


உடம்புக்கு தெம்பூட்டி 
மருந்து  ஊட்டி 
பொறுமை  காத்து
பேனை பிடித்து எழுதும் 
நான்-
எழுத்தாள(ர்)றென்று ...!

மா கவி பாரதி



தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல   
பாவினை ஊட்டினான் மனங்களிலே 
சுவையுடன் கவி பாடினான் -தமிழ் 
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப்  படைத்தான் - கெட்ட 
சாதி பேதங்களை மாற்றினான் 
உழைத்து வாழப் பாடினான் -வீணே 
சோம்பரியாய்  கிடப்போரை விரட்டினான் 

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை 
உயர்வாய் மதித்து போற்றினான் 
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ் 
பற்றின் உயர் வினைக் கூட்டினான் 

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை 
மதித்து நின்று வாழ்த்தினான் 
மண்ணின் மாணிக்கம் அவளென்று --தினம் 
 பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு 

அடிமைத் தனத்தை சாடினான் 
நாட்டின் நடப்புக்களையும் பாடினான் 
சாவுக் கஞ்சாது எழுதினான்  -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான் 

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே 
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த 
மா கவி பாரதி விண்ணிலே ....

வேதனை



தொடரும் வியாதி 
தடவும் வறுமை 
 உயிருக்கு போராடும் உடம்பு  

கண்ணீர் பஞ்சம்
காண்பது அரிது
உடம்பில் வழியும் வியர்வைத் துளி 

உணர்த்திச் செல்கிறது
பணம் 
வாழ்க்கையில் நிறைவேறா கனவுகள்  

உள்ளத்தில்ளிருக்கும் வேதனை 
புரியாமல் வாழ்கிறார்கள்
சோதனையின் சாபம் 

யா அல்லாஹ் ...!



கருணை உள்ளமாய் என்னை படைத்தாய் 
யா அல்லாஹ்  
நன்றி செலுத்திடல்  வேண்டும் 
என் மனமாற உன்னை நினைத்து தொழுது 
 
பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம் 
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு 

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சிகள்  
தஜ்விதாய் ஓதிட  அவை மனதில் 
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில் 
 
உள்ளத்தில் வஞ்சகமில்லா அன்பு 
ரத்த நாளங்களிலே பாசத் துடிப்பு 
மெல்லிய் இதயமென என் உள்ளத்து உணர்வு  
குறை யேது மின்றியே பொழியுது 
நபி வழியே  சுவாசிக்கும் மூச்சு 
 
கருணை உள்ளமாய் என்னை படைத்தாய் 
யா அல்லாஹ்....!
நன்றி செலுத்திடல்  வேண்டும் 
என் மனமாற உன்னை நினைத்து