செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தோழியின் நட்பினால் சந்தோசம் பெற்று
அன்பாய் உறவினை வளப்போமே- கவலையின்றி
பாசமாக மனத் தரையில் நிழலாடினாலே
நேசமாய் தொடரும் அன்பு
பாசமனதிலொரு இடம் தந்து....
மேலும்மேலும் அன்பினைக்காட்டு; ஈர
நெஞ்சை நட்பினில் ஏற்று,
நோவாமல் உறவினைப் போற்று,அன்புக்
கருணைகாட்டிஉள்ளத்தை வெல்லு...!
உயிர்
உடலை விட்டுப் பிரியும்வரை
மரணம்
யாரை விட்டுப் போகும்....?
உன்
நினைவுகளால்
மூச்சுவிடுகிறேன்
நீ..என்
சுவாசமான போது....!
சகி
இப்போ
எனக்கு கவலையில்லை
காரணம்...,
உன் இதயம்
என் கரங்களுக்குள்.....!
ஓட்டிப் பிறந்த
நட்புக் கொடிக்குள்
தூய்மையான பாசத்தை
நுகர்ந்து கொள்ளும்
இந்த
சுவாசப் பூக்கள்...!
என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
உன் நிழல்...,
உன் மனதிற்கு மகிழ்ச்சி தரும்
என் அன்பு(பூ)
சகீ...,
என்
நெஞ்சில் உதைக்க்கும்
உன்..,
நினைவுகளின் தாக்கம்......!
நான் தினமும்
உன்னை நினைப்பதால்தான்
உனக்குள்
நான் நிழலாடுகின்றேன்.....
பாசத் தோழியின்
உறவுவாசம்
நாசியை...,
மெல்லத்துளைக்கும்..!

உற்ற நன்பியின்
நாவில் ஊறும் எச்சில்
வாடிய( மன) மலர்
செழிக்கும்.....!
என்
இதயம்
தேடி அலையும்
உறவு
நீ...!
சகீ
இதயம் உண்டு,
உன்னைச் சுமக்க...!

உறவு உண்டு,
துயரம் மாற்ற...!

வாய் உண்டு,
கொடுமை மறைக்க....!

அன்புக்கு இடம் உண்டு,

மகிழ்ச்சி யூட்ட...!
சகீ
என்
அன்பை
இப்போதாவது...,
உன்
இதயப் பூமியில்
நாட்டி வை
அது,
என்றாவது உனக்கு
உதவும்...!