என் தோழி
போட்டி
பொறாமை
சூது -வாது
பொய் களவு
வேஷம்
நடிப்பு
எதுவுமே அற்ற உறவு !
சத்தியமாக இல்லை
கெட்ட குணம்
அவள் மனம்
மல்லிகை வாசம் !
சுயநல வாதிகள்
சிலர் -
உலா வருகின்றார்கள்
முக நூலில்
நட்பு யென்ற
அடை மொழியில் !
கள்ளமில்லாத
என் சகீ
கருணை காட்டுகின்றாள் !
அவளிடம்
மனம் குளிர
உதவிகள் பெறுகின்றார்கள்
ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி
அதன் பின் நீ யாரோ நான் யாரோயென்று ...!
வாழுகின்றாய் -சகீ
ஏழைகள் இதயத்தை
இறைவனின்
காணலாமென்ன்று !
என்
நாவுகள் வரட்சி யாகின்றன
பாலை வனம் மட்டுமல்ல
உள்ளத்து உணர்வுகளும் !
இதயத்தின் துடிப்புகளும்
மனதின் எதிர்பார்ப்புக்களும்
உன் நினைவுகளும் சேர்ந்து .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக