ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

எப்படி படிக்க...


எப்படி சொல்வது
நாளை என்ன நடக்குமென்று
எதை எதை சந்திப்பது என்று ......?

எப்படி யோசிப்பது
யோசிப்பதெல்லாம் உண்மையாய்
நடக்கும் என்று.....?

கவிதையாவது எழுதியிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்கள் எப்படி என்று .....?.

மரணம் ஒன்றே நிச்சய வாழ்வு
என நினைத்திருந்த என்னிடம் ....

வாழ்க்கை ஒரு புத்தகமென்று சொன்னால்
எப்படி படிக்க முடியும் ?
எனக்குத் தெரியாததைப்பற்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக