வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

யா அள்ளாஹ் ..





கல்புக்குள்  ஈமானையும்
இறை நம்பிக்கைனையும் ஏற்படுத்தி வாழ்ந்தாலும்
அது
சிலரைக் கண்டு , அச்சப்பட்டு வாழ்கின்றது 

சில மனிதர்களுக்குக்
அன்பினைக் காட்டிநேசித்தாலும் 
அது- 
தீமைகளை சுமையாக்கி விடுகிறது 

மனிதனுக்கு
நல்ல ஆத்மாவை  இறைவன்  கொடுத்தாலும்
பேராசைபொய்திருட்டுகொலைகொள்ளை,களவு 
போட்டி பொறாமை ,சூது,வாது என்று  
மனத்தளவிலாவது செய்து
கபடதாரியாக இருந்து  வாழ்கின்றார்களே !


மனமோ ஏங்கித் தவிக்கின்றது யா அள்ளாஹ் !

வெள்ளி, 21 டிசம்பர், 2018

திறமைகளைப் போற்றுவோம்

திறமைகளைப்  போற்றுவோம்  
......................................................................

சிறுவர்களை  வாழ்த்துவோம்  - அவரவர் 
திறமைகளைப்  போற்றுவோம்
கல்வியிலே முன்னேறுவோம் - உயர்
கல்புடன்  வாழ்திடுவோம் .

என்றுமே  இதயத்தில்  - தினம் 
இறையருளை நாடிடுவோம்
நல்லதையே  போதித்த  - நம் 
நல்லாசானை  போற்றிடிவோம் .

சொத்தாய் சொந்தமாய்  - மன 
நிறைவாய்  நினைத்திடுவோம்
நிழலாகவே  நிழலாடிய - எம்  
பெற்றோரை மதித்திடுவோம்.

 போட்டியும்    பொறாமையும்   - இன்றி
பொறுமையை  பெறுவோம் 
பற்றும் பாசமும்  - அவர்களே  
பரிவுடனே பார்த்திடுவோம் .

புதன், 28 டிசம்பர், 2016


உயிரும் ,மூச்சும் பறக்கும் தூசு
பிறப்பு, 
வளர்ப்பு,
இருப்பு உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.
இறப்பு
எல்லாம்
அடையாளம் காணமுடியாத தடங்கள் கூட !
துயரங்களோடு நல்ல பரிச்சயம்
இது நிரந்தரமற்ற மனிதப் பிறப்பு என்பதால்
எந்த நிலத்தை பிடிப்பது
எப்படி பணம் சேர்ப்பது
யாரோடு போட்டி போடுவது
பொறாமைப் படுவது
குழி யாருக்கு தோண்டுவது
இவை எல்லாம் மனித ஆத்மாக்களின் ஆசைகள்
யார் பெற்ற பிள்ளை பொறுமையானவர்
நல்லவர்
அமைதியானவர்
ஏமாற்றாதவர்
தீங்கு செய்யாதவர்
தவறு செய்யாதவர்
அன்பானவர்
பிறரை மதிப்பவர்
உதவி செய்பவர்
இத்தியாதி இத்தியாதி
படைத்தவனுக்குத் தெரியும்.!
முக நூலில் வம்பை ஏற்படுத்துவதற்காய்
தினந்தோறும்
நெட் கபே காரரிடம்
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டால் .
அய்யாமுல் ஜாஹிலியா காலத்தை
அப்படியே கடைபிடித்திருக்கின்றான்
பிர்அவூன் வரலாற்றை படித்திருக்கின்றான்
பெண்கள் மீதுஅட்டகாசம் நடத்துகிறான்.
அப்பாவி மக்களுக்கு
தொல்லை கொடுக்கிறான்.
யார் மனசு துடிக்கின்றது
அலசிப் பார்க்கவும் தெரிகிறது.!
மழைத் துளி அவன் மீது பட்டுத் தெரித்தது
அழுக்கு அகற்றிய படி தேய்த்துக் குளிக்கிறான்.
அவனுக்கு யார்மீதும் பரிதாபம் இல்லை
அன்பு இல்லை
பாசம் இல்லை
பற்று இல்லை.
உணர்வுகளை புதைக்க
உள்ளத்தை-
தோண்ட மட்டும் தெரிந்திருக்கிறது
.
பிறப்பு
ஓர் வரமென்று
எப்படிச் சொல்ல முடியும் ?
மரணம்
ஓர் விதி என்று
யாரால் சொல்ல முடியும்??

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை


 

தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை
சுவர்க்கக் கதவின் திறப்பு !

வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை
பாவக்கறை அகற்றும் சோப்பு !

பொறுமையும் பெருமையும் தொழுவருககருக் கென்றென்றும்
பரிசாய் கிடைக்கும் ஜன்னத்துல் பிர்தொஸ் !

ஓதாமல் இருக்கும் மனமே பாழ்வீடு
சுட்டு எரிக்கும் நெருப்பு !

போட்டி பொறாமை கெ ட்டவர்களுக் கெப்போதும்
நல்ல பாம்பின் அழகு !

பொழியும் இறையருள் நினைக்காமல் கிடைக்கும்

மாணிக்கத்துக்கு கேற்ற மதிப்பு !

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!





நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள் ...!
இரவின் மறைவில்
விடியலின் உதிர்ப்பில் 
மருந்தும் கையுமாய்
எழுந்தும் எழும்பாத
நிலையில் நாம் ..!

உள்ளத்து உணர்வில்
விண்ணும்,மண்ணுமாய்
இடியும் மின்னலுமாய்
கடலும் அலையுமாய்
இன்னும்.இன்னுமாய் ..
நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள்
கொஞ்சம் மனதில்
வேதனைத் துளிகள் ...!
காலையும், மாலையும் நகரும்
வைத்தியர்களுடனும் தாதிகளுடனும்.
குடும்பத்தாருடனும் ,பார்வையாளர்களுடனும்
அனுதாப் பேச்சுக்களுடனும்.!
பிறப்பின் விதையில்
மரணப் பயிர் -முளைக்கிறது.!
போட்டிப் பூக்களும் பொறாமைப் பூக்களும் ,
வஞ்சகக் பூக்களும் ,
சூது வாதுப் பூக்களும் , பலவண்ண
குனப்பூக்களும் , பேய்களும்
பிசாசுகளும்
என் படுக்கையைகிழித்து
ஏளனமாய்ச் சிரிகிறது.!
மனதுக்குள்
விதி சதியாய் மாறிப்
போராடுகிறது.!
வாழ்வில்
துன்பங்களும், துயரங்களும்
மட்டுமே
கவலையின்றிச்
உடம்பினைச் சுமக்கின்றது !

அல்லாஹ்வே அருள்




மனதில் மகிழ்வும் முகத்தில் சிரிப்பும் 
மண்ணில் அமலும் மறுமையில் நன்மையும் 
பெறும் படியாய் நல்லருள் தருவாய் 
பொழிவாய் அல்லாஹ்வே அருள் !

புனிதம் மணக்கும் ஹஜ் ..!


மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!
பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !
இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !
சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே
ஆடைகளை புதிதாய் பூண்டு
அகந்தனில் மகிழ்ச்சி பூண்டு
வாழுவோர்க் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே !
ஸம் ஸம் தண்ணீரை மாற்றி
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ ந்திடும் ஹஜ்ஜே வாழி ..!