வியாழன், 25 ஜூலை, 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம் ......!பல
இதயங்களின்
கலை தாகத்துக்காய் ....
நான்
நடத்திவரும் தடாகம் !

சில -
உள்ளங்களின் உணர்வுகளை
கவிதை அழைப்புக்களால்
வரவேற்கின்றேன் ...!

என்
தடாகத் தாமரை
இதழ்களின் எண்ணிக்கைகளுக்கு
பல வேர்கள் !

எங்கள்-
இலக்கிய பயணத்துக்கு
பல தசாப்தங்கள் !

இந்த ஆண்டுக்குள்
நம் -
கவிதைப் போட்டிகளில்
எத்தனை கவிஞர்கள்
வெற்றி பெற்றார்கள் !
மகிழ்ச்சி அடைந்தார்கள் !!


மலிக்கா பாறுக்,
ஆயிஸா பாறுக்,
கவியன்பன் கலாம் ,
முத்துப் பாலகன்,
கலாநெஞ்சன் சாஜஹான்
கலைமகன் பைரோஸ்,
ராசகவி ராஹில்,
ஷைலஜா ராகவன்,
அத்தனை கவிஞர்களும்
கவியருவி
கவீத் தீபம்
பட்டங்கள் பெற்றனவே
அல்லாஹ்வின் நல்லருளினால் !

கரங்களினாலல்ல
சிந்தனைகளினால் கூட

காலமெல்லாம் -
எழுதும் எழுத்து வரிகளை
விமர்சனம்
செய்யமுடியாத
பரிதாப நிலை

பொறாமை யுள்ளங்களில்
பொறுமை
வரும் வரையில் தானே ?

இலக்கிய உலகில்
சந்தோசத்தை விட
துன்பங்களைத் தான்
அதிகம் அதிகமாய்
நாம் கலையுலகில்
கை குலுக்கியுல்ளோம்!

இன்னும் இன்னுமாய்
எப்படி
பொறாமையுள்ளங்களுக்கு
பொறுமையை
கற்றுக் கொடுப்பது
உள்ளத்தை தொட்டு காட்டுவது ?

கலை ஆத்மாக்களே ......

இந்தஎழுத்துலகம் -
எழுதும் எழுத்தாளர்களுக்கு
திறமை அந்தஸ்து
மட்டும் கொடுக்கட்டும் !

வாசகர்களின்
சம்மதங்களுடன் !

சந்திக்கின்றேன்
தடாகத்தின் வளர்ச்சிக்காய்
ஒரு-நிஜத்தின்
பயணத்துக்காய் (யாத்திரைக்காய் )!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக