திங்கள், 8 ஜூலை, 2013





முக நூலில் 
புதைந்து விட்ட
என் -
காணாமல் போன காலங்கள் !

என்றும் ....
இன்றும் ....
எப்போதும் ...
இனிமையான வை
இளமையான வை
இதயமான வை


நட்பு உறவுக்குள்ளே
நுழைந்து விட்ட-என்
மூச்சுக் காற்றின் நகர்வுகள்
மூன்றாம் வயதைத்
தாண்டியபடி
நான்(ங்)கில்
அமர்கின்றது
என்னுள்ளத்தைப் போல !

எனது
இந்தமூன்று வருடங்களில்
இந்த ''முக நூல் உறவுகள் ''
என்னை -
அடையாளம் கண்டு கொண்டது !

என் -
கலை உலகத்தைப் போல் !
என் இலக்கிய பயணத்தைப் போல் !!
என் இதயத்தின் நாடி நரம்புகளைப் போல் !!!
மூச்சுக் காற்றைப் போல் !!!!
கவி ஊற்றைப் போல் !!!!!

வாழும் காலங்களில்
எனக்கு -
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மனமில்லாத
உறவுகளைப் பெற்றுத்தா !

போட்டி
பொறாமை
சூது -வாது
வஞ்சகம்
முன் ஒன்று பின்னொன்று பேசாத
உறவுகளைப் பெற்றுத் தா

என்னை நேசித்த
நான் நேசிக்கின்ற
உறவுகளுடன்
வாழுகின்றேன்
என்றும்
எப்போதும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக