புதன், 17 ஜூலை, 2013

                                     
பெண்களை நோவித்தபடி 
கருத்துக்களை -
பித்தனாய் எழுதிய படி (போட்டபடி )
முக நூலில் 
பவனி வரும் ராஜாக்களே ....!

நட்பில்லா உறவுக்குள்
நுழைய முன்
உங்களுடன் -
மான மரியாதையையும்
உயர் லட்சிங்களையும்
உடுத்திக் கொள்ளுங்கள் !

முக நூல் மூலம்
பெண்களின் எழுத்துக்கள் -
உயர்வுகள்
மதிப்புக்கள்
புகழ்சிகள்
பாராட்டுக்கள்
இத்தியாதி இத்தியாதி
சில-ஆண்களால்
ஏன்
தாங்கிக் கொள்ள முடியாது உள்ளது ?

அவர்களின் ஊடுருவல்
கருத்துக்கள்
எழத்துக்கள்
நாகரிக மற்ற போர்வையில்
ஏன் -
அசீங்கமாகிக் கொண்டு உள்ளது ?

அது
நல்லவர்களையும்
தழுவாமலிருக்கட்டும் !

நாளையெம்
பெண்களின் எழுத்துக்கள்
ஏவுகணையாய் வெடிக்கும் வேளை
பதர் யுத்தத்தை நினைக்கவும்
பிறைக் கொடிகளை சுமக்கவும்
ஓராயிரம் இதயங்கள்
தயாராகி நிற்பார்கள் !

ஒரு -
அன்னை ஆயிஷாவாய் !
அன்னை பாத்திமா சஹ்ராவாய் !!
அன்னை ஆமினாவாய் !!!
அன்னை கதீஜாவாய் !
உலக பிறப்பில்
உங்களை நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள் !

அதில் வளர்வது

என் எழுத்துக்களாகவும் இருக்கலாம்!

அல்லாஹ்வின் அருளாகவும் இருக்கலாம்!!

அண்ணலாரின் போதனைகளாகவும் இருக்கலாம்!!!

ஈமான் கொண்டோரின் நன்னோக்காகவும் இருக்கலாம் !!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக