செவ்வாய், 30 ஜூலை, 2013

புனிதத் திங்கள்......!



மாண்புடன் பொலியும் ''ரமழான் ''
மாதமோ ''ரஹமத் '' தாகும்
நீண்ட நாள் பாவம் யாவும்
நீக்கிடும் புனிதத் திங்கள் !
பூண்டிடும் தர்மக் கொள்கை
பூமியில் மலியப் பண்ணும்
ஆண்டியோ டரசன் சேரும்
அறத்தினை வளர்க்கும் மாதம் !

வஞ்சகம் பொய்மை மாந்தர்
வாழ்வினை அழிக்கும் சூது
நஞ்செனும் செயல்கள் யாவும்
நலமுடன் அறவே நீக்கி
நெஞ்சினில் அன்பு பாசம்
நிறைந்து மே மாந்தர் யாவும்
ஒன்றென மறையோன் வேதம்
ஓதியே வாழும் மாதம் !

ஆயிரம் இரவில் காத்து
அருந்தவம் புரிந்து ஈற்றில்
நேய (இ )ரா ''லைலத்துல் கத்ர் ''ரில்
நிலமிசை அருளாய்ப் பொங்கும்
தூயதாய் துன்பம் நீங்கித்
துலங்கிடும் ரமழான் தன்னை
நேயமாய் வருக வென்றே
நெஞ்சினால் வர வேற்கின்றோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக