வியாழன், 25 ஜூலை, 2013

திருமண நாள் நினைவுகள் வாழ்த்துக்களாக உறவேநீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்

நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் - என்னை மறவாது

"செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ்வீர்...!

என வாழ்த்தும்
குறையா அன்பில் உங்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக