செவ்வாய், 30 ஜூலை, 2013
தந்தையாம் ! நோய்கட் கெல்லாம்
சந்தேகம் !உண்மை ,நல்ல
சிந்தைகள் கூட இஃதால் !
சிதைந்திடும் !சிதறிப் போகும் !
நோந்தழும் நிலை யுண்டாகும்
நோய் நொடி கூடச் சேரும் !

மனைவியின் மீதும் !கொண்ட
மாண்புறு கணவன் மீதும் !
இணையில்லா நண்பர்க் குள்ளும்
இது வரின் !துயருன்டாகும் !
அணைந்து போகும் உறவுத் தீபம்
அவலமே !வந்து சேரும் !

சொந்தமாய் எழுதி நன்கு
சுடர் விடும் !பெண்ணைக் கூட !
சந்தேகம் கொண்டு !யாரோ
தருகிறார் !எழுதி என்றே !
''சிந்தனை''செய்து மாளும் !
சிற்றறி வாளர் உண்டு !

சத்தியம் கூட இந்தச்
சந்தேக நெருப்பின் முன்னே
நிச்சமாய் உருகித் தேயும்
நீரிலும் நெருப்பு மூளும் !
இத்தனை !கொடிய நோயை
அல்லாஹ்வே !துடைத்து நீக்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக