வியாழன், 25 ஜூலை, 2013

வாலிக்கு - என் - துளி...!



கலையுலகை செதுக்கிய
கவிச் சிற்பியே ...!.

பா விதைக்கு நீரூற்றிய
வாலியெனும்
வாளியே......!

புனிதம் நிறைந்த
ரம்லான் மாதம்
உலகை விட்டு நீ
பிரிந்து விட்டாய்
என்ற காற்று
இதயத்தை -
தடவியிய வேளையில்
குருதிகள் தடைப்பட்டு
உள்ளம் ஈரமடைந்தன !

உன் -
பிரிவின் வேதனைகளால்
கலை ஆத்மாக்களின் இதயங்களில்
கண்ணீர் அலைகள்

மூச்சுக்களின் சுவாசங்களில்
(வாலியின்) வலியின் ரணங்கள்

கவித் தேசங்களில் !
கறுப்புக் கொடிகள்!!
எழுத்துக்களில் அஞ்சலித் துளிகள் !!

கவியின் சுடர்
உன் திசையில் தான்
உதயமாகின்றன !து

சந்தோசம் நிறைந்த
இனிய பொழுதுகளில்
எங்கள்விழிகளுக்குள்
கண்ணீரை -
நிறப்பி விட்டாயே !

திரையுலகம் கனவு கணட
இரு கண்கள் (மணி -வாலி)
உலகத்தை விட்டு
இழந்து போய் விட்டது!

கவி வரிகளுக்கான
உன் புகழ்-
இனி வரும் காலங்களில்
வள்ளுவன்
இளங்கோ
கம்பன்
பாரதி
உமறு
பாரதி தாசன்
புலவர்மணி
வரிசையில் இணைந்து விடும் !

உன்-
மூசுக்களை உரிஞ்சிய (விழுங்கிய )
இறப்பின் இரைப்பைக்குள்
எங்களின்-
ஆத்மாக்களும்
வந்து சேரவுள்ளன !

அழுது புரண்டாலும்
உலகில் நிறந்தரமாய் வாழப் போவதில்லை!
தொழுது இறைஞ்சினாலும்
உயிரோடு பிழைத்திருப்பதில்லை !!

வானம் போல்
காற்றைப் போல்
நிலவைப் போல்
நிலத்தைப் போல்
கடலைப் போல்
நிலைத்திருக்கப் போவதில்லை !

ஆனாலும்
நீ
இறந்தாலும் -பிரிந்தாலும்
நீ படைத்த பாடல்கள்
இறக்காதய்யா !!
உன் கவிதையை
கலையுலகம்
மறக்காதய்யா !!

உன் -இழப்பு
ஒரு உயிரின்
இழப்பு (பிரிவு )மட்டுமல்ல
எங்கள்
இதயத்தின் (உதயத்தின் )இழப்பு !
கலை யுகத்தின் பிரசவ மறுப்பு !!

கவிகளின் இதயம்
நீ -
கலையுணர்வுடனே
காலமாகி விட்டாய் !

இறைவனுக்கு நிகர் உலகில் எதுவுமே இல்லை !
அவனின்றி எதுவும் நடக்காது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக