சீதனம் எதுவும் மில்லை !
சீரமைக்கு பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
பேதையவள் வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரணும் இல்லை !
கல்வியும் கற்றவள் -நல்ல
கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
சொல்லினில் தெளிவு கொண்டவள்
சுய நலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் அவளை
நாடியே வரவும் இல்லை
குடிசை தான் வாழ்க்கை
கோபுரம் அவள் உள்ளம்
நடிகையை வாழ்வில் மாறும்
நரித் தனம் எதுவும் இல்லை
அடிமையாய் அவளை அன்பால்
ஆண்டிடத் துணைவன் வேண்டும் !
அந்நிய நாட்டுக் அவளை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக