சனி, 28 பிப்ரவரி, 2015



உன் உயிரில்,
உன் உறவில்,
உன்சுவாசத்தில் ,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால்
யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக !

அவள்
மனசு எனக்கு தெரியாது
என் மனசு
அவளுக்கு தெரியாது
ஆனாலும் -
"ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகளாய்"


கருவில் வளர்ந்து கல்பில் நிறைந்து
அன்னையின் வடிவமாய் அப்படியே இருக்க
உயிரும் உள்ளத்தின் உணர் வுகளுமே
கண்ணில் காணும் கனவு !

அன்பின் மனசு காட்டுவது அருட்கொடை!
உள்ளத்தின் உணர்வும் வரமாகி உயிரும்
உண்மையின் பேரெழில் ! உத்தம நண்பியை
இதயத்தில் வைத்தே இரு.

அன்புகாட்டும் பாசமிகு அண்ணியை உள்ளத்தினில்!
அணைத்தேன் அம்மாவைப் போல் அப்படியே -துள்ளும்
இதயத்தில் பாசத்தை ஊட்டினேன் உள்ளக்
கதவும் திறந்தது கண்டு

அத்தான் ..என்றலருகிறாள் அனீதா
அவனோ டுபா(ய்)யினிலேவானாள்
எத்தனையோ கனவுகளை
இதயத்தில் சுமந்த இவள்
பித்தானாய் வாழ்வு இனி வீணாள் !

முன்னேற்றப் படியை மூடிவிடும் பகை
விளையாடும் விதியை விலக்கிடத் துடிக்கும்
அறிவை ! அதையும் அழகாய் காட்டும்
கல்வியை போதிக்கும்குரு சுடர்.

நலமே செய்யும் உருவங்கள்!



காட்டில் வாழும் மிருகங்கள்
கயமை செய்யா உருவங்கள்!
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்!
ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலி(ல்)லை !
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
கானல் கூட அரிதாகும்!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கருமை நெஞ்சத் திலுமில்லை!
காட்டில் ஒன்றைக் கூடிவரும்
உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....

கையெழுத்து! தலையெழுத்து!



பிச்சை போட வேண்டாம்!
புகழ் தேட வேண்டாம்!
ஏழை எளியோரை நினைத்துப் பாருங்கள் – அந்த
அல்லாஹ்வே உங்களுக்குத் துணையிருப்பார்!
இருப்பதை வைத்துச்
சிறப்பாய் வாழ்வோம்
இறைவனை வணங்கி!
நிம்மதியாய் இருப்போம்
போட்டி பொறாமை
சண்டை சச்சரவு
இவையெல்லாம் எதற்கு?
மனதிலே விஷமென்றால்
எதற்கு மனிதாபிமானம்?
மனதில் நச்சுத்துளி கலந்து
சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப்
பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?
மனமும் உடலும் கருகிய பின்
குடும்பம் இருந்து என்ன பயன்?
சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு
வேடிக்கை பார்த்து என்ன பயன்?
உறவே சீரழிந்த பின்
பணமும் பிணமும் எதற்கு?
எழுத்தில் எல்லா வரிகளும்
தலைக்கனம் நோக்கிப் போகிறது!
உடலும் உள்ளமும் ஊனமுற்றே
வாழ்வு வீணாய்ப் போகிறது…
கையெழுத்து
நன்றாகயில்லையெனினும்
பரவாயில்லை – தலையெழுத்து
நிம்மதியாக அமைய
வழிகாட்டுங்கள்…!
ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல
ஒரு இனத்தின் வேதனை…!


அன்னையின்அன்பே அணைத்திடும் ஆத்மாவின்
அரவணைபாம்:தொப்புள்கொடிஇணைதல் அருளாம்:
அழுகின்ற சிசுக்கு கொடுக்கின்ற பால் .


மரணத்தை நாடிப் பிறந்தவர்கள்
நாம் -
வாழப் பிறந்தவர்கள் அல்ல
இதயம் உண்டு 
எதையும் சுமக்க
வாய் உண்டு
கொடுமை மறைக்க
மானம் உண்டு
மரியாதை காக்க
உள்ளம் உண்டு
அன்பை சுமக்க
அச்சம் உண்டு
இறையை வணங்க
எல்லாம் இருந்தும் ஏது பயன் ..?
உயிர் அற்றுப் போகும் உடம்பாச்சே
உடலை விட்டுப் போகும் உயிராச்சே ..!


என் தாயே ,
என்னை நீங்க பார்க்க வராவிட்டாலும்
நான் -
உங்களை பார்க்கவரலாம் தானே ?
நீங்க
சென்ற இடத்தை ,
நானும் வந்து தரிசிக்க முடியுமென்பதை
புரிந்து கொண்டேன்
தாயே -
நீங்க சென்ற பயணம் திரும்பி வரக்கூடாத பயணம் தான்
ஆனாலும் -
விரும்பக் கூடாத பயணம் அது


சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும் !அறிவீரோ ?
என்றும் வாழ்வுதனை
எழிலாய் அமைத்துவிட
நன்றாய்த் தொழில்செய்தல்
நலமாகும் !அறிவீரோ ?
அல்லும் பகலிலும் நீ
அயரா(து )உழைப்பதனால்
தொல்லை பல நீங்கும்
துயரம் பரந்தோடும் !
கொள்ளை கொலைசெய்யும்
கொடூர மனபாங்கு
உள்ளத்தைநாடா(து)
உயர்வு தேடி வரும் !
வறுமை அகன்று விட
வாழ்வுசிறந்து விட
பெருமை வாழ்வில்வர
பொறுமையோடு உழை !
துணிவுகொண்டு உழை
சுறு சுறுப்புஅடை
கனியும் வாழ்வு -ஒரு
கனியாகி மணக்கும்