சனி, 28 பிப்ரவரி, 2015

கையெழுத்து! தலையெழுத்து!



பிச்சை போட வேண்டாம்!
புகழ் தேட வேண்டாம்!
ஏழை எளியோரை நினைத்துப் பாருங்கள் – அந்த
அல்லாஹ்வே உங்களுக்குத் துணையிருப்பார்!
இருப்பதை வைத்துச்
சிறப்பாய் வாழ்வோம்
இறைவனை வணங்கி!
நிம்மதியாய் இருப்போம்
போட்டி பொறாமை
சண்டை சச்சரவு
இவையெல்லாம் எதற்கு?
மனதிலே விஷமென்றால்
எதற்கு மனிதாபிமானம்?
மனதில் நச்சுத்துளி கலந்து
சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப்
பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?
மனமும் உடலும் கருகிய பின்
குடும்பம் இருந்து என்ன பயன்?
சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு
வேடிக்கை பார்த்து என்ன பயன்?
உறவே சீரழிந்த பின்
பணமும் பிணமும் எதற்கு?
எழுத்தில் எல்லா வரிகளும்
தலைக்கனம் நோக்கிப் போகிறது!
உடலும் உள்ளமும் ஊனமுற்றே
வாழ்வு வீணாய்ப் போகிறது…
கையெழுத்து
நன்றாகயில்லையெனினும்
பரவாயில்லை – தலையெழுத்து
நிம்மதியாக அமைய
வழிகாட்டுங்கள்…!
ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல
ஒரு இனத்தின் வேதனை…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக