புதன், 26 ஜூன், 2013"பொறாமைப் படுபவர்கள் தன்னைப்பற்றி சிந்திப்பதில்லை 

நல்லோர்கள் மனசை அவர் கள் புரிந்து நடப்பதுமில்லை "


மனித நேயம் செத்து விட்டது மண்ணில் -ஆனால் !

மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள் உலகில் !!

அண்ணல் நபி பெருமானார்
மக்கத்து மண்ணில் பிறந்தே -நல்ல 
மார்கத்தை வளர்தனன் மனங்களிலே !
நேயமுடன் போதனை ஊற்றினான் -படு 
பாவிகளை அன்பினால் மாற்றினான் !

இஸ்லாத்தை உலகில் பரப்பினான் -கொடும்
அடிமைத் தளையினை உடைத்தெரிந்தான்!
கூலித் தொழிலை மதித்தான் -வீணே
உண்டு மகிழ்வோரைத் தடுத்தான் !

கெட்ட குணங்களை விரட்டினான் -அல்
குர் -ஆணை ஓதிக் காட்டினான் !
இவ்வுலகை :விதை நிலமென்றான் -மறுமை
அறுவடையின் மகிழ்வினை சொன்னான் !

பெண்ணின் அருமையினை விளக்கினான் -பூவையரை
வாடிடாது காத்திடக் கூரினான்!
மண்ணில் அவளொரு மாணிக்கம் -உயர்வாய்
மதித்து காத்திடக் கூ ரினான் மாந்தற்கு !

சாதி மத பேதங்களை வெறுத்தொதிக்கினான் -நீதி
நேர்மை நியாங்களையும் மதித்து நடந்தான் !
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிடாது வாழ்திட்டான் -மனித
மனங்களின் அன்பினை வென்றிட்டான் !

அண்ணலை மதித்து நடப்போமே -இனிய
அருள் கிடைக்கும் எமக்குமே !
அருள் மறை ஹதீஸ் இரண்டும் மனிதரிடமே -அமல்களின்
சுவர்க்கம் நரகம் அல்லாஹ் ஒருவனிடமே !துயரத்தின் நெருப்பு அனலாய்பட்டுத் தெரிக்கும் மனசுகளில் 
மௌனம் -
தலை விரித்து கோலமிடும் !
கோலமாடும் !!
கோலம்போடும் !!!

உள்ளத்தின் உணர்வுகள்
ஆசைகள்
எதிர்பார்ப்புக்கள்

நிம்மதியை
சந்தோசத்தை
அமைதியை
நொறுக்கி வீசியபடி

மனக் கஷ்டத்தால்
துயரச் சுமைகளால்
வேதனைத் தழும்புகளால்
இதய விழிகளினால்
அழுது தீர்க்கும்
வடித்துக் கொட்டும் !

நிலையற்ற உலகில்
நிச்சயமற்ற வாழ்வில்
எதிகாலம் -
கேள்விகளாய் தொடரும்
விடையற்றுப் போகும் !

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதால்

வாழ்வே -
அகதியானதால்
முகாம்களின் வரவேற்பு
கண்ணீரை தணலாக்கும்
தணலை குருதியாக்கும் !!

அப்பாவி முகங்கள் (வயிறுகள் )
வறுமை கொடுரத்தால்
ஊமையாகிப் போகும் !

பிரயோசனமற்ற வாழ்வை
முதலாளித்துவம்
விரும்மி நேசிக்கும்
ரசித்து மகிழும் !

சமூக அரங்கில்
அகதிகள் தினம்
போற்றப் படுபவர்களால்
நினைவு படுத்தப்படும்

சுரண்டி வாழும்
மனம் -
ரசித்துச் சுவைக்கும்

அட்டை இதயங்களால்
உயிர் குருதி -
உறிஞ்சிப் போகும்

வாழ்க்கையோ
சிவப்புச் சாற்றினால்
சிதறித் தெறிக்கும் !

சடலமான (சவமான )ஆத்மாக்களின்
உயிர்கள் -
இரங்கல் உரைகலாகும்
ரூபங்கள் பிம்பமாகும் !

நாய்
நரி
காகம்
பேய்
பிசாசு
கொசு
எறும்பு
இத்தியாதி
இத்தியாதி

இவைகளுக்கு
சடலங்கள் உணவுகளாகி !

சுதந்திரத்தை புதைத்தபடி
நிம்மதி தொடர்வதாய்
வானலைகள் -
போலிக் கீதம் பாடும்
செய்தி சொல்லும் !

அகதி மனிதம் -
நிவாரணப் பொட்டலங்களின்றி
மாறும் வரை
இங்கே -
அகதிகள் தினம்
மன ரணங்களால் பதிவாகும்

வேதனைகள் -
சோக கீதங்களாய் ஒலிக்கும்!

தரித்ததிரம்
சரித்திரம் சொல்லும் !

வறுமை பூமியில்
விதை நிலமாகும் !


சிந்தனையை உருவாக்கி ஏட்டில் 

கவி யெழுத உட்கார்ந்தேன் 

வீட்டில் உப்பில்லை புளியில்லை 

உணவுக்கு வழி காணத் துப்பில்லை 

என்றால் பெண்டா ட்டி !மச்சான் என்றலறுகிறாள் மச்சி 

அவனோ லண்டனிலே வானான் 

எத்தனையோ கனவுகளை 

இதயத்திலே சுமந்த இவள் 

பித்தானால் வாழ்வு இணி வீணாய்இதயத்தை பசுமையாக்கி உறவில் 

அன்பினைபெற காத்திருந்தேன் 

நட்பில் புரிவில்லை நம்பிக்கையில்லை 

தொடர்புக்கு பயன்பெற வசதியில்லை 

என்றால் தோழி !
!காவியம் நோக்கி எழுதும் கவிஞர் விருது 

கொடுக்கக் காத்திருக்கும் தோழி -மனதில் 

பாசமிகுந்த அன்பு நிறைந்து சுரந்தது 

சிறப்பு அதுவே மகிழ்வு!


உள்ளங்களை நோவிப்பது கொடுமை 
நேசித்து வாழ்வது மனிதரெங்கள் அருமை 
உலகினில் அன்பு ஒன்றுதான் 
உள்ளப் பூட்டின் திறப்பு -பாசக் 
கதவு திறந்திருத்தல் சிறப்பு !

முக நூலில் எதிர்பாராத உறவுகள்
ஒரு யுக கவிஞனின் 
நட்பு வெளியீடு! 

வானம் -
குடைவிரிக்கும் இந்த 
மந்தாரமான நேரம் 
உன் ஞாபகங்களால் 
இதயமெல்லாம்
மேகக் கூட்டம்

கொதித்தலரும் சூட்டையெல்லாம்
குளிராக்கும்
உன் இனிமையான நினைவுகளின்
சுவாச மூச்சு
என் நாடி நரம்புகளில்
நிறைந்து ஓடுகிறது !

உள்ளத்து உணர்வுகளுடன் !

இதய நட்பு வேரின்
ஒற்றைப் பூவே

சோகம் சுமக்கும்
வேதனைச் சுமையின்
ஆத்ம திருப்திக்காய்
கவி வரிகள் எழுது!
மனம் திறந்து பேசு!!

தாய்மண் மட்டுமல்ல
உடன் பிறப்பு மட்டுமல்ல
நீங்களும் எனக்கு
இங்கே -
நேசம் தான் !
பாசம் தான் !!
சொந்தம் தான் !!!
உறவும் தான்!!!!

என் உயிர் மூச்சில்
நீ
சுவாசமாக இருப்பதனால் !
சீதனத் தென்றலாய் 
சித்திரத் தேராய் 
பெண்மை நலங்கள் 
பூத்துக் குலுங்கினும் 
சீதனச் சந்தையில் 
வரதட்சனைத் தராசில் 
நிறுத்துப் பார்க்கும் 
வக்கிர மனங்கள் 
தெரு நாய் கழுத்தில் 
சீதனச் சத(ல)ங்கை 
ஒழிக்க
டீ வீ -காணி
வீடு வளவும்
மின் விசைப் பொருளும்
தாங்கி வந்தால்
தழுவிக் கொள்ளும் !


தமிழிடம் உருவம் உண்டாம் 

தமிழிடம் ஓசை உண்டாம் 

தமிழிடம் வளங்கள் உண்டாம் 

தமிழிடம் வரலாறு உண்டாம் 

தமிழிடம் வீரம் உண்டாம் 

தமிழிடம் காதல் உண்டாம்

தமிழிடம் பாடல் உண்டாம்

தமிழிடம் கவிதாயினிகளும் உண்டே !தமிழினைத் தாயம் என்பார் 

தமிழினை அமுதாம் என்பார் 

தமிழினை விழியாம் என்பார் 

தமிழினை உயிராம் என்பார் 

தமிழினை பழசாம் என்பார் 

தமிழினைப் புதிதாம் என்பார்

தமிழினை இனிதாம் என்பார்

தமிழினை எளி தென்பாரே