துயரத்தின் நெருப்பு அனலாய்பட்டுத் தெரிக்கும் மனசுகளில்
மௌனம் -
தலை விரித்து கோலமிடும் !
கோலமாடும் !!
கோலம்போடும் !!!
உள்ளத்தின் உணர்வுகள்
ஆசைகள்
எதிர்பார்ப்புக்கள்
நிம்மதியை
சந்தோசத்தை
அமைதியை
நொறுக்கி வீசியபடி
மனக் கஷ்டத்தால்
துயரச் சுமைகளால்
வேதனைத் தழும்புகளால்
இதய விழிகளினால்
அழுது தீர்க்கும்
வடித்துக் கொட்டும் !
நிலையற்ற உலகில்
நிச்சயமற்ற வாழ்வில்
எதிகாலம் -
கேள்விகளாய் தொடரும்
விடையற்றுப் போகும் !
அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதால்
வாழ்வே -
அகதியானதால்
முகாம்களின் வரவேற்பு
கண்ணீரை தணலாக்கும்
தணலை குருதியாக்கும் !!
அப்பாவி முகங்கள் (வயிறுகள் )
வறுமை கொடுரத்தால்
ஊமையாகிப் போகும் !
பிரயோசனமற்ற வாழ்வை
முதலாளித்துவம்
விரும்மி நேசிக்கும்
ரசித்து மகிழும் !
சமூக அரங்கில்
அகதிகள் தினம்
போற்றப் படுபவர்களால்
நினைவு படுத்தப்படும்
சுரண்டி வாழும்
மனம் -
ரசித்துச் சுவைக்கும்
அட்டை இதயங்களால்
உயிர் குருதி -
உறிஞ்சிப் போகும்
வாழ்க்கையோ
சிவப்புச் சாற்றினால்
சிதறித் தெறிக்கும் !
சடலமான (சவமான )ஆத்மாக்களின்
உயிர்கள் -
இரங்கல் உரைகலாகும்
ரூபங்கள் பிம்பமாகும் !
நாய்
நரி
காகம்
பேய்
பிசாசு
கொசு
எறும்பு
இத்தியாதி
இத்தியாதி
இவைகளுக்கு
சடலங்கள் உணவுகளாகி !
சுதந்திரத்தை புதைத்தபடி
நிம்மதி தொடர்வதாய்
வானலைகள் -
போலிக் கீதம் பாடும்
செய்தி சொல்லும் !
அகதி மனிதம் -
நிவாரணப் பொட்டலங்களின்றி
மாறும் வரை
இங்கே -
அகதிகள் தினம்
மன ரணங்களால் பதிவாகும்
வேதனைகள் -
சோக கீதங்களாய் ஒலிக்கும்!
தரித்ததிரம்
சரித்திரம் சொல்லும் !
வறுமை பூமியில்
விதை நிலமாகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக