புதன், 26 ஜூன், 2013

முக நூலில் எதிர்பாராத உறவுகள்




ஒரு யுக கவிஞனின் 
நட்பு வெளியீடு! 

வானம் -
குடைவிரிக்கும் இந்த 
மந்தாரமான நேரம் 
உன் ஞாபகங்களால் 
இதயமெல்லாம்
மேகக் கூட்டம்

கொதித்தலரும் சூட்டையெல்லாம்
குளிராக்கும்
உன் இனிமையான நினைவுகளின்
சுவாச மூச்சு
என் நாடி நரம்புகளில்
நிறைந்து ஓடுகிறது !

உள்ளத்து உணர்வுகளுடன் !

இதய நட்பு வேரின்
ஒற்றைப் பூவே

சோகம் சுமக்கும்
வேதனைச் சுமையின்
ஆத்ம திருப்திக்காய்
கவி வரிகள் எழுது!
மனம் திறந்து பேசு!!

தாய்மண் மட்டுமல்ல
உடன் பிறப்பு மட்டுமல்ல
நீங்களும் எனக்கு
இங்கே -
நேசம் தான் !
பாசம் தான் !!
சொந்தம் தான் !!!
உறவும் தான்!!!!

என் உயிர் மூச்சில்
நீ
சுவாசமாக இருப்பதனால் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக