ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மழை பொலியாத வரண்ட பூமியில்
தென்றலுடன் மோதிக்கிளம்புகின்ற
புழுதியை நுகர்ந்தவாறு:
வரண்டு தவிக்கும் நாவுடன்
நகர்ந்து செல்கிறேன் !

உச்சி வெயில் பொழுதில்
நீர் ஊற்றுக்களாய் வடியும் வியர்வைகளோடு
தோனி வலை கைறுகளையெல்லாம்
கரையோரத்தில் நங்கூரம் விட்டு விட்டு :
வீ ட்டை நோக்கி நடக்கிறேன் !

மீன் படாத சோகத்தில்
பதறியழும் -
வயிற்றுப் பசியினைப் போக்கிடவென்று
குரும்பை ஒன்றை பறிக்க முனைகிறேன்...!

செழிப்பு வராத வறுமைக்குள்
உதிரும் மரக் கிளைகளாய் வாடி வதங்கி
பாலைவனமாகிப்போன
வரண்ட சஹாராவில்ஓடி ஓடி
ஹஜராவாய் நீர் தேடுகின்றதொரு
உணர்வு....
இரவைப் போல் அமைதியாய் இருந்து பார் ...!
சூரியனைப் போல் சுடராய் வாழ்ந்து பார் ...!.!!
ஏசி திருத்தும் ஆணை நம்பு ...!
போற்றிப் புகழும் ஆணை நம்பாதே ...!!
தூய நட்பு சுகம் தரும் ...!
அசுத்த நட்பு நோவினை தரும் ...!!
நன்மைக்காக வாதாடுவோம் ...!
தீமைக்காக போராடுவோம் ...!!
மொழிகளால் நட்புள்ளங்களை பிரிக்காதே ...!
பொறாமையால் உறவுகளை அழிக்காதே...!!
இன்பங்களை நினைத்து வாழ் ...!
துன்பங்களை மறந்து போ ....!!
நல்லவற்றை மனைவிற்கு செய்து காட்டு...!
மனைவி போற்ற வாழ்ந்து காட்டு...!!
நல்லதை கொண்டு தா ..!
கெட்டதை கொண்டு போ ...!!
அறிவைத் தா ...!
அழிவைத் தராதே ..!
அன்பை வளர்த்துக் காட்டு ...
ஆசையை வளர்த்துக் காட்டாதே ..!!
கல்வியை கற்றுத் தா ...!
களங்கத்தை கற்றுத் தராதே...!!
நல்ல சிந்தனையை தா ...!
தீய சிந்தனையை தராதே....!!
சந்தோசத்தை மனதில் வை ...!
துக்கத்தை மனதில் வைக்காதே ..!1
வேதனை நிறைந்த இதயம் _
சந்தோஷம் இழக்கும்....
நட்புகள் உரிமை பெற்றே
வேதனை சுமக்கும்
ஊமை பாஷைகள்
மறைவிடம் தேடியே ...
மனம் மொய்க்கும் ....
தேசப் பரிகாச்மே _
தேக நோய் விதைக்கும் ...
மனித குருதிகள்
இருளை ஜீரணித்தே
சந்தோசம் தேக்கும் ...
மனதும் ...
மகிழ்வும் பறிகொடுத்தே
பருவம் பலிபீடமாகும் ...!
நேர்மையின் விலகல்கள்
உண்மைகளை மறைக்கும் ...
போலி வேஷங்கள்
நாசத்தின் கருவாகி
நடைபோடும் ....
தொடர்பறுநத
சுகங்களைத் தேடி
மனித உயிர்
மண்டையைப் பிளக்கும்
வாக்குகளை வாதமாக்கி
உலகியல்
ஞானம் புதைக்கும்..
எழுத்து வீரம்
எளிதில் மறையும்
நிறமாறுதலும்
நெளிந்த கோஷங்களும்
நேர்மைப் பிளமபில்
கருகிப் போக _
கவிதை பிறக்கும் ..!
இதயக் கடலில்
நீந்தி_
விளையாடும்
காதல் மீன்கள்
பெற்றோர் வளையில்
சிக்குவதுமுண்டு ..!
நினைவுகளை ஈரமாக்கும்
நிகழ்வுகள் ...
கடந்து விட்ட
காலங்களை
எண்ணி வாழும்
இதயம் ...
சமூகச் சந்தையில்
புரட்சி சப்தங்களின்
எதிரொலிகள்......

நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை
ஏய்க்கும் வாழ்வு.....

இடையில் .....
ஏந்திழை என்
இலட்சியத்தின்
விடிவு நோக்கும்
விடாமுயற்சி.....!
நெருப்பையும் : சொல்லையும்ஒப்பிடும் போது நெருப்பு குளிச்சியானது . ஏனெனில் ;நெருப்பு விறகுகளை மாத்திரம் தான் எரிக்கும் .சொல்லோ பச்சை பச்சையாய் மனிதனையே எரிக்கும்
குழிந்த மனதோடு வாழ்ந்து காட்டு ...!
தீய மனதோடு வாழ்ந்து காட்டாதே ...!
 பாசம் காட்டிப் பழகு ...! 
மோசம் காட்டிப் பழகாதே ...!
மனம் புரிந்து வாழு ...!
குணம் புரியாது வாழதே ...11
பெண் _
யுகத்தின் படிப்பு
சந்திர மண்டலத்தில்
காலடி வைக்கப் போவதையிட்டு
மண்டைகளை உருட்டிய படி
முதுமை ஜீவன்கள்
கொள்ளை புறத்து வாசலில்
தாரகை மந்திரமோதும் ..!ச
"வெற்றிலை" வட்டாக்களில்
பாக்குகள் ஜில்வோலையடிக்கும் ..!
சிவப்பு வாய்கள்
எச்சில் சொற்கள் கொட்டும்

உதயத்தாரகை இதழ்களில்
புதுமை பெண் _தன்
புலமை திறன்களை
புகைப் ப டங்களில்
வாரியிரைத்துக் கொள்ளும் ..!

வீ ட்டில் ராகமிசைக்கும்
வானொலிச் செய்திகளின்
தலைப்புத் தூறலினால்
மனசு _
மகிழ்சிக் குடை
விரிக்கும் ...!

அறிவிப்பாளர்களின்
கை -தட்டல்களால் :
குயில் குருவிகளின் -
இன்னிசை சப்தங்களில் ..:
சோம்பரிக் கரங்கள்
நெட்டி முறிக்க ..
கை தூக்கி விரல் அசைக்க ...:
சுறு சுறுப்பு
சூரியனாய் உதிக்கும் ..!

பணக்கார சிட்டுக்களில்
சில ..
பாராட்டுககளினால்
மாலை போட :
சிலதுகள்
சந்தோசத்தில்
முகம் மலர ..:
பலதுகள்
விமர்சனங்களில்
பார்வை செலுத்தும் ..!
பெண்களின் முன்னேற்றங்களை
வாழ்த்திய படி
பாரட்டுத் துளிகளினால்
இதயம் கசியும் ...!

முன்னேற்றப் பூக்களுக்கு
ஆண் வண்டுகள்
பண்ணீர் தூவும்

சூரியக் கதிர்கள்
வெளிச்சம் காட்டினால்
சிந்தனைக் காற்று
என்னைத் தடவும் ..!
படிப்பு த் தொடரும் ...!
இரவை மறந்து தூங்கு ...!
விடியலை மதித்து எழும்பு ...!!
நட்பை வலது கண்ணாய் நினைப்பீர் ...!
காதலை இடது கண்ணாய் மதிப் பீர் ...! !
தலை விதியை மாற்று ..!
தலை எழுத்தை மாற்றாதே ..!!
அடுத்தவர் குறையை ஆராய்ந்து போகாதே ...!
உன் குறையை ஆராய்ந்து போ...!!
உள்ளத்தில் அமைதியை தேடு ...!
வீ ட்டில் சந்தோசத்தை பாரு ...!!
பெண்ணின் மனதை சோதித்துப் பார் ....!
தாயின் மனதை சோதித்துப் பார்க்காதே...!!
மழையின் துளிகள்
மண்ணில்
நதியின்துளிகள்
கடலில்
தாயின் துளிகள்
குழந்தையில்
ஏழைப் பெண்கள் விடும் கண்ணீர் துளிகள்
எதிளோ....???
அறிவு வளர்வதற்கு
எனனிதயக் கிணறு
வற்றாது ...சுரக்குமாயின்
இன்னும் தோன்றி வை ப்பேன்
ஊற்றேடுப்பதற்க்காக....!
ஆண் பால்
பெண் பால்
பலவின் பால்
ஒன்றன் பால் இப்படி ...:
எத்தனை பாலாயினும் இரு
ஆனால்-
பிரயோசனமற்ற பாலாய் மட்டும் இருந்திடாதே ..!
ஆமாம்
உதவாப் பாலாய்
இருந்திடாதே....! !
முயற்சியில் வளர்வது அறிவு ...!
அறிவில் பிறப்பது மதிப்பு ...!!

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சோலையிலே! ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே! கூவுதடி!
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி...!

(சோலையிலே)

சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந் தோடியது...
வண்ணக் கருங்குயில் தன் துணையை - கிட்ட
வாவென்ற ழைத்துமே கூவுதடி....!

(சோலையிலே)

கொஞ்சிக் கலந்துமே! மாமரத்தில்
கூடித் துளிர் கொய்து பாடியதும்
நெஞ்சிற் கனவுகள் கூடிடலே - அன்று
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி....!

(சோலையிலே)

சோலையிலே பரந்தொடியதும்
சொர்க்க மென ஓன்று கூடியதும்
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற்
பாடமிசைத்ததை கூருதடி...!
(சோலையிலே)

சொந்த அனுபவம் யாவு மின்று
சொர்ப்பன மாகவே போன தெண்ணி
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன்
வேதனை என்று தான் தீருமடி....?
(சோலையிலே)

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

வைத்தியரின் :
மகன் _
பைத்தியமாக!
தொலைந்து போகிறது
வாழ்க்கை _
மனிதர்களை
புரிந்து கொள்வதற்கிடையில் !
பார்த்தால்
சிரிக்கிறது உதடு
நீ
பேசினால்
சுடுகிறது மனசு !
வேதனைகள் :
தொடரும் போது _
அழுது வடிப்பது
கண்கள் அல்ல
மனசு !
நட்பை
கடுகளவு கூட_
சந்தேகிக்காதே
அது
குருதியை விட :
மேலானது !
உன்
ஆயுள்நீடிப்பதற்கு :
நீ
ஏழைகளின் கண்ணீரை
துடை !
சந்திக்க வில்லை
இதுவரை,
உன்னைவிட
மோசமான உறவை !
பணத்தை -
தேடி வைப்பதற்குள்;
வியாதி
பிணமாகிப் போகிறது....!
போலியோடு மறைகின்றது:
இன்மை வாழ்க்கை -
மெய்யோடு அழைக்கின்றது:
மறுமை வாழ்க்கை..!
குருதியோட்டம் :
புதைகுழிக்குள் ஓடுகிறது _
நீ
புகையோடு
உடம்புக்குள் நுழையும் போது .!
உன் :
உயிரை _
சுவாசிப்பது
மூச்சுக்கள்அல்ல
புகை (சிகரட் )!
அழகிய விழியில்
அபிநயம் புரியும்
தேவதையே;
உன்னை அர்ச்சனை செய்யும்
நினைவுகளில்
என் ஆன்மா பூக்கிறது.....!

வெண்மதி போலே
இதயவானில் பவனி வரும்
அன்புத் தேவதையே:
உன் புன்னகையில்
நான் புதியவனாகிறேன்....!

நினைவுகளில் ஆனந்தம்
காணும்_
இந்தக் காதல்
பித்தனுக்காக
நீ ராகமிசைக்க
வரமாட்டாயோ?

காலம் கரைந்தும்
கனவாகிப் போகும்
நம் கதைகளை
நிஜமாக்குவதற்கு
துடிக்கும்
எனக்காக
நீ பாதத்தை நகரத்து....

மலர்களால் மட்டுமல்ல
இவனின் மனமே
உனக்கு
ஆராதனை செய்யக்
காத்துக் கிடக்கிறதடி.
இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !

வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?

கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
வெயிலின் தாக்கம் எதற்கு:
போதுமே _
உன் வார்த்தைகள்
பேச்சுக்கள் ....
பார்வைகள் ....!
உன்
மன ஆறுதலுக்கு
நீ
கண்ணீரைத் துடை
இறைவனை வணங்கு....!
உன்
கவலைகள் பறக்க :
நீ _
நட்புக் காற்றை
தடவு ...!