வேண்டாம் கண்ணே
என் உறவு உனக்கு
இல்லாமலே போகட்டும்.....!
என் நினைவு உன்னை
துயரங்களுக்கு தழுவிச் செல்லும்.....!
காணாமல் போன நினைவுகளை
எண்ணி எண்ணி
உன்னை நோவினை செய்யும்.....!
சொந்தமென்றும்
பந்தமென்றும்
பாசமென்றும்
பற்றுயென்றும்
உன் மனதை
அழிக்கச் செய்யும்....!
வேண்டாம் கண்ணே
என் தொடர்பு உனக்கு
இல்லாமலே இருக்கட்டும்.....!
என் உறவு உந்தன்
மனதினை மாற்றும்
சுகமான சுகத்தில்
ஒரு தீச்சுடராய் சுடும்....!
துயரங்களையெல்லாம்
உடம்பில் -
பாரமாய் சுமத்தும்
கலங்கமற்ற உள்ளத்தில்
தொடரும் சந்தோஷத்தை
பிணியாய் மாற்றும்!
அதனால் வேண்டாம்
கண்ணே.....!
என் உறவு
உனக்கு
தொடராமலே
நகரட்டும்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக