செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சோலையிலே! ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே! கூவுதடி!
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி...!

(சோலையிலே)

சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந் தோடியது...
வண்ணக் கருங்குயில் தன் துணையை - கிட்ட
வாவென்ற ழைத்துமே கூவுதடி....!

(சோலையிலே)

கொஞ்சிக் கலந்துமே! மாமரத்தில்
கூடித் துளிர் கொய்து பாடியதும்
நெஞ்சிற் கனவுகள் கூடிடலே - அன்று
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி....!

(சோலையிலே)

சோலையிலே பரந்தொடியதும்
சொர்க்க மென ஓன்று கூடியதும்
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற்
பாடமிசைத்ததை கூருதடி...!
(சோலையிலே)

சொந்த அனுபவம் யாவு மின்று
சொர்ப்பன மாகவே போன தெண்ணி
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன்
வேதனை என்று தான் தீருமடி....?
(சோலையிலே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக