ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !

வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?

கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக