செவ்வாய், 30 ஜூலை, 2013

புனிதத் திங்கள்......!



மாண்புடன் பொலியும் ''ரமழான் ''
மாதமோ ''ரஹமத் '' தாகும்
நீண்ட நாள் பாவம் யாவும்
நீக்கிடும் புனிதத் திங்கள் !
பூண்டிடும் தர்மக் கொள்கை
பூமியில் மலியப் பண்ணும்
ஆண்டியோ டரசன் சேரும்
அறத்தினை வளர்க்கும் மாதம் !

வஞ்சகம் பொய்மை மாந்தர்
வாழ்வினை அழிக்கும் சூது
நஞ்செனும் செயல்கள் யாவும்
நலமுடன் அறவே நீக்கி
நெஞ்சினில் அன்பு பாசம்
நிறைந்து மே மாந்தர் யாவும்
ஒன்றென மறையோன் வேதம்
ஓதியே வாழும் மாதம் !

ஆயிரம் இரவில் காத்து
அருந்தவம் புரிந்து ஈற்றில்
நேய (இ )ரா ''லைலத்துல் கத்ர் ''ரில்
நிலமிசை அருளாய்ப் பொங்கும்
தூயதாய் துன்பம் நீங்கித்
துலங்கிடும் ரமழான் தன்னை
நேயமாய் வருக வென்றே
நெஞ்சினால் வர வேற்கின்றோம் 


சீதனம் எதுவும் மில்லை !
சீரமைக்கு பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
பேதையவள் வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரணும் இல்லை !


கல்வியும் கற்றவள் -நல்ல
கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
சொல்லினில் தெளிவு கொண்டவள்
சுய நலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் அவளை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை
கோபுரம் அவள் உள்ளம்
நடிகையை வாழ்வில் மாறும்
நரித் தனம் எதுவும் இல்லை
அடிமையாய் அவளை அன்பால்
ஆண்டிடத் துணைவன் வேண்டும் !


அந்நிய நாட்டுக் அவளை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும் !


பாசத்தின் மறுபெயர்
அம்மா
நேசத்தின் மறுபெயர்
நீ
நட்பின் மறுபெயர்
நாம்....!



தந்தையாம் ! நோய்கட் கெல்லாம்
சந்தேகம் !உண்மை ,நல்ல
சிந்தைகள் கூட இஃதால் !
சிதைந்திடும் !சிதறிப் போகும் !
நோந்தழும் நிலை யுண்டாகும்
நோய் நொடி கூடச் சேரும் !

மனைவியின் மீதும் !கொண்ட
மாண்புறு கணவன் மீதும் !
இணையில்லா நண்பர்க் குள்ளும்
இது வரின் !துயருன்டாகும் !
அணைந்து போகும் உறவுத் தீபம்
அவலமே !வந்து சேரும் !

சொந்தமாய் எழுதி நன்கு
சுடர் விடும் !பெண்ணைக் கூட !
சந்தேகம் கொண்டு !யாரோ
தருகிறார் !எழுதி என்றே !
''சிந்தனை''செய்து மாளும் !
சிற்றறி வாளர் உண்டு !

சத்தியம் கூட இந்தச்
சந்தேக நெருப்பின் முன்னே
நிச்சமாய் உருகித் தேயும்
நீரிலும் நெருப்பு மூளும் !
இத்தனை !கொடிய நோயை
அல்லாஹ்வே !துடைத்து நீக்கு !


உலகம் இப்போ கைக்குள் பொத்திப் பிடியுங்கள்
கையை விரித்து விட்டால் காணாமலே போய் விடும்
அவ்வாறே மரணமும் வாழ்வும்
வாழ்க்கை மீது ஆசை வேண்டாம்
நல்லவற்றை செய்து நன்மைகளைப் பெறுவோம்
கூட வருவது இது ஒன்றே


மனிதனின் உயிர் ஐஸ் கட்டி போன்றது
அது அல்லாஹ்வின் குளிர் சாதனப் பெட்டியில் உள்ளது
அவ்வப்போது தீமைகளை எடுக்க 

திறக்கும் போது மெல்ல மெல்லகரைகின்றது
முற்றாக எடுத்து விட்டால் என்ன வாகும் ?

நினைத்துப் பாருங்கள் 
அல்லாஹ்வின் அற்புதம் எப்படி என்று ..?


அல்லாஹ்வின் ரஹ்மத்தை
யாசித்து கேட்கும்
உண்மை முஸ்லீங்கள் ,
நாங்கள் !

பரிசுத்த குர் ஆணை
தஜ்வீத் முறையினால்
ஓதி வரும்
ஹாபீஷ்க்கள்

கியாமத் வாழ்வுக்காய்
அமல்களை தேடும்
இவ்வுலகின் பக்தர்கள்

இளமை ஊஞ்சலாடும்
வாலிப வயசுகளில்
தீனை போதிக்கும்
நல்லடியார்கள்

இறை இல்லங்களில்
நாளெல்லாம் தஃவாவை தரிசிக்கும்
இறையடியார்களின்
காவலாளிகள்

தௌபா செய்யப்பட்ட
பரி சுத்தமான மனதுடன்
நன்மையான் செயல்களை
உள்ளத்தால் தேடி
முன்னேறும் ஈமானியர்கள்

அறியாமை ஜீவன்களுக்கு
அறிவூட்டும் -
மார்க்க போதகர்கள்

வேதம் புரியாத
கல்ப் களினால்
வாழ்வின் இலட்சியங்கள்
மாறிப் போகும்


இஸ்லாமிய பூங்காவில்
மலரும் பூக்களுக்கு
வாசம் வீச வைக்கும்
அடி வேர்கள்
நாங்கள் !

வியாழன், 25 ஜூலை, 2013



சோகசந்தூக்கில்
வெறுமைப்பயணங்கள்
பயணிக்கும் போதெல்லாம்
மிதந்துகொண்டிருக்கும்
ஈரத்துளிகள்

சகீ
விழிக்கூடத்தில்
காய்ந்துவிட்ட
காலஇலைகள்
உதிரும்போதுதான்
உணர்வுகள்
தட்டிப்பார்த்துப்
கேலிசெய்யும்!

தூதுவிடமுடியாத
மனஅவஸ்த்தை
முகநூலில்வந்துமோதும்

முகத்தைக்காட்டாத
போலிமுகங்களின்
குற்றஉணர்வு
கூனவைக்கும்

பிரிவின்அணைப்பு
எம்மைதடவிசசெல்லமுன்
சிந்தித்துசெயல்பெறு!
நலம்பெறு!!
நன்மைபெறு!!!

வாலிக்கு - என் - துளி...!



கலையுலகை செதுக்கிய
கவிச் சிற்பியே ...!.

பா விதைக்கு நீரூற்றிய
வாலியெனும்
வாளியே......!

புனிதம் நிறைந்த
ரம்லான் மாதம்
உலகை விட்டு நீ
பிரிந்து விட்டாய்
என்ற காற்று
இதயத்தை -
தடவியிய வேளையில்
குருதிகள் தடைப்பட்டு
உள்ளம் ஈரமடைந்தன !

உன் -
பிரிவின் வேதனைகளால்
கலை ஆத்மாக்களின் இதயங்களில்
கண்ணீர் அலைகள்

மூச்சுக்களின் சுவாசங்களில்
(வாலியின்) வலியின் ரணங்கள்

கவித் தேசங்களில் !
கறுப்புக் கொடிகள்!!
எழுத்துக்களில் அஞ்சலித் துளிகள் !!

கவியின் சுடர்
உன் திசையில் தான்
உதயமாகின்றன !து

சந்தோசம் நிறைந்த
இனிய பொழுதுகளில்
எங்கள்விழிகளுக்குள்
கண்ணீரை -
நிறப்பி விட்டாயே !

திரையுலகம் கனவு கணட
இரு கண்கள் (மணி -வாலி)
உலகத்தை விட்டு
இழந்து போய் விட்டது!

கவி வரிகளுக்கான
உன் புகழ்-
இனி வரும் காலங்களில்
வள்ளுவன்
இளங்கோ
கம்பன்
பாரதி
உமறு
பாரதி தாசன்
புலவர்மணி
வரிசையில் இணைந்து விடும் !

உன்-
மூசுக்களை உரிஞ்சிய (விழுங்கிய )
இறப்பின் இரைப்பைக்குள்
எங்களின்-
ஆத்மாக்களும்
வந்து சேரவுள்ளன !

அழுது புரண்டாலும்
உலகில் நிறந்தரமாய் வாழப் போவதில்லை!
தொழுது இறைஞ்சினாலும்
உயிரோடு பிழைத்திருப்பதில்லை !!

வானம் போல்
காற்றைப் போல்
நிலவைப் போல்
நிலத்தைப் போல்
கடலைப் போல்
நிலைத்திருக்கப் போவதில்லை !

ஆனாலும்
நீ
இறந்தாலும் -பிரிந்தாலும்
நீ படைத்த பாடல்கள்
இறக்காதய்யா !!
உன் கவிதையை
கலையுலகம்
மறக்காதய்யா !!

உன் -இழப்பு
ஒரு உயிரின்
இழப்பு (பிரிவு )மட்டுமல்ல
எங்கள்
இதயத்தின் (உதயத்தின் )இழப்பு !
கலை யுகத்தின் பிரசவ மறுப்பு !!

கவிகளின் இதயம்
நீ -
கலையுணர்வுடனே
காலமாகி விட்டாய் !

இறைவனுக்கு நிகர் உலகில் எதுவுமே இல்லை !
அவனின்றி எதுவும் நடக்காது !




கோடை ல் விழுந்த இடி போல
எங்கள் குடும்பத்தின் பிரசவம்
வேதனை சோதனை எல்லாவற்றையும்
புதைத்து விட்டதாகச் சொன்னார்கள் !


எனக்கு சிரித்து மகிழ
அதிக ஆசை


தொப்புள் கொடி வேர்களின்
பிறப்பின் மூச்சுக்களும்
வளர்ப்பின் சுவாசங்களும்

ஒரு பிறப்பின் ஆரம்பத்தில்
இதழ் விரிக்கும் மொட்டு
முத்தங்களோடு
மலரு மென்றும் !

உதடுகள்
சல சலப்புகள்
குருதி துளிகளின் சிதறல்கள்
ஏதுவும் அற்ற
ஒரு அமைதியான சூழல்
நான் தரிசிக்காதவை

அனுபவித்துப் பார்த்திட வேண்டும்
எப்படியென


மேகத்தின் அழகு
நட்சத்திரங்களின் பிரகாசம்
நிலாவின் வெளிச்சம்
விண்ணின் பூக்களாய் மணம் வீசின
மண்ணில் மனிதன் கவியூற்றுக்களானான்.!


மனசு
அழுது தீர்க்கும்

போட்டி -பொறாமை
வெடித்துச் சிதறும் !
வெந்து கருகும் !!

அழுக்கடைந்த
மானுட இதயங்கள்
பாழாய்ப் போன நய வஞ்சக குணங்கள்
திமிறு பிடித்த பிடிவாதங்கள்
உள்ளத்தில் -
அழுத்துப் பதிந்துள்ளதனால் !

சாதி வெறிகளினால்
வளர்க்கப்பட்ட
மனிதாபிமானங்களுக்கு
சுதந்திரக் காற்றும்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி(விட்டது ) விடுவது போலத்தான்!

நட்புக் காற்றுக்காய்
முக நூல் பக்கத்தில்
வந்து கொண்டிருக்கும்
சில -
சர்வதேச உறவுகள்
போலி முகவரிகளில்
துய இதயங்களை
நாசமாக்கும் !

கருத்து சுதந்திரம்
புரிய முடியாமல்
பேனாவின் கசிவுகளாய்
எழுத்துக்களும் இதயத்திலிருந்து
வெடித்து விழுந்து
சிதறிப் பரந்து
மமதைகளின் மனங்களில்
புதைந்து போகும்!

நேர்மை
எழுத்துக்களை சுமர்(ந்)த
விமர்சன வரிகளை
சுரண்டல் கரையான்களும்
அழித்தொழிக்கும் !

எழுத்தாளர்களின் சிந்தனைகள்
ஊறிச் சுரக்கும்
ஊற்று வரை -
பேனாவின் துளிகள்
எழுதிக் கொண்டிருக்கும் !

விரைவில்
போலி உள்ளனக்ளின்
கருத்துக்களிலிருந்து
கவிதைகள் வேறுபடும்

தாக்கி எழுதுவோர்
தாங்கிப் பிடிக்காத வரை !


என் ,
இதயக் கடலில் ,
ஓயாது எழுந்து
கரை நோக்கும்
அலையாய் -எனக்குள்
உன் நினைவலைகள் ...!

திருமண நாள் நினைவுகள் வாழ்த்துக்களாக உறவே



நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்

நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் - என்னை மறவாது

"செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ்வீர்...!

என வாழ்த்தும்
குறையா அன்பில் உங்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி


அரை நிர்வாண அறிவை யர்க்கு
அழகோ மானம் தேய் வதற்கு
நற்குண மில்லா வஞ்சகர்க்கும்
நலமே யாக நீ விளக்கு !


கற்பை விற்கும் கன்னி யர்க்குக்
கடமை தவறும் ஆட வர்க்கு
நற்குண மில்லா வஞ் சகர்க்கும்
நலமே யாக நீ விளக்கு !


முக நூல் -
அழுது சிவக்கும் !

அழுக்கடைந்த்
சில -
மனித ஆத்மாக்களின் எழுத்துக்கள்
அங்கேயும்
கழிவு நீரை கொட்டுவதால் !

பொறாமை உள்ளங்களின் திமீரினால்-
எழுதப்பட்ட
எழுத்து வரிகளுக்கு
விமர்னங்ககளும்
கேள்விக் கூறிதான் .

பட்டம் பதவிக்காய்
பெயர் புகழுக்காய்
கலையுலகில்
நடமாடிக் கொண்டிருக்கும்
ஹீரோக்கள் -
வெளியீட்டு விழாக்களில்
சீதனக்கவிதைகளை
நூலாக்கும்
!

விமர்சன வெப்பம்
பார்க்க முடியாமல்
கேட்க்க முடியாமல்
வியர்வைக் கசிவுகளாய்
நரம்புகளும் உடலிலிருந்து
வெடித்துச் சிதறி
இலக்கிய வெளிகளில்
அமிழ்ந்து போகும்
புதைந்து மறையும்!

தரம் நிறைந்த
நல்ல எழுத்துக்களை (எழுத்தாளர்களை )
கீரியும் -பாம்புமாய்
பொறாமை உள்ளங்கள்
போராடி மாயும் !
பய்ம்காட்டிநிற்கும் !!

கற்பனைகளின் துளிகள் (வரிகள் )
உற்றெடுக்கும் -
தூரம் வரையில் .....
உள்ளத்தின் காயங்கள்
தடித்துக் கொண்டிருக்கும் !
(வீங்கிக்கொண்டிருக்கும் !!)

விரைவில்
பேனாக்களின்
மைத் துளிகளிருந்து
முக நூல் அசிங்கங்கள்வெளியாகும்
நட்புறவுகள் யாவும்
காணாமல் போன பின் 

கவினுறு கலைகள் வளர்ப்போம் ......!



பல
இதயங்களின்
கலை தாகத்துக்காய் ....
நான்
நடத்திவரும் தடாகம் !

சில -
உள்ளங்களின் உணர்வுகளை
கவிதை அழைப்புக்களால்
வரவேற்கின்றேன் ...!

என்
தடாகத் தாமரை
இதழ்களின் எண்ணிக்கைகளுக்கு
பல வேர்கள் !

எங்கள்-
இலக்கிய பயணத்துக்கு
பல தசாப்தங்கள் !

இந்த ஆண்டுக்குள்
நம் -
கவிதைப் போட்டிகளில்
எத்தனை கவிஞர்கள்
வெற்றி பெற்றார்கள் !
மகிழ்ச்சி அடைந்தார்கள் !!


மலிக்கா பாறுக்,
ஆயிஸா பாறுக்,
கவியன்பன் கலாம் ,
முத்துப் பாலகன்,
கலாநெஞ்சன் சாஜஹான்
கலைமகன் பைரோஸ்,
ராசகவி ராஹில்,
ஷைலஜா ராகவன்,
அத்தனை கவிஞர்களும்
கவியருவி
கவீத் தீபம்
பட்டங்கள் பெற்றனவே
அல்லாஹ்வின் நல்லருளினால் !

கரங்களினாலல்ல
சிந்தனைகளினால் கூட

காலமெல்லாம் -
எழுதும் எழுத்து வரிகளை
விமர்சனம்
செய்யமுடியாத
பரிதாப நிலை

பொறாமை யுள்ளங்களில்
பொறுமை
வரும் வரையில் தானே ?

இலக்கிய உலகில்
சந்தோசத்தை விட
துன்பங்களைத் தான்
அதிகம் அதிகமாய்
நாம் கலையுலகில்
கை குலுக்கியுல்ளோம்!

இன்னும் இன்னுமாய்
எப்படி
பொறாமையுள்ளங்களுக்கு
பொறுமையை
கற்றுக் கொடுப்பது
உள்ளத்தை தொட்டு காட்டுவது ?

கலை ஆத்மாக்களே ......

இந்தஎழுத்துலகம் -
எழுதும் எழுத்தாளர்களுக்கு
திறமை அந்தஸ்து
மட்டும் கொடுக்கட்டும் !

வாசகர்களின்
சம்மதங்களுடன் !

சந்திக்கின்றேன்
தடாகத்தின் வளர்ச்சிக்காய்
ஒரு-நிஜத்தின்
பயணத்துக்காய் (யாத்திரைக்காய் )!!


என்றைக்கும்
''லூசியா'' என்ற நாமத்தை
என்னிதயக் கோட்டையின்
ஒரு பாதி கோபரவனம்
தேசிய கோடியாக
மிதந்து உச்சரிக்கட்டும் !

உள்ளத்து உணர்வுகளோடு
இணைக்கப்பட்ட இரத்தத் துளிகளோடு
அவள் நாமம்
இடம் தேடிக் கொண்டது !

இமாலயப் பறவை
சக்கரவாத்ப் பறவை
எல்லாம் நான் -
சரித்திரங்களில் தான்
படித்ததுண்டு -ஆனால்
இந்த் பாசப் புறாவையை
நான் -பிறந்த மண்ணில் தான்
பொறுக்கிக் கொண்டேன் !

சில சமத்துவங்களுக்கு -
முன்னுரை சொல்லவந்த
அவள் -மூச்சு -ஒரு
சகாப்த்தில்
சங்கமிக்கட்டும் !

சில வேளை
''சிம்பளாக''நான்
மரணிக்கக் கூடும்
அப்போதாவது -

இந்த ஆத்மா
தோழி சாந்தியை -
அவளுக்காக்.......
அர்ச்சனை செய்யட்டும் !

என்றும் அவள்
என் மனதிற்கு
என் பேனைக்கு (சகீ)ஆனால்
நெஞ்சுக்கு ......
.உணர்வின் மூச்சு .....!
இதயத்தின் சுவாசம் ...!!
.

அவள்
வாழட்டும் பல்லாண்டு
பொல் ஊண்டி !

(உங்கள் பயணம் இன்று தொடரட்டும்
வெற்றியோடு -
சந்தோசமாய்திரும்பி வரட்டும்
வல்ல அல்லாஹ்விடம் உங்களுக்காய்
பிராத்தனை செய்கின்றேன்
போய் வருக ..!


பாரினிலே ஏராளம் பிரச்சி னைகள்
பார்த்து விடும் போதினிலே எந்தனுக்குள்
தீராத கவலையோ விண்ணை முட்டும்
சித்தம் மிகக் கலங்கி மிக்க துயரம் நீட்டும் !

இன மத பேதங்கள் தலையைத் தூக்கி
சாக்கடைக்கும் கீழாகச சமூகந் தன்னை
விதியாலே நின்று மிங்கு எதிரா யாக்கி
நெஞ்சத்தில் கடுந் துயரை நிறையச் செய்யும்!

ஆதனால் சொதரர்காள்அகிலந் தன்னில்
அனைவருமே ஒற்றுமையால் வாழ்ந்து விட்டால்
பூ தலத்தில் ஏதுதுயர் எண்ணி டுங்கள்
புண்ணியங்கள் சேர்வதற்கு உழைத்தி டுங்கள் !

புதன், 17 ஜூலை, 2013

நோன்பு மாதம்......!




வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து 
இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள் வறியவர் தீப்பசி யுணர்ந்து
திருந்திட அருளிடும் மாண்பு

மண்ணறை முஸ்லிம் மாந்தர்கள் கூடி
வாழ்த்தி வரம் பெறும் திரு நாள்-அது
தண்மதி நபிகள் நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள் பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள் வேறாய்
வந்திடும் பன்னிரு மாதம் -அதில்
அருளொளி வீசி திருமறை ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

வாழ்வினை யுணர்ந்து தாழ்வினை மறந்து
வாழ்ந்திட வழிகளை காட்டும் -அது
கூழெளினும் ஏழை குடித்திட ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர் நெஞ்சம் திருந்திடப் பண்ணும்
திருமறையருள் நிதம் பொங்கும்
'


புனித -
இஸ்லாத்தின் 
கட்டாயக் கடமைக்காய் ---
நான் -
நோற்று வரும் 
அமல்களின் நன்மைகளை 
இறை பக்தியினால்
அதிகரிக்கின்றேன் !

என் -
இனிய மார்கத்தின்
கடமைகளின் கரங்களுக்கு
ஐந்து விரல்கள் !

எங்கள் -
ஹிஜ்ரி வரலாற்றுக்கு
1434 ஆண்டுகள் !

இந்த -யுகங்களுக்குள்
நம் -
உயிர் மூச்சுக்களில்
எத்தனை சுவாசங்கள் !
இமைகளின் துடிப்புக்கள் !!
உதடுகளின் சிரிப்புக்கள் !!!
நாவுகளின் பேச்சுக்கள் !!!!
பாதங்களின் நகர்வுகள் !!!!!
கரங்களின் தடவல்கள் !!1!!!
இத்தியாதி இத்தியாதி !!!!!!!

பரிமாறப் பட்டுள்ளன..........................!

எல்லாமே
மனித உணர்வுக்குள்
புதையலாகிப் போயின!
அல்லாஹ்வின் அற்புதங்களால் !

மனங்களினால் மட்டுமல்ல
செயல்களினால் கூட
வாழ் நாள் முழுதும்
தடவிக்கொள்ளும் ரம்ளானை
பக்தியுடன் -
நோக்க முடியாத
பரிதாப நிலை
உலகில்
வாழும் வரையில் தானே ?

இவ்வுலகில்
நன்மைகளை விட
தீமைகளில் தான்
அதிகமதிகமாய்
நாம் நம்
பாவங்களை
அதிகரித்து வருகின்றோம்.

இன்னும் இன்னும்
எத்தனை -
இருள் காலங்களுக்குள்
பாவச் செயல்களில்
பயணம் செய்வது !\?

.மனித ஆத்மாக்களே ....!

இவ்வுலகம் போலியானது !!

எப்படி பிறந்து வந்தோம்
எதை -
எப்படி கொண்டு செல்வோம் ?

மண்ணிலே பிறந்த
நாம் -
மண்ணுக்கே சொந்தம் !

இந்த உலகம்
யாருக்கும்
சொந்தமல்ல !
அடக்ககஸ்தளம் கூட

ஒரு போலி வாழ்கைக்காய்
வாழ்ந்து வருகின்றோம் !

சொந்தமில்லா உயிருக்காய்
உரிமையில்லா உடலுக்காய் !


சுவர்(க்)கம் நரகம் மறுமைவாழ்வில் தான் 
தெரியுமென்பதை 
மறுக்கின்றேன் நான் !

கண்களை மூடினால் சுவர்க்கம் 
கண்களைத் திறந்தால் நரகம் !

பஞ்சமா பாதகங்களும்
நன்மை தீமைகளும்
அன்பும் ஆதரவுகளும்
போட்டி பொறாமைகளும்
தொழுகை நோன்பும்
இந்த உலக வாழ்வில் தான் !

உலகில் -வாழும் மானிடர்களின் மனங்களில் தான்
சுவர்க்கமும் நரகமும்!

மறுமையில் அல்ல
என்பதை -
மறுக்கின்றேன் நான் !

சரித்திர வரலாறுகளில்......
இலங்கை -இங்கு
ஆதி பிதா ஆதம் (அலை ) அவர்களின்
பாதம் பட்ட மண்ணாக படித்துள்ளேன் !

ஆனால் இன்றோ
பேய்களும் பேசாசுகளும்
தீவிரவாதமும் அடாவடித் தனங்களும்
மண்ணில் பந்தாய் விளையாடுவதும்
இங்கு -
ஒரு விளையாட்டு அல்லவா ?

தொல்லைகள் சுமந்து வரும்
உள்ளங்களின் வருகையால்
இப்போதெல்லாம்
நல்ல மனசுகள்
காணாமல் போகின்றது !

நோன்பு காலங்களில் தொழும்
தராவிஹ் தொழுகை கூட
மாற்றம் கண்டு
மாறிப் போகின்றன !

சில ஈமானியர்களின்
மனங்களில் பதியாத
திருமறை வசனங்களை
அடுத்த மதத்தவர்கள்
அறிந்து கொள்வதற்காய்
புரிந்து கொள்வதற்காய்
ஆராச்சி செய்கின்றனர் !

சாதி மத பேதம் வேண்டாம்
என்று -
இலக்கணம் கூறியவர்களே -இன்று
காடைத் தனத்துக்கும்
வேற்றுமைக்கும்
மத பேதங்களுக்கும்
தீவிர வாதிகளாய் நிற்கின்றனர்

அருளப்பட்ட
அல் - குர் ஆன் வரிகளை
ஓதாதவர்கள்
புரியாதவர்கள்
அறியாதவர்கள்
குருதித் துளிகளைத் தான்
தேயிலையாய் -
தாகம் தீர்த்துக் கொள்கின்றார்கள் !

பெண் ஆத்மாக்களின் .......
உயிரை விட மேலான -கற்பு
அழிக்கப் படாமலிருக்கட்டும் !

இன்னுமொரு சமூகம்
இறந்து போகாமலிருக்க !
புதைந்து போகாமலிருக்க !!

அல்லாஹ்வின் அற்புதத்திலிருந்து
கருவாகி உருவாகி வந்தவர்களே

" அல்லாஹ்வுக்கு அடி பணிவோம்"என்று கூறிக் கொண்டு
அடுத்தவர்களையல்லவா
அடித்து உதைக்கின்றீர்கள் ?

அப்பாவி உள்ளங்களின் கண்ணீரால்
இப்போதெல்லாம் -
வரண்டு போன பாலைவனப் பூமி கூட
ஸம் ஸம் நீராய் ஊற்றெடுக்கின்றது !



பணத்தைக் கண்டால் 

குணம் மாறிப் போகும் 

அது 

மனிதரை மட்டும் 

தேடிக் கொள்லும் !

தடவிக் கொள்லும் !!

பணம் -

இல்லாவிட்டாலும் தேடிக் கொள்ளலாம்

குணமில்லாவிட்டால் ?

பணம் பிணமாக மாறும்

பிணம் பணமாக மாறும்

குணம் -

எதுவாக மாறும்?

பணத்தை தேடிப் பெற

படைக்கப்பட்டவர்கள் நாம்
குணத்தை பெற்றுக் கொடுக்க
படைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்!

அது -நீரில் ஒரு தாமரை
கலங்கினால்
மனிதருக்காக ஏங்குவதில்லை

நாம் -
மனிதப் பிறவிகள்
குணம் மாறினால்
ஆத்ம திருப்தியோடு வாழத் தான் முடியுமா ?
                                     




பெண்களை நோவித்தபடி 
கருத்துக்களை -
பித்தனாய் எழுதிய படி (போட்டபடி )
முக நூலில் 
பவனி வரும் ராஜாக்களே ....!

நட்பில்லா உறவுக்குள்
நுழைய முன்
உங்களுடன் -
மான மரியாதையையும்
உயர் லட்சிங்களையும்
உடுத்திக் கொள்ளுங்கள் !

முக நூல் மூலம்
பெண்களின் எழுத்துக்கள் -
உயர்வுகள்
மதிப்புக்கள்
புகழ்சிகள்
பாராட்டுக்கள்
இத்தியாதி இத்தியாதி
சில-ஆண்களால்
ஏன்
தாங்கிக் கொள்ள முடியாது உள்ளது ?

அவர்களின் ஊடுருவல்
கருத்துக்கள்
எழத்துக்கள்
நாகரிக மற்ற போர்வையில்
ஏன் -
அசீங்கமாகிக் கொண்டு உள்ளது ?

அது
நல்லவர்களையும்
தழுவாமலிருக்கட்டும் !

நாளையெம்
பெண்களின் எழுத்துக்கள்
ஏவுகணையாய் வெடிக்கும் வேளை
பதர் யுத்தத்தை நினைக்கவும்
பிறைக் கொடிகளை சுமக்கவும்
ஓராயிரம் இதயங்கள்
தயாராகி நிற்பார்கள் !

ஒரு -
அன்னை ஆயிஷாவாய் !
அன்னை பாத்திமா சஹ்ராவாய் !!
அன்னை ஆமினாவாய் !!!
அன்னை கதீஜாவாய் !
உலக பிறப்பில்
உங்களை நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள் !

அதில் வளர்வது

என் எழுத்துக்களாகவும் இருக்கலாம்!

அல்லாஹ்வின் அருளாகவும் இருக்கலாம்!!

அண்ணலாரின் போதனைகளாகவும் இருக்கலாம்!!!

ஈமான் கொண்டோரின் நன்னோக்காகவும் இருக்கலாம் !!!!


திங்கள், 8 ஜூலை, 2013





முக நூலில் 
புதைந்து விட்ட
என் -
காணாமல் போன காலங்கள் !

என்றும் ....
இன்றும் ....
எப்போதும் ...
இனிமையான வை
இளமையான வை
இதயமான வை


நட்பு உறவுக்குள்ளே
நுழைந்து விட்ட-என்
மூச்சுக் காற்றின் நகர்வுகள்
மூன்றாம் வயதைத்
தாண்டியபடி
நான்(ங்)கில்
அமர்கின்றது
என்னுள்ளத்தைப் போல !

எனது
இந்தமூன்று வருடங்களில்
இந்த ''முக நூல் உறவுகள் ''
என்னை -
அடையாளம் கண்டு கொண்டது !

என் -
கலை உலகத்தைப் போல் !
என் இலக்கிய பயணத்தைப் போல் !!
என் இதயத்தின் நாடி நரம்புகளைப் போல் !!!
மூச்சுக் காற்றைப் போல் !!!!
கவி ஊற்றைப் போல் !!!!!

வாழும் காலங்களில்
எனக்கு -
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மனமில்லாத
உறவுகளைப் பெற்றுத்தா !

போட்டி
பொறாமை
சூது -வாது
வஞ்சகம்
முன் ஒன்று பின்னொன்று பேசாத
உறவுகளைப் பெற்றுத் தா

என்னை நேசித்த
நான் நேசிக்கின்ற
உறவுகளுடன்
வாழுகின்றேன்
என்றும்
எப்போதும் !
                                          



மனசு 
அழுது தீர்க்கும் 

போட்டி -பொறாமை 
வெடித்துச் சிதறும் !
வெந்து கருகும் !!

அழுக்கடைந்த
மானுட இதயங்கள்
பாழாய்ப் போன நய வஞ்சக குணங்கள்
திமிறு பிடித்த பிடிவாதங்கள்
உள்ளத்தில் -
அழுத்துப் பதிந்துள்ளதனால் !

சாதி வெறிகளினால்
வளர்க்கப்பட்ட
மனிதாபிமானங்களுக்கு
சுதந்திரக் காற்றும்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி(விட்டது ) விடுவது போலத்தான்!

நட்புக் காற்றுக்காய்
முக நூல் பக்கத்தில்
வந்து கொண்டிருக்கும்
சில -
சர்வதேச உறவுகள்
போலி முகவரிகளில்
துய இதயங்களை
நாசமாக்கும் !

கருத்து சுதந்திரம்
புரிய முடியாமல்
பேனாவின் கசிவுகளாய்
எழுத்துக்களும் இதயத்திலிருந்து
வெடித்து விழுந்து
சிதறிப் பரந்து
மமதைகளின் மனங்களில்
புதைந்து போகும்!

நேர்மை
எழுத்துக்களை சுமர்(ந்)த
விமர்சன வரிகளை
சுரண்டல் கரையான்களும்
அழித்தொழிக்கும் !

எழுத்தாளர்களின் சிந்தனைகள்
ஊறிச் சுரக்கும்
ஊற்று வரை -
பேனாவின் துளிகள்
எழுதிக் கொண்டிருக்கும் !

விரைவில்
போலி உள்ளனக்ளின்
கருத்துக்களிலிருந்து
கவிதைகள் வேறுபடும்

தாக்கி எழுதுவோர்
தாங்கிப் பிடிக்காத வரை !