வியாழன், 25 ஜூலை, 2013பாரினிலே ஏராளம் பிரச்சி னைகள்
பார்த்து விடும் போதினிலே எந்தனுக்குள்
தீராத கவலையோ விண்ணை முட்டும்
சித்தம் மிகக் கலங்கி மிக்க துயரம் நீட்டும் !

இன மத பேதங்கள் தலையைத் தூக்கி
சாக்கடைக்கும் கீழாகச சமூகந் தன்னை
விதியாலே நின்று மிங்கு எதிரா யாக்கி
நெஞ்சத்தில் கடுந் துயரை நிறையச் செய்யும்!

ஆதனால் சொதரர்காள்அகிலந் தன்னில்
அனைவருமே ஒற்றுமையால் வாழ்ந்து விட்டால்
பூ தலத்தில் ஏதுதுயர் எண்ணி டுங்கள்
புண்ணியங்கள் சேர்வதற்கு உழைத்தி டுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக