ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

உண்மையான நட்புஒரு உண்மையான நட்புக்கு இதயமாக இரு ...!
துரோகமாய் வாழ்ந்து (மாறி )விடாதே ...!

தாங்க முடியாத சுமைகளோடு ...!சுவாசித்து தொலைத்த
மூச்சுக்களும் 

நரைத்துப் போன 
வாழ்க்கையின் முடிகளும் 
ஒருபுறம் நகர்ந்து கொண்டிருந்தாலும்

வாழ்க்கை
அதன் போக்கில்
போய்க் கொண்டுதானிருக்கிறது

தாங்க முடியாத
சுமைகளோடு ...!

சனி, 24 ஆகஸ்ட், 2013

தன்னுரிமையை காப்போம் ..!நம்மில் ...
நம்பிக்கையற்றவர்கள் 
ஏமாற்றக்காரர்கள் 
உள்ளவரையில் 
எம்முரிமை 
கேள்விக் குறிகளாகவே 
கணிப்பிடப்பட்டுக் கொண்டிருக்கும் .

தேர்தல் காலங்களில்
போலி வார்த்தைகளை
தேனாய்க் கொட்டும்
துரோகிகள் (பொய்யர்கள் )
எமக்குத் தேவையில்லை

மக்களுக்கு
பாசம் காட்டி
வேஷம் போடுவோருக்கு
தன்னுரிமையை வழங்கிடாது காப்போம் ..!

எங்களுக்கு
தொழில் வாய்ப்புக்களை
பெற்றுத் தருவதாக
வாக்கு உரிமைகளை
விட்டுச் சென்றவர்கள்
எங்களிடமிருநத
மன நிம்மதியினையும்
இழக்கச் செய்து விட்டனர் .

தான் தோன்றித்தனம் தான்

இவர்களின்
குள்ள நரிப் புத்திகளால்
மிதிக்கப்பட்ட
துவைக்கப்பட்ட
நம் சமூகம் இன்று
சுடர் விட்டு எரியும் பிரச்சினைத் தீயில்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றது ..!

மத பேதம் எதுவுமின்றி
மான மரியாதையோடு
வாழ்ந்து கொண்டிருந்தசமூகமும்
சித்ரவதைகளுக்கு -
உள்ளாக்கப் பட்டுவிட்டன .

அராஜக அடக்கு முறை
அட்டகாசங்களினால்
தன மானம்
தலை குனியும் வேளைகளில்
வாயிருந்தும் ஊமையர்களாய் ...,
காதிருந்தும் செவிடர்களாய் ...
கண்ணிருந்தும் குருடர்களாய்
பணம்
பட்டம்
பதவிகளுக்காய் ..
முண்டமாய் மாறி நிற்கின்றன ..!

இதயங்களை இழந்து விட்டு
செல்வாக்கில்
வளம் வந்து கொண்டிருக்கும்
பச்சோந்திகள்
அரசியலில் உள்ளவரை
மண்ணில் வாழும் வரை
எங்கள் சமூகம்
என்றென்றும்
திசையறு கருவிய்ற கப்பலாகவே
பயணிக்கும் ..!

நட்புஉள்ளத்தை உள்ளபடி காட்டும் 
கண்ணாடி -
உண்மை நட்பு !

புரியாத புதிர்எழுத்துக்களைப் பார்க்கும்போது
புரியாத புதிராகிப் போகிறது

மனித வாழ்க்கைமனித வாழ்க்கையொரு விசித்திரமான பயணம் ,
வழி கண்டு விழி

தமிழே வாழிவள்ளுவன் இளங்கோ கம்பன் ,
வழி தனில் புலவர் கோடி !
தெள்ளிய கவிதை பாடி
தென்னச் சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி இன்ப !
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும்
சுந்த்தரத் தமிழே வாழி !


பாரதி உமறு ! நல்ல
இலந்தை பாரதி தாசன் ,போன்றோ
ஆரமாய்ச் சூடி யுன்னை
அழவிலா இன்பங் கண்டார்
சேர்ந்திடும் வறுமைத் துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது துன்னைப் பாடி
சுகம் பல கண்டாள் அம்மா !


வாழ்வினைத் துறந்தோர் கூட
வடிவுனைத் துறந்தா ரில்லை
தாழ்விலா நிலையி லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து போற்றும்
நீள் பழம் பெருமை யோடு
நித்தமும் வாழு மெங்கள் !
வீழ்வுறா மொழியே !என்றும்
வீறுடன் வாழ்க நீடே !

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அன்பு!வாழ்வுச் செடியின் 
அன்பு மலர்களை 
உறவுத் தென்றல் 
தழுவிச் செல்லட்டும்!

ஒரு ஆத்மாவின் கதறல்!சங்கத் தமிழைக் காதலிக்கும்!
தங்கை    என்றன்   உளமின்று
மங்கிப் போன கதை கேளீர்!  
மனதின் நிலையைப் புரிந்திடுவீர்!

மக்களுக்காய் போராடும்!
பாராளுமன்ற சகோதரரே!
கடின உள்ளம் கொள்ளாதீர்!
கண்ணீர் சிந்த வையாதீர்!

விலையேற்ற மென்னே ..?வயிற்றிலே 
அடிப்ப தென்ன ..? கூறிடுவீர்!
புள்ளடி வேண்டும் கேளுங்கள் 
எங்கள் நிலையைப் பாருங்கள்!

எம். பி. மாரே! தம்பி மாரே!
அழகுத் திருநாட்டின் காவலரே!
உண்மையாக கேட்கின்றேன்!
விலையேற்றத்தை குறைத்துத் தாருங்கள்!

மனம் கலங்கி கேட்கிறேன்!
பாவை  புலம்பிக் கதறுகிறேன்! 
விலை ஏதும் ஏற்றாமல் நீங்கள் 
எங்கள் ஏழ்மையினை துடையுங்கள்! 

தலைக் கனமாய் வாழேன்
தூய இஸ்லாம்! வழியில் பிறந்தேழுந்தேன்!
மடமை யனைத்தையும் வீரமாய் துடைத்தெறிந்தேன் 
ஈமான் தனைக் கொண்டு  புத்தியாய்நடை பயின்றேன் 
மாற்றம் படைத்து வைப்பேன்! அறியமை அகற்றி வைப்பேன்

திருமறை ஓதலோடு: மார்க்கக் கல்வியை நான் கற்றேன்
உயிர் பிரியும் நாள் வரைக்கும் தீனுக்காய் நான் துடிப்பேன்
வீண் விரயயின்றி  இறை வழியில் செலவளிப்பேன்
சுவாசிக்கும் மூச்சியிலும் கலிமாச்சொல்லி மகிழ்றிருப்பேன்

அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்த பெண்ணல்ல
உண்மை முஸ்லிம் வயிற்றில்! அவதரித்த ஈமானியப் பெண்
இறை வணக்கத்தை இன்பமுடன் கடைபிடித்தவள் யான் 
திசை மாறி வசை படி தலைக்கணமாய் வாழேன் யான்

மார்க்கப் போதனையை மழையாய் பொழியும்
தித்திக்கும் தேனாற்றல் தானாகப் பெற்றவள் நான்
எத்திசைப் போனாலும் என்னிதயம் அல்லாஹ்வை
வணங்கிப் போற்றிறிற்கும்! புகழினை பாடி நிற்கும்

புதுமாற்றம் கொண்டு வாராய்!ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தைப்போல 
இல்லாது! நீ மலர்க! இரண்டயிரத்துப் பதினொன்றே!
சோக நிலை மாறி யொரு!சுகந்தம் வீச!
சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்.
முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம் 
இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற 
இரண்டாயிரத்து பதினொன்றே நீ இதமாய் வாராய்!

கொலை மலிந்து தலைபுரளக்! கோபம் கொண்டே!
கொடுவதைகள் செய்வோர்  தம் உள்ளம் மாறி                       
வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த 
விலையில்லா அமைதியினை உலகுக்கின்று 
விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து 
கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்!
களிப்பூட்ட நீவாராய்  பதினொன்றே!

இனமென்றும் மொழியென்றும் மதங்களேன்றும்
இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி 
மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம் 
மாண்போடு! சோதரராய் வாழ்ந்து நிற்க!
தினந்தொரும்  ஏழ்மையிலே! வாடுவோர்கள் 
செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கி
கனவெல்லாம் வினையகிக் கண்டு உய்ய
கனிவோடு புதுமாற்றம்  கொண்டுவாராய்!

கொடுமைக்குக்குறைவில்லை!கருணை தன்னைக் காசினியில்
காலமெல்லாம் தேடினும்
அரிய சொத்தாய் அது ஆகி
அகிலந்தன்னில் மறைந்துள்ளது!

மடமையோடு மனிதர் தம் 
வாழ் நாளினையே அழித்துவிடும் 
கொடுமைக்கிங்கே குறைவில்லை
குவலயத்தில் மகிழ் வில்லை!

வஞ்சங்கள் சூ தோடு 
வறுமைக் கோலம் துயர் நீங்கி 
பஞ் சமா  பா தங்கள் 
பாரில் உலவுது காண நாளாய்!

நிறைவு,இன்பம் நெஞ்சத்து 
நேர்மை, கருணை எல்லாமே 
இணைந்து வருமா வாழ்வினிலே 
ஏக்கம் போமா?சொல்லிடுவீர்?

பார்வையின் புருவங்களாய்!!!!
பாசம் தொலைந்து விட்டது
எம் உறவு
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து
வரண்ட நிலமாகிய பின்...

பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்
நினைவுத் துளிகள்...
வாசித்த நா மட்டுமல்ல!

எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்
அதுவும்
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!
(தீயோடு-தீயாயிற்று)

இன்று 
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...
உறவிழந்து 
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தந்தவர்கள்,
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!

உன் எழுத்தில் 
உன் பேச்சில்
உன் அன்பின் ஆழம் கண்டு!

நாம்-
ஒவ்வொரு நிமிடமாய்
சுவாசித்து...சுவாசித்து-
மூச்சிடும் வேளை,

அதில் உன் உருவம் இல்லை!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி 
உரிமையாக்கி விடுகின்றன...

நீ
கலக்கமில்லாத வெள்ளையுமாம்!
நீ-
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு 
பார்வை புருவமாம்!
பிரிக்க முடியாதாம்!!

பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு
நிம்மதியிழந்து இருந்தோம்.

"உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென"
ஆறுதல்படுத்திச் சென்றனர்,
உன் குழந்தைகள்..

நட்புகள் என்று தான் மாறும்....?
தூயவுள்ளங்களைத் தானே அது
தேடியலைகிறது....!

துயரம்தொப்புள் கொடி  உறவு தந்த 
பாசம் எங்கு போனது ?
உடன் பிறப்பைத் தேடிச் சோர்ந்து போய் 
துயரம்  மனதில் துடிக்குது 

உறவு மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டு 
வண்டு எங்கு பரந்தது ?
பச்சோலையை அறுத்துப் போடுவதற்காய் 
புதிய தென்னை தேடுது !

நேசித்த இதயத்தை பிரித்த பின்னர் 
பொறாமை எங்கு போகுது?
பொய்க்காக வாயை திறக்கும் 
நாவு ருசிக்க பழியைத் தேடுது !

விட்ட மூச்சு சுவாசிக்கும் காற்றில் 
வயது எங்கே போகுது ?
புதை குழியில் வாழ வேண்டித் 
நல்லமல்களை தேடுது !

நீயுமொரு நாள் கவிஞனாகிடலாம்
கவிஞனாக வேண்டு மென்றால்
சிந்தனை  தான் தேவை
மனசுக்குள் முயற்சியும்   
உள்ளத்தில் துணிவும்

பத்திரிகையில் எழுத வென்றால்
பேனாவும் பேனாவில் மையும்
பிரசுரம் பெற வேண்டுமென்றால் 
 திறமையும் நல்ல கருவும்(தரமும்) 

வாசிப்பவர் விமர்சிப்பார்
வாழ்த்துவரா தூற்றுவரா என்றே
கவலைப் பட்டால் ஆக முடியாது
கவிஞனாய் ஒரு போதும் 

கற்பனையில் வாழ்ந்திடாதே 
நிஜம் வராது மகிழ்வு தொடராது 
உலகமானது காத்திருக்காது 
கவிஞனுக்கு துணையாய் 

தூக்கியெடு பேனாவை
எழுதிச்செல் நல்லென்னங்களை 
வாசித்துப் படி கையில் கிடைப்பதை 
கவிஞனாகிடலாம் நீயுமொரு நாள்!

மழை
மழை  பொழிவதற்க்காக
மேகம் திரை நீக்கம் செய்கின்றது 
மாறி காலம் 

மேனியில் முட்கள் 
வாசம்  வீசும் 
துரியம் பழம் !

வியர்வை நீரில் குளிக்கும் போதும் 
துடைத்துக் கொண்டே இருக்கும் 
தென்றல் காற்று !

பார்த்துக் கொண்டிருக்கும் போது 
நிறம்மாறி உடை அணிகிறது 
பேய் ஓணான் 

மழை காலத்தில் 
ஒப்பாரி வைத்தழும்  
தவளை 

நீ...!சகீ  
அழாத என்னைக் கூட 
அழ வைத்து விட்டுச் சென்று விட்டாயே !
இன்று 
நான் சிந்தி வடிக்கும் கண்ணீரும் 
உன் 
கண்ணீர் துளியென்பதை 
நீ அறியவில்லையா?
அல்லது -
புரிந்தும் புரியாமலா ?

ஆயிரம்தான் உறவுகள் வந்தாலும் 
உனக்கு  நானும் 
எனக்கு நீயும் தான்
உறவு !
நமக்கான நட்புறவில் 
தாய் மண்ணின் பிரசவமும் ஒன்று
நீ-
சுவாசித்து விட்டுபோவதுபோல
அதுவும் தடவிவிட்டுச் செல்லும்....!

சகீ ...!உன்னை மறந்த
நினைவுகளை 
என்னால் சுவாசிக்க முடியாத போது 
என்னை மறந்ததநினைவுகளை 
உன்னால் -
எப்படி சுவாசிக்க முடியும் ?

ஏழை
ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !


இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம்  !

பணத்தைப் போல் 
குணம் மாறும் 
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!


வசதியில்லையென்றாலும் 
மனிதனாய் வாழ்கின்றாகள் 
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும் 
சுவையாக உறிஞ்சப் படுகின்றது 
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )நிம்மதியற்ற தேடல்கண்ணுக்கு காணாத தென்றல் காற்று 
வீட்டுக்குள்ளிருக்கும் 
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று 
முற்றத்தை நோக்கி பாய்கிறது. 

மரக்கிளைகளை தேடி 
அலைகிறது காற்று. 

புழுக்கத்தின் தாக்கம் 
வியர்வையின் கசிவு 

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை. 

நாவில் வறட்சி 
தாகத்தில்  உமிழ் நீர் வற்ற 
தொண்டை அழுது துழாவுகிறது. 

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட 
ஒரு மண்ணறையை நோக்கித்தான் 

நிம்மதியற்ற தேடலாய்  வாழ்க்கை 
நிலையற்றுக் கிடக்கின்றன 

எதிரிகளைத் தேடும் ஆவிகள்
           
என் உடல் உஷ்ணம் 
வியர்வை சிந்தும் படி 
வேதனைகளால் 
கசிந்து -ஈரம் 
ஊற் றெடுப்பதுண்டு !

சூரியன் தடவ .
கரங்கள் கைக்குட்டையை நாட 
கிளம்பும் புழுதிகளால் 
சுவாசம் 
தும்மலை விட ...
கைக் குட்டையை எடுத்து 
பௌடரைப் போட ...
வாசம் வீசும் 
தென்றலில் கலந்து 

சகீ
வந்து பாரதீ ...
என் 
வீட்டு முற்றத்தின் 
முன்னாலிருக்கும் 
மயானத்தில் 
எல்லாவற்ரையும் 
காணலாம் 
நேரில் ..

எமக்கும் மனப் பயம் 
சுரப்பதால் 
நமக்கு நாமே 
பாதுகாப்புத் தேடுகிறோம் !
துர்  நாற்றம்  வீசுகின்றது
அதனுள்ளே -
-
நரிகளும் '
நாய்களும் ..
பேய்களும் ...
வேட்டையாடுகின்றன !

எதிர் வரும் 
வெள்ளிக் கிழமை 
அவைகளுக்கு 
கொள்ளி வைக்கப் போகின்றேன் 

அப்போ -
சில நேரம் 
தீயிலே பாயும் 
அந்த ஆவிகள்
எதிரிகளை 
தேடிப் பிடிக்கும் !

ரகசியம்புதைத்த ரகசியங்களை 
கிளரச் செய்கின்றது 
எனக்கான வாழ்கை..!

புரிந்ததுணர்வற்ற வாழ்க்கைதாய்மையின் அடையாளம் கொடுக்கப்பட்டு 
உரிமையின்றி விவாதிக்கப் படுகின்றது 
புரிந்ததுணர்வற்ற  வாழ்க்கை 

என்னைப் போலவே ..!மூச்சுக்களின் எண்ணிக்கைகளை அறியோம் 
உணர்வோ உணர்ச்சிகளோ 
சுவாசத்துக்கு நினைவு இல்லை 

வயசும்  நரையும் கூட 
முதுமையை வெறுக்கின்றது 
இளமை தேடி வாழ்வோரின் 
வாழ்கையும் குறைவே 

மனம் மட்டும் அருளை தேடி 
இறைவனை  நாட 
வாழ்வு -
பகலை இழந்த இருள் 

 பூமியெங்கும் 
மனித பிறவிகளின் அடையாளங்களே 
என்னைப் போலவே ..!

நான்
நான் எதுவுமே நினைப்பதில்லை 
காரணம் -
நினைப்பது எதுவும் நடப்பது இல்லையே 
நடப்பது எதையும்  - நான் 
நினைப்பது இல்லையே 

வறுமை
வறுமைக் கனாக்களின் 
வாடிய  கோலங்கள் 

நேசக் கரங்களின் 
நெருடல்கள் 
பட்டுப் போனதால் 
பரிதவிக்கும் வாழ்வு 

துயரச் சின்னங்களாக 
வாழ்க்கை நிகழ்வுகள் 
ஓரத்தில் நின்று 
ஓரக்கண்  சிமிட்டும் 

வீழ்ந்த பொழுதும் 
ஆழ்ந்தத இருளைக் 
கக்கி விட்டு -
ஆறுதல் சொல்லும் 

சாதனைகளை -
சாஸ்திரம் பார்த்தே 
இளைத்துப் போன 
இதயமும் -
களைத்துப்போன 
கால ஊர்வலமும் -
ஒலி  பாச்சி 
ஓவெனக் கத்திய 
உதடுகளும் 
ஊமைப் போராட்ட 
உபன்னியாசம் செய்யும் 

கால நகர்வுகள் 
கடுகதிச் சிறகை 
விரிக்க - 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !
உதிர்வின் ஓரத்தில் 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !

உன் நினைவுகள்


என் கண்ணீரில் கரைந்து விடுமா

உனதான என் நினைவுகள் 

உன் புன்னகையில் மறைந்து விடுமா

எனதான உன்  நினைவுகள் 

இங்கு நான் வருந்தி என்ன பயன்.?

ஒடியே வந்திடுவேன் வெகு விரைவில்

மழலையாக உன் மடியில்..

மாறாத பாசம்  கொண்டு மார்போடு அணைத்திடு

மறந்திடும் அப்போது என் துயர் அனைத்தும்