வியாழன், 15 ஆகஸ்ட், 2013

வறுமை




வறுமைக் கனாக்களின் 
வாடிய  கோலங்கள் 

நேசக் கரங்களின் 
நெருடல்கள் 
பட்டுப் போனதால் 
பரிதவிக்கும் வாழ்வு 

துயரச் சின்னங்களாக 
வாழ்க்கை நிகழ்வுகள் 
ஓரத்தில் நின்று 
ஓரக்கண்  சிமிட்டும் 

வீழ்ந்த பொழுதும் 
ஆழ்ந்தத இருளைக் 
கக்கி விட்டு -
ஆறுதல் சொல்லும் 

சாதனைகளை -
சாஸ்திரம் பார்த்தே 
இளைத்துப் போன 
இதயமும் -
களைத்துப்போன 
கால ஊர்வலமும் -
ஒலி  பாச்சி 
ஓவெனக் கத்திய 
உதடுகளும் 
ஊமைப் போராட்ட 
உபன்னியாசம் செய்யும் 

கால நகர்வுகள் 
கடுகதிச் சிறகை 
விரிக்க - 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !
உதிர்வின் ஓரத்தில் 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக