வியாழன், 15 ஆகஸ்ட், 2013



குறுவிழி அசையும்-குவிந்திடும் இதழின்
முறுவலில் விளையும்-மோகனப் புன்னகை
நறுந்தேன் ஒழுகும்-இதழிடை திறந்து
வருந்தேன் மழலை -அமுதம் வடியும்!

எமது இன்பத் தமிழ்ச் சொற்களைப் போலும்
பூ மது இதழ்களில் புன்னகை விரிய
தாமரைப் பூவோ தரையில் மலர்ந்து
ஆமது அழகின் அற்புதக் காட்சி!

உன்னில் தன்னையும் உயிர்க்கலந் தானையும்
கண்ணில் காணும் கவினுறு வடிவே (மகனே )
பண்ணில் இசையே! பாவிடை நூலே!
கன்னற் சாற்றில் கலந்து வானமுதே!

தாயின் குருதியை தமிழோடு சேர்த்து 
பாலாய் பருகிடும் பசுங்கிளியே,நீ
கேளாய் கேளாய் கின்கினிக் குரலில் 
தோலாத் தமிழில் ஒரு சொல் கிளர்ந்தால் 
வாழ்வே அதுவாய் மகிழும் நெஞ்சம் 
தந்தையின்  இதயம் ஆனந்தம் கொள்ள
என்னருத்  துறையெல்லாம் இனியவராய் வாழ்க!
இருளினை அகற்றும் இரவியாய் நெஞ்சின் 
இருளினை அகற்றும் மதி கதிர் பரப்பி 

 செம்மல் நீயெனசெகத்தோர் போற்ற
செயலால்  தீமைத் தூசுகள் நீக்க 
நன் மகனாய் நீ நலமுடன் வாழ்க!
என் தமிழ்க் கவிபோல் என்றும் வாழ்க!
தமிழ் போல் வளர்ந்து
தமிழ் போல் வாழ்க!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக