வியாழன், 15 ஆகஸ்ட், 2013




சொட்டு சொட்டாய்வடிகிறது 
கண்ணீர் 
எனக்குள் இரவெல்லாம்.
உன் நினைவுகளாய் 

துயரம் கூட 
என் மனசில் 
என் உணர்வுகளில் 
உள்ளம் உருகி 
ரகசியமாய் அழுகிறது 
எப்படி வந்தது 
உனக்கு இந்த் உறவு 
நான் 
அவளின் உயிர் தோழியாக அல்லவா 
ஆகிவிட்டேன்.
உள்ளம் 
தேடி தேடி அழுகிறது !


உன் மீது 
ஒரு மூச்சுக்கூட‌
சுவாசமாய் விட முடியவில்லை.
என் மீது
எப்போதும்
உயிரின் உயிராய்
ஒரு நட்பையாவது 
மனதில் தொடர 
நினைத்த போது 
உன் பாசத்தின் நினைவுகள் 
என் மனதில் 

துடித்து துடித்து
இதய வானில் 
ஒரு மாற்றலாய் 
என்னை 
காற்றின் 
வேகமாய் 
தேடி தேடி வீசுகிறதே !

என‌க்குள்
நீ எப்ப‌டி இப்படி வ‌ந்தாய்?


உன்னை நினைவுகளாக்கி 
மூச்சாகிக் கொண்டிருந்தாலும் 
அந்த‌ நினைவு  கூட‌
தேடி தவிக்கின்றது 
எங்கிருந்து நேசிக்கின்றாய் ?
எங்கிருந்துசுவாசிக்கின்றாய்  ?



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக