வியாழன், 15 ஆகஸ்ட், 2013



கலையுலகப்  பயணத்திலே -சகீ உன்றன்
 அன்பினைப் பெற்றிருந்தேன்
பிறந்த மண்ணிலே உன்றன் கரம் 
பிடித்து நடந்திடக் கற்றிருந்தேன்

 தடுத்தடுமாறி நடந்தவுடன் -உனக்குநான்
தொல்லை தந்து வந்தேன்
குதலை மொழிபேசியவுடன் உன்னருள்
போதனையைக் கற்றுத் தந்து விட்டாய் 

உயிர் மூச்சின் மேலாய் - என்னைத்
சுவாசித்துப் பார்த்தவள் நீ 
உனக்கும் எனக்கு முள - உறவை
எப்படிச் சொல்லி அழைப்பது ?

எனக்கு தோழியானால் -என்ன 
என்றும் நீ ஆசான்லவோ?
காலத்தின் நகர்வினைப் -மறந்து 
உயிரென   நேசித்திட வேண்டுமம்மா?

மனதிலே பாசம் ஊட்டி -உள்ளத்து 
உணர்விலே நேசம் காட்டி 
இதயமென இடம் -தந்தே 
உரிமையுடன்  உறவாடச் செய்வாய்

கண்ணுக்கு எட்டாத தூரம் வரை -வாழ்க்கை 
மாறிடும் நானறிவேன்
சுடராகி என்னுயிரே -தினமுமே 
சூரியனாய் வந்துவிடு அதுபோதும் !
08.05.2013







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக