வியாழன், 15 ஆகஸ்ட், 2013

மரம்



கனி தரு மரமெல்லாம் 
வண்ண நிறங்களில் 
"பல்ப் "பழங்கள் 
தொங்கும் 
பள்ளி முகப்பெல்லாம் 
விஞ்ஞான  வீறாப்பில்  
வர்ண ஜாலங்கள் 
கண்ணா மூச்சி விளையாடும் 

அழுது  வடிந்த
தெரு விளக்கெல்லாம் 
அங்கம் அங்கமாய் 
விமர்சிக்கும் 

அலங்கார மேடையில் 
மௌலவியின் குரல்
 "லௌட்ஸ் பீக்கரில் "
முகாரி பாடும் 

சிதறிப் பரந்த 
ஒளி வெள்ளத்தை 
மக்கள் வெள்ளம் 
இருட்டடிப்புச்செய்யும் 

பாலியற் பேதம் 
மறந்து அங்கே 
பாரதி கண்ட 
"சமத்துவம் நிலவும் !

நாளைய கந்தூரிப் 
"பொரியலின் "    வாசம் 
நாசியை 
மெல்லத் துளைக்கும் 

பட்டானி வயிறுகளின் 
நாவில் ஊறும் எச்சில் 
நாளைய கனவுகளை 
விரிக்கும்!    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக