வியாழன், 15 ஆகஸ்ட், 2013எம்  மதத்தை 
நேசிப்பவர்கள்  உள்ளவரை 
பிக்குகளின் போராட்டம் 
தோல்வியடைந்து கொண்டே யிருக்கும் 

மத நடவடிக்கைகளைக் 
கேவலப் படுத்தும் 
துரோக அரசியல் 
இனிமேலும் 
எமக்குத் தேவையில்லை !

ஹராமானவற்றுக்கு 
ஹாலாலைக் காட்டி
 நாவுகளுக்கு ருசி பார்க்கச் சொன்னவர்களை 
கொதிக்கும் மண்ணில் 
நிறுத்தி வைப்போம்

வேடிக்கை என்னவெனில் 
எங்களுக்கு 
சுதந்திரக் காற்றை 
பெற்றுத் தருவதாக 
வாக்கு உரிமைகளை 
வாங்கிச் சென்றவர்கள் 
எங்களது 
மன நிம்மதிகளையும் 
சுரன்டிச் சென்று விட்டனனர் 
போதி மரத்துப் போதனைகளுடன் 

இவர்களின்
சாதி மத பேதங்களால் 
புதைக்கப்பட்ட
நம் சமூகம் இன்று
சோதனைகளுக்கு உள்ளாகி நிற்கின்றது 

அவாமானம் எதுவுமின்றி 
தன் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த
பெண் பூக்களும் 
வாடிப் போய் விட்டன .

மஞ்சல் துண்டுகளின் அடவாடித் தனங்களால் 
உடுமாணங்கள் 
உருக்குலையும்  வேளைகளில் 
தலையாட்டும் பொம்மைகளாய் 
உயர் தலைகள் மௌனம் சாதிக்கின்றன 

இஸ்லாமிய போதனைகளை 
அரசியல் லாபத்துக்காக ஈடு வைத்துவிட்டு 
பட்டம் பதவிகளில் 
எம் .பி   தம்பிகள் -
வாழும் வரை 
எங்கள் சமூகம் 
மீண்டுமொரு -
அய்யாமுல் ஜாஹிலியா காலதத்தை 
தரிசிக்க காத்திருக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக