வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நிம்மதியற்ற தேடல்



கண்ணுக்கு காணாத தென்றல் காற்று 
வீட்டுக்குள்ளிருக்கும் 
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று 
முற்றத்தை நோக்கி பாய்கிறது. 

மரக்கிளைகளை தேடி 
அலைகிறது காற்று. 

புழுக்கத்தின் தாக்கம் 
வியர்வையின் கசிவு 

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை. 

நாவில் வறட்சி 
தாகத்தில்  உமிழ் நீர் வற்ற 
தொண்டை அழுது துழாவுகிறது. 

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட 
ஒரு மண்ணறையை நோக்கித்தான் 

நிம்மதியற்ற தேடலாய்  வாழ்க்கை 
நிலையற்றுக் கிடக்கின்றன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக