வியாழன், 15 ஆகஸ்ட், 2013மனம் 
குரங்கு போல் 
மரம்விட்டு மரம் தாவும் போதெல்லாம் 
(குணம் மாறும் போதெல்லாம் )
மனிதயினம் புலம்புகின்றது 
இதயங்கள் துடிக்கின்றது 

யாழ்மண்ணை விட்டு 
துரத்தி யடிக்கப்பட்ட 
மனித ஆத்மாக்கள் 
இன்று -
லண்டன் 
சுவீஸ் 
இத்தாலி 
இந்தியா 
இத்தியாதி இத்தியாதி 
நாடுகளில் 
தஞ்சமாகி விட்டது 
வசிப்பிட மாகி விட்டது 1

பிறந்து வளர்ந்த மண்ணில் 

ஆணி வேர்களுடன் 
பிடிங்கி வீசப்பட்ட 
ஏழை எளியோர்கள் 
நாயிலும்  கேவலமாய் 
அகதி முகாம்ங்களில் !

குருதிப் பாலில் 
நக்கி சுவைக்கும் (உறிஞ்சிக் குடிக்கும் )
யுத்த அட்டைகள் 
காம உணர்வுகளில் 
மரித்துப் போகும் !

மனிதாபிமானத்தை இழந்து போகும் !

சுதந்திர மார்பில் 
அத்து மீறல் செய்யும் 
சப்பாத்துக் கால்கள் 
மான மரியாதைகளை 
மிதித்துப் புதைக்கும் !

தோண்டிப் பார்க்கும் 

அதனால் 
வேலிகளே  பயிர்களை மேய்வதால் 
மனிதயினம் புலம்புகின்றது 
இதயங்கள் துடித்தழுகின்றது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக