சனி, 24 ஆகஸ்ட், 2013

தன்னுரிமையை காப்போம் ..!நம்மில் ...
நம்பிக்கையற்றவர்கள் 
ஏமாற்றக்காரர்கள் 
உள்ளவரையில் 
எம்முரிமை 
கேள்விக் குறிகளாகவே 
கணிப்பிடப்பட்டுக் கொண்டிருக்கும் .

தேர்தல் காலங்களில்
போலி வார்த்தைகளை
தேனாய்க் கொட்டும்
துரோகிகள் (பொய்யர்கள் )
எமக்குத் தேவையில்லை

மக்களுக்கு
பாசம் காட்டி
வேஷம் போடுவோருக்கு
தன்னுரிமையை வழங்கிடாது காப்போம் ..!

எங்களுக்கு
தொழில் வாய்ப்புக்களை
பெற்றுத் தருவதாக
வாக்கு உரிமைகளை
விட்டுச் சென்றவர்கள்
எங்களிடமிருநத
மன நிம்மதியினையும்
இழக்கச் செய்து விட்டனர் .

தான் தோன்றித்தனம் தான்

இவர்களின்
குள்ள நரிப் புத்திகளால்
மிதிக்கப்பட்ட
துவைக்கப்பட்ட
நம் சமூகம் இன்று
சுடர் விட்டு எரியும் பிரச்சினைத் தீயில்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றது ..!

மத பேதம் எதுவுமின்றி
மான மரியாதையோடு
வாழ்ந்து கொண்டிருந்தசமூகமும்
சித்ரவதைகளுக்கு -
உள்ளாக்கப் பட்டுவிட்டன .

அராஜக அடக்கு முறை
அட்டகாசங்களினால்
தன மானம்
தலை குனியும் வேளைகளில்
வாயிருந்தும் ஊமையர்களாய் ...,
காதிருந்தும் செவிடர்களாய் ...
கண்ணிருந்தும் குருடர்களாய்
பணம்
பட்டம்
பதவிகளுக்காய் ..
முண்டமாய் மாறி நிற்கின்றன ..!

இதயங்களை இழந்து விட்டு
செல்வாக்கில்
வளம் வந்து கொண்டிருக்கும்
பச்சோந்திகள்
அரசியலில் உள்ளவரை
மண்ணில் வாழும் வரை
எங்கள் சமூகம்
என்றென்றும்
திசையறு கருவிய்ற கப்பலாகவே
பயணிக்கும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக