உரசிக் கொண்ட கனவு
காயமாகிப் போனது
போலி உறவுகள்
கொண்ட -
மனித ஜென்மங்கள்
விலையேற்றம்
உயிரை பேயாட்டம் போடச் செய்கின்றது
காற்றும் -இனி
காசு கேட்கும்
தென்றலை தடவிக் கொள்வதற்கு !
காசு இல்லாமல்
மண்ணில்
என்னதான்வாங்க உண்டு
பொருளாதாரம் -
மனித உழைப்பாளிகளின் ]
இயந்திர சக்தி
வறுமை
ஏழை எளியோர்கள்
பாடி மகிழும்
இன்னிசைக் கீதம்
யாசகம்
பணத்தில் மிதக்கும்
பிணங்கள் மீது பீச்சும்
போலி ஈக்களின்
இரைச்சல்
பசிக் கொடுமையை
இலங்கை மண்
கற்றுத் தந்த பாடம்
சந்தோசம்
படு பாவிகளின்
உள்ளத்து உணர்வில்
கண்ணீர்
போர் சுழல்
கற்றுக் கொடுத்த
அரிச் சுவடி !
நாங்கள்
மனிதர்கள் என்ற போர்வையில்
சோக சுமைகளைச் சுமந்து கொண்டு
ஆறாத வடுக்களை அணைத்துக் கொண்டு
வேதனை தார் போட்ட
சோதனை தெரு வழியே
விரகத்தி
பயணம் போகும்
விடியலின் பிறப்புக்கள்!
மண்ணின் மாந்தர்கள் !!
யுகத்தின் விலங்குகள் !!!
விடியலின் கைதிகள் !!!!
பொறுமையின் வாரிசுகள் !!!!!
இறைவனின் படைப்புக்கள் !!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக