பெண்மைகளை சிதைந்திட்ட
உண்மைகள்
கறைகளை பூசி
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள் !
பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்
புழு அரித்துப் போன
பேச்சுக்கள் ...
..
பெண்களை சுரண்டியே
அவரவர்
தரங்களை நிரணயித்த
அசிங்கங்கள்
வலிசல்களைப்
புறக்கணித்தே எழும்
எம்
புதுமைத் தத்துவங்கள்
இன்று உமதுடா ....!
நாளை எமதே ..!என்ற
எங்களின் இலட்சியங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக