திங்கள், 25 மார்ச், 2013

கள்ளம் கபடம் இல்லாத .. 
உறவைத் தேடு !

அன்புக்காக உறவைத் தேடு!

ஆனால்.......

இதயமே இல்லாத உறவைத் தேடாதே!

அன்பில்லாத இதயத்தை தேடாதே

ஏனெனில்

ஆயுள் வரை உன்னால் கலங்க முடியுமா ..?

சுமையை தாங்க முடியுமா ...?
உடலையும் உயிரையுஞ் சேர்த்து - நல்ல 
விண்ணையும் பூமி மண்ணையுஞ் சேர்த்து
அருள் மறை திருக் குர் ஆணில் 
அற்புதவசனங்களை இறக்கி வைத்தான் இறைவன் ...!
என் வயசு என்னை விட்டுப் போகலாம் 
என் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல்........
ஆனால், 
என்னுள் வாழும் ..
உங்கள் நினைவு 
என் இதயத்தில் 
தாயே 
வாழ்ந்து கொண்டு இருக்கிறது வளந்து கொண்டு இருக்கிறது !
மனசு நிறைந்த
உறவு- 
மனவிட்டு மனம் தாவினால் 
அது துயரில் 
வாடித் துடி துடிக்கும்...!


உணர்வில் கலந்த நட்பு 
உணர்ந்து பார்க்கத் 
தவறினால் அது 
பிரிவை நோக்கும் ..!
அலைந்து அலைந்து 
ஒரு -அன்பான 
நேசிக்கின்ற ஜீவனைத் 
தேடுகின்றேன்

இங்கே ..
நேசிப்போரைக்காணவில்லை 
மிதிப்போரைத் தான் 
காணு கின்றேன் ..

நயமடைவார்


ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின் 
படி ,செய லா ற்றுகிறான் -ஆம் !
இவ்வுல காளும் இறைவனோ நாம் செலும் 
பாதையை மாற்றுகிறான் .

மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் !-எக்
கணத்திலும் மனத்தை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !

முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே -மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே !

மனமோ ஆன்மாவுக்குள் ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்!

மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் -நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !

கரையான்களாய் அரிக்கும் மனசு .....

பழுதுகலாக்கி விட்டு 
சங்கிலித் தொடர்களாய் -
சந்தோஷம் கொண்டாடும் ..!

ஆனாலும் -
தூசுகளிடமிருந்தோ ....
தூள்களிடமிருந்தோ .... 
எனக்கு -
எந்த வியாதிகளும்
தடவித் தரவில்லை அவை ...!

பார்த்தாயா.....?
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?
கண்களில் பட்டதா ...?
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?
மழை தூவுகிறது -
பொந்துகளில் ...!

அறிவு படைத்த மனிதன்
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!

சாதி மத பேதங்களில் .....
மானிடர் வாழ்வு
போராடுகிறது ...!

சொத்து சுகங்களில்
உயிர் -
பலியாகிறது ...!

உறவுகளின் போராட்டத்தில்
மனிதம் -
அழிகின்றது ...!

பகைவர்களின் எதிர்ப்புக்களில்
உரிமை -
இழக்கப்படுகிறது .....!

தோழியின் மனம் ,
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!

இதயத்தின் ஏக்கங்களோடு,
மனிதர்களின் செயல்களோடு -
காலத்தின் தரிப்பிலே ......!
மனிதர்களின் பகையிலே .....
துயரத்தின் உணர்வுகள் ....
உணர்வுகளின் தாக்கங்கள் ....

இடிபோல
முழங்கியெழும்....!
பட்டாசு போல
சிதரிப் போகும் ....!

ஒரு பெரு மூச்சில்விழும் காட்சிகள் !

விழிக் குளங்கள் 
கண்ணீரை இறைக்கும் !

விசனமில்லாத 
முகங்களுக்குள் 
விஷமேறிய தோள்களாக
சில முகவரிகள் ....!

கிடைக்காத போதும்
கிடைத்த பொழுதும்
கேள்வியையே
வெளியிடும்
மூச்சுக்குள் ...!

பாலையும் நீரையும்
பகுத்தறிந்து
நோக்கும்
அன்னமும் இதுகண்டு
அலறித்துடிக்கிறது ..!

ஓ...,
அந்த இருளுக்கும்
வேலையில்லை
மனிதர் மனங்களில் தான்
குடி கொண்டது ..!

கொடுமையும்
கொடிய பார்வையும்
என்னில்படுவதனால்
என் விழிகள்
என்றுமே ......!
சோகம் சுரந்த கோபம ...!
வாழ்வில் 
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , 
வேறு வழி புரியவில்லை ..!

எல்லா விதமான தொல்லைகளையும் 
அகற்றி விட்டால்,
வாழைப்பழத்தை விட மென்மையானது 
இதயம் ..!

நீ-
செய்வது தான் சரியென்று நடந்தால் ,
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..!
நான் -இனி
விலகித்தான் போக வேண்டும் ..!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!

சோகம் சுரந்த கோபம்
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .!
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று
நீ ,
நினைத்துப் பார்க்கலாம் .!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!

உன்,
தொல்லைதரும் நிகழ்வுகள் ...
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,
தீயாய் எரியும் விறகுகளாய்
என் ஆத்மா
எரிந்து கொண்டிருக்கிறது ..!
புகைந்து கொண்டிருக்கிறது ..!!
உன் எண்ண அலைகள் என்னை யிழுக்க
பின்னே சென்றேன் உன்னை நாடி 
முயலாய் நீயங்கு 
ஆமையாய் நான் இங்கு 
என்ன சொல்ல முயல் +ஆமை=(முயலாமை)..!எனது 
உன்னை நேரில் காண !