வியாழன், 29 மார்ச், 2012

சகீ
தாகத்தில் வறளும் நாவாய்
நீ இருந்ததால்..,
ஊ ற்றெடுக்கும் கிணறாய்
நானிருப்பேன்...!
அழகு
வரம் பெற்றது
திரையில்
நடிகை...!
பேனா
தலை குனிந்தது
மனங்களில்
தூய்மை யில்லையென்று...!

நமக்கே தான் பரிசு...!

போட்டிக் கொரு கவிதை போட்டுப் பணப் பரிசை
ஈட்டிக் கொள வேண்டும்!என்னுமோராவலாற்
பாட்டுப் புலமை சார் பாவலர்கள் சூழ்ந்த,இந்
நாட்டுப் புலவர் நடுவன்,நான் தூசென்றே
எண்ணிக் கலங்கா (து), இறுககமுடன் யானின்று
மன்னும் பொருட் சார் மகுடத்தில் பாவாக்க முனைந்தேன்!

தலைப்பு தடுமாற்றம்! தக்கதலைப்பற்ற
மலைப்பு எனக்கு...!
மகிபனை வேண்டிடுங்கால்.....!
மோட்டு வளை போன்று ,முண்டு கொடுக்கின்ற
வீட்டுக்காராசி விற்புருவத்தால் வெட்டி விலாசுகிறாள்!

''புத்தகம் தூக்கிப்புறப்பட்டமுத்த மகளோ
வித்தகம் போதுமே! வேண்டாம் இனிப்படிப்பு''
என்று கூறாமலே இன்றவளோ வீட்டினிலே
நின்று விடடால்!அந்த நினைப்பு வருதா....?
ஆமாம்.........,
செல்வி எனதுமகள் சொல்லாது பள்ளிக்குக்
கல்விதனை விட்டகவலையால் நீ மட்டும்
கலங்குவதாய் எண்ணாதே!
கண்ணே! நின் கூற்று
விளங்குதடி என் செய்வேன்..?வேதனை தான்
என் மகளும்-
கற்று வரட்டும்! நற்கல்வியெனும் செல்வத்தைப்
பெற்று வரட்டும்! பெயர் பெறட்டும்!
என்றே நான் விட்டேன் !

மகளே! நீ மூத்த மகனாய்ப் பிறந்திருந்தால்
கவலையின்றி , யான் கட்டுப்படுகின்ற
நிலைமைக்கு ஆளாகி நிச்சயம் நான் வாடேன்!
வதுவைக்குச்சிதனங் கேட்டுச் சீணுங்கும் பொடியர்க்கு
மாதனமாய்க் கல்வியையும் வைக்கலாமென்று,
''ஜோப்புக்கும் , உன்னிடத்தில் யோக்கியதை''
உண்டென்றும்,
செப்புதற்கு ஏலாமற் செய்து விட்டு நிற்கின்றாய்!
ஒப்பனையிற் கூடிட்ட ஒருவனை நீ வெறும்
கற்பனையிற் போட்டுக் களிக்கின்றாய்
புத்திரியே....!''
எனப்பாட்டு அந்த இலக்கியப் போட்டிக்கு
முனைப்பூட்டி நானெழுத முனைகின்ற போழ்து சீ
மாட்டி என்னருகே வந்து திருவாய் திறந்தே
"போட்டிக்குப் பாட்டுப் புனைகிறது போது முங்கள்
பாட்டுக்குக் (கு)
இருந்து கொண்டு பாப்புனைந்தாற்போதுமோ?
போட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படுங்கள்!
அன்னவளைக்-
கட்டிக் கொடுத்து "கரச்சலை" நீக்கிடுவோம்!
எட்டி நடந்து இனிவரனைத் தேடுங்கள்,
என்றிரைந்தாள்!

உச்சவரம்பு! உயிர்குடிக்கும்
சீதனத்தால்-
அச்சமிகக் கொண்டு அலைகிறேன்!
எவ்விடத்தும்
"பிச்சை"கிடைக்காது பின்வாங்கி நான்வந்த
அச்சமயம்-
கருணை யுள ஒருவன்
கை கொடுக்க முன் வந்தோன்!
வரனை யடைந்த மகிழ்ச்சியாலே-
துள்ளுகின்றேன்!
கட்டிக் கொள்ள வந்தோன்! கற்றவன் தான்
தான் நடத்தும்
பழக்கடையொன்றின் பேருரிமைக்காரன்.
சற்று தலை மொட்டை
சம்பியனைப் போற் தோற்றம்!
முற்றும் உடல் முறுக்கு!
முப்பதுக்கு கீழ் வயது!
மாப்பிள்ளை கிட்டி விட்டார்!

மாத வருமான ஆசிரய மாமன் ,யான் என்றனுக்குப்
பூதா காரமான பொல்லாச் சுமைகள்!
ஏதும் மீதமில்லை! என்றாலுங் கல்யாண
மாது! எனது மகள் மணமகளாய் ஆகுவதை
யானினி மேல்-
விரும்பாதிருக்கலாமோ? வேண்டாமே இப்பொறுப்பு
பெரும்பாடு!
ஈதென்றே பேசாதிருக்கனுமோ?
ஆம்
வாழ்வுச் சுமையை வாஞ்சையுடன் ஏற்று,மணக்
கோலம் புனைந்து கொழுநரா யாக வரும்
மருகர் தம்மைக்கு-
கணையாழி ஒன்றினைக் கட்டாயமிடும்பொறுப்பு
மனையாளும் இந்த மாமனுக்கு உண்டல்லோ?
அதை நினைத்தே -
இறைவனை, யான்வேண்டி எழுதுகிற போழ்திற்
குறையாதே ! வந்து குடும்பத் தரசியே!
பொறுப்புப் புரியாய்ப் புருஷன் என என்னை
வெறுப்புக் கொண்டு விடாது
இருந்து பார்!

போட்டிக்கு கவிதையைப் போட்டு-
முதற்பரிசை
ஈட்டிப் பணமெடுத்துப் இலங்கு பொன்மோதிரத்தை
வாங்கி,
அவர் விரலில் வதுவை நாட் சூட்டி
நீக்கித் துயர்.....பெரு மூச்சை..!
விடுகின்ற எண்ணத்தை விட்டு விடாமற்
பாடுகின்ற பாட்டோடு
பாட்டெழுதிப் போட்டேன்..!
மனையாளே...!
பார்
நமக்கே தான் பரிசு...!
உன் உறவுகள்
வளர்ந்து விட்ட,
என் மனத் தோட்டத்தி ல்
இன்று-
உன் நினைவுகள் மட்டுமே
பூத்து ..,
மணம் வீசுகின்றது....!
மனித வாழ்வில்
பிறப்பு......,
ஒரு முறை
இறப்பு......,
ஒரு முறை
அப்படியாயின்
உன்னை நினைப்பது
பல முறை
இது ஏன் தோழி..?
தென்றல் வருடும் சுகமும்..,
உன்
நினைவுகள் தரும் நிழலும்..,
உன்
ஆறுதல்கள் தரும் வார்த்தைகளும்..,

துய்க்க மிகவும் விருப்பம்.
தோழி...!
தோழி..,
பூக்களின் இதழ்களாய்
என்னுள்....நீ
மலர்ந்தால்..,
நான்
நறுமனத்தின் வாசமாய்
உனக்குள்
மணம் வீசுவேன் ...!

பிரிவுத் துயரத்தில் வாடிய மனசு

வானொலிக் குயிலின்
குரலோசை -
பட்டுப் போனதால்
பரிதவிக்கும் வாழ்வு ..

துயரச் சின்னங்களாக
வேதனை நிகழ்வுகள்
ஓரத்தில் நின்று
ஓரக்கண் சிமிட்டும் .....

அழுத பொழுதும்
ஆழ்ந்த துயரை
துடைத்து விட்டு
ஆறுதல் சொல்லும் ....!

வேதனைகளை -
சுமந்து சுமந்ததே ...

துடித்துப் போன
இதயமும் -

களைத்துப் போன
மன உணர்வுகளும்
கண்ணீர் வடித்து
ஓவெனக் கத்திய
உதடுகளும்
ஊமைப் போராட்ட
உபன்னியாசம் செய்யும் ..

கால நகர்வுகள்
கடுகதிச் சிறகை
விரிக்க -
உயிர்ப் பூ
உறங்கா திருக்கும்

வாடிப் போகும் என்னுயிரில்
உயிர்ப் பூ
உறங்காதிருக்கும் ..
உதிர்வின் ஓரத்தில்
சருகாய் கிடக்கும் ...!
கவிதை என்பது இறை அருளாகும்
எழுதி பெரு பேறு...!
கண்ணீர் துடைக்கும் கருணை உள்ளங்கள்
இதயத்தை தடவும் தோழி ....!
அன்பு உள்ளங்களை துன்படுத்தாது வாழ்வது
நல்லவர் இதயத்தின் பண்பு ...!
இலக்கிய உள்ளங்களை உயிராய் மதிப்பவன்
தாகத்தை போக்கும் ஊற்று ...!
ஏழைக்கு உதவி இல்லறம் சேர்த்தல்
நல்லவர் செய்யும் தியாகம் ...!

அறிவைத் தீட்டி..!

எழுத்தாளர் என்கின்றார் ! எழுதுவோருள்
இவர் தானாம் மா மன்னர் ! செப்புகிறார் !
''பழுத்தபழம் '' போற் பேசும் இவரோயிங்கு
படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம் தான்
அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக .....?
அசலுண்மை ! கடல் நீரோ உப்பு என்றார்
வெளுத்த் நிறம் பாலென்றார்!வானில் நீநதும்
வெண்ணிலவின் ஒளி தன்மை என்று சொன்னார் !

''நா ''மெத்த தடித்ததனால் ''நான் '' நா னென்று
நலங் கெட்ட வார்த்தைகளை கொட்டுகின்றார்
''பா '' மெத்தப் படைத்தளித்த பாவாணர் போல் !
பல மேடை கண்டவர் போல் பகருகின்றார் !
காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
கண்ட படி நாலைந்தைக் கிறுக்கி யுள்ளார் !
நாமத்தை அச்சினிலே !''பெரிதாய்ப் ''போட
நாய் படாப் பாடு பல படுகின்றாரே!

பெண்களைக் கவி செய்வார் ! பெண்களே இப்
பெருவுலகின் பேறேன்ரும் சாற்றி நிற்பார்
பெண்னோருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
பித்தரிவர் '' பெருமனது '' இடங் கொடாது
வண்டமிழைக் கொண்டு இவர் வசைகள் பாடி
வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே !
மண்டைதனில் கனம்கொண்டார் !அறிவைத் தீட்டி
மனமாற்றம் பெற்றுய்ய வேண்டு கின்றேன் ....
உயிர் இருந்தால் அன்பை பெறலாம்
அன்பு இருந்தால் உயிரை நேசிக்கலாம்
நேசிக்க தெரிந்தால் நட்பைப் பெறலாம்
நட்பைப் பெற்றால்
அதை பொக்கிசமாய் வைத்துக் கொள் ..!

நிறைமதி ராஜ் சுகாவோடு ...!

முகந்தனில் புன்னகை வீசும்
முழுமதி போலொளி பாயும் !
சுகந்தமே தவழ்ந்திடும் உள்ளம்
சுவை பல தினந்தினம் துள்ளம் !
அகத்தினைக் கவர்ந்த பண் பாளன்
சுகாவின் விழிகளுள் வாழ்வோன்
செகந்தனில் இவனுடன் வாழும்
திருநாளும் அவளுக்கு வந்திடவேண்டும் ..!

கவி பல புனைகிற கவிஞன் !
கலைகளைப் பெற்றிடும் இளைஞன் !
செவியினில் இவன் குரல தேனாம் !
தினமுமேகுளிர் நிலா ஆனான் !
சுவை பல புகழ்ந்திடும் அறிஞன்
அன்பினை நல்கிடும் மனிதன்
புவியினில் இவனுடன் வாழும்
பொன்னான நாள் சுகாவுக்கு வரவேண்டும் ..!

காதலை அவளுக்குள்ளே விதைத்தான்
கண்களில் காவியம் படைத்தான் !
கோதையவள் துடிப்பினை நிறைத்தான் !
குங்குமம் கன்னமாய் செய்தான்
ஆதவன் போலொளி உடையோன்
அழகினில் நிறைமதி யானோன்
மேதினி மீதினில் சுகாவோ (டு )
மிக்க நாள் வாழ்ந்திட வேண்டும் ...!புதன், 28 மார்ச், 2012

உண்மை நட்பு மணமாய் வீசும்
போலியுறவு பூக்களாய் உதிரும்
நீ ..,
என் அருகில் இருந்தால்
நான் -
இவ்வாறு கூறுவேன்,
என் இதயத்தில் உனக்காக கொண்டுள்ள
காதல்-
எல்லையற்றது ..!

பரந்து விரிந்தசமுத்திரத்திலே
எழும்பும்-
அலையைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ....!

வானத்தின் உச்சியிலே
பிரகாசிக்கும் விண் மீனைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ...!

கானகத்தில் தனியாக
பூக்கும் பூவைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ...!
மிகவும் வேண்டியது

பணிவு

மிகவும் வேண்டாதது

வெறுப்பு

மிக பெரிய தேவை

நம்பிக்கை

மிகக்கொடிய நோய்

பேராசை

மிகவும் சுலபமானது

குற்றம் காணல்

தரமற்ற குணம்

பொறாமை

நம்பக்கூடாதது

வதந்தி

ஆபத்தை ஏற்படுத்துவது

அதிக பேச்சு

செய்யக்கூடாதது

நம்பிக்கை துரோகம்

செய்யக்கூடியது

உதவி

விளக்க வேண்டியது

சோம்பேறித்தனம்

உயர்வுக்குவழி

உழைப்பு

நழுவவிடக்கூடாதது

வாய்ப்பு

பிரியக்கூடாதது

நட்பு

மறக்கக்கூடாதது

நன்றி

ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது

இறை பயம்
மரணிப்பவர்கள் மீண்டும் வருவதில்லை -ஆனால்
மனதோடு நிலைத்து (நினைத்து )வாழ்வார்கள்
உண்மையாக அன்பை (மன நிறைவோடு )-நேசிப்பவர்கள்
மனதை நோவிப்பது இல்லை ,அவர்கள் போல் நட்பு தேடினாலும் கிடைப்பது இல்லை
ஒருவரைப் போல் மற்றவர்களும் நேசிப்பார்களா என்பது கூட புரிவதில்லை ...! தெரிவதுயில்லை ...!!
உண்மை நட்பை களங்கமில்லாது காப்பாற்றிக் கொள-அது உயிர் உள்ளவரை உன்னோடு இருக்கும்
மறைந்தாலும் மாறாதது உண்மை அன்பு - நட்பு ...!
தாய் யின்றேல் குழந்தை யின்றே
சொல்லின் றாகின் கவிதை யு மின்றே
அன்பில் லிருந்து நட்பைப் பெறுவது போல்
உள்ளத் தினின்றும் எழும் பாசம் ...!
முடிவதில்லை ....!
மனதில் வளர்வதால்
நட்பின் ஆழம் புரிவதில்லை

இன மொழி பார்ப்பதனால்

உறவின் தொடர்பு அழிவதில்லை

அன்பை பெறுவதற்கு
சிபார்சுகள் தேவையில்லை
நட்பை அடைவதற்கு -ஒரு
உள்ளத்தால் மட்டும் முடிவதில்லை

பேசிப் பழகுவதால்
தோழி அருமை புரிவதில்லை
தூரத்தில் வாழ்வதால்
அன்பு குறைந்து போவதில்லை

துன்பங்கள் தடவுவதால்
இதயம் வாடிப் போவதில்லை
அழுது புலம்புவதனால்
போன உயிர் திரும்புவதில்லை

உயிரை படை ப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உயிரை எடுப்பதற்கு -ஒரு
தோட்டா போதுமென்பேன் ...!
தோழி
தினம் தினம்
கழற்றி மாற்றும்
செருப்பு அல்ல..,
என் அன்பு...,
உன் உடம்பை போத்தி மறைக்கும்
போர்வை (ஆடை )என் அன்பு
புரிந்து கொள்....!
பணத்தோடு வருவாள் என்று
வெளி நாடு அனுப்பி வைத்தேன் -ஆனால்
பிணமாய் வருவாள் என்று
எதிர் பாத்திருக்க வில்லை ..
நட்பு உறவே
வயிற்றில் சுமக்கும்
குழந்தையின் பாசம் நிறைந்த
சந்தோஷத்தை விட மேலானது
உன்
நினைவுகளை சுமக்கும்
என் மனசு .
சகீ
உன் நினைவுக்களால்
நான் தடவிக் கொண்டிருக்கும்
சுகமான தென்றல்
எனது கவிதைகள் ...
சகீ...,
வாழும் போது
மனங்களை நோவித்து வாழாதே..!
போகும் போது -
நன்மைகள் வராது
தீமைகள் வரும் ...!
போன வாழ்க்கை
மீண்டும்
திரும்பி வராது ..!.
தோழி
இப்போ
நீ -
சிரித்துக் கொண்டே இரு

நாளை
நான் -
மரணித்து விடடால்
நீ -
அழ வேண்டுமல்லவா .....?
நட்பு உள்ளத்தை நாடினால்
அன்பு சுரந் திடுமே
தொட்டவள் உம் இதயந்தனை
பாசமுடன் அணைத் திடுவாள்
உறவெனப் பழகி டலாம்
கெட்ட காலம் இல்லை இனி உமக்கு
இறைவா ,
மனித நட மாட்டமற்ற இந்த இடத்தில்
நான் -
நிம்மதியாய் உறங்க வேண்டும்
சந்தோசமாய் வாழ வேண்டும்
எனக்கு -
இந்த மர நிழலை
வரமாய் தர வேண்டும் ....!