வியாழன், 29 மார்ச், 2012

நிறைமதி ராஜ் சுகாவோடு ...!

முகந்தனில் புன்னகை வீசும்
முழுமதி போலொளி பாயும் !
சுகந்தமே தவழ்ந்திடும் உள்ளம்
சுவை பல தினந்தினம் துள்ளம் !
அகத்தினைக் கவர்ந்த பண் பாளன்
சுகாவின் விழிகளுள் வாழ்வோன்
செகந்தனில் இவனுடன் வாழும்
திருநாளும் அவளுக்கு வந்திடவேண்டும் ..!

கவி பல புனைகிற கவிஞன் !
கலைகளைப் பெற்றிடும் இளைஞன் !
செவியினில் இவன் குரல தேனாம் !
தினமுமேகுளிர் நிலா ஆனான் !
சுவை பல புகழ்ந்திடும் அறிஞன்
அன்பினை நல்கிடும் மனிதன்
புவியினில் இவனுடன் வாழும்
பொன்னான நாள் சுகாவுக்கு வரவேண்டும் ..!

காதலை அவளுக்குள்ளே விதைத்தான்
கண்களில் காவியம் படைத்தான் !
கோதையவள் துடிப்பினை நிறைத்தான் !
குங்குமம் கன்னமாய் செய்தான்
ஆதவன் போலொளி உடையோன்
அழகினில் நிறைமதி யானோன்
மேதினி மீதினில் சுகாவோ (டு )
மிக்க நாள் வாழ்ந்திட வேண்டும் ...!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக