வியாழன், 29 மார்ச், 2012

அறிவைத் தீட்டி..!

எழுத்தாளர் என்கின்றார் ! எழுதுவோருள்
இவர் தானாம் மா மன்னர் ! செப்புகிறார் !
''பழுத்தபழம் '' போற் பேசும் இவரோயிங்கு
படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம் தான்
அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக .....?
அசலுண்மை ! கடல் நீரோ உப்பு என்றார்
வெளுத்த் நிறம் பாலென்றார்!வானில் நீநதும்
வெண்ணிலவின் ஒளி தன்மை என்று சொன்னார் !

''நா ''மெத்த தடித்ததனால் ''நான் '' நா னென்று
நலங் கெட்ட வார்த்தைகளை கொட்டுகின்றார்
''பா '' மெத்தப் படைத்தளித்த பாவாணர் போல் !
பல மேடை கண்டவர் போல் பகருகின்றார் !
காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
கண்ட படி நாலைந்தைக் கிறுக்கி யுள்ளார் !
நாமத்தை அச்சினிலே !''பெரிதாய்ப் ''போட
நாய் படாப் பாடு பல படுகின்றாரே!

பெண்களைக் கவி செய்வார் ! பெண்களே இப்
பெருவுலகின் பேறேன்ரும் சாற்றி நிற்பார்
பெண்னோருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
பித்தரிவர் '' பெருமனது '' இடங் கொடாது
வண்டமிழைக் கொண்டு இவர் வசைகள் பாடி
வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே !
மண்டைதனில் கனம்கொண்டார் !அறிவைத் தீட்டி
மனமாற்றம் பெற்றுய்ய வேண்டு கின்றேன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக