போட்டிக் கொரு கவிதை போட்டுப் பணப் பரிசை
ஈட்டிக் கொள வேண்டும்!என்னுமோராவலாற்
பாட்டுப் புலமை சார் பாவலர்கள் சூழ்ந்த,இந்
நாட்டுப் புலவர் நடுவன்,நான் தூசென்றே
எண்ணிக் கலங்கா (து), இறுககமுடன் யானின்று
மன்னும் பொருட் சார் மகுடத்தில் பாவாக்க முனைந்தேன்!
தலைப்பு தடுமாற்றம்! தக்கதலைப்பற்ற
மலைப்பு எனக்கு...!
மகிபனை வேண்டிடுங்கால்.....!
மோட்டு வளை போன்று ,முண்டு கொடுக்கின்ற
வீட்டுக்காராசி விற்புருவத்தால் வெட்டி விலாசுகிறாள்!
''புத்தகம் தூக்கிப்புறப்பட்டமுத்த மகளோ
வித்தகம் போதுமே! வேண்டாம் இனிப்படிப்பு''
என்று கூறாமலே இன்றவளோ வீட்டினிலே
நின்று விடடால்!அந்த நினைப்பு வருதா....?
ஆமாம்.........,
செல்வி எனதுமகள் சொல்லாது பள்ளிக்குக்
கல்விதனை விட்டகவலையால் நீ மட்டும்
கலங்குவதாய் எண்ணாதே!
கண்ணே! நின் கூற்று
விளங்குதடி என் செய்வேன்..?வேதனை தான்
என் மகளும்-
கற்று வரட்டும்! நற்கல்வியெனும் செல்வத்தைப்
பெற்று வரட்டும்! பெயர் பெறட்டும்!
என்றே நான் விட்டேன் !
மகளே! நீ மூத்த மகனாய்ப் பிறந்திருந்தால்
கவலையின்றி , யான் கட்டுப்படுகின்ற
நிலைமைக்கு ஆளாகி நிச்சயம் நான் வாடேன்!
வதுவைக்குச்சிதனங் கேட்டுச் சீணுங்கும் பொடியர்க்கு
மாதனமாய்க் கல்வியையும் வைக்கலாமென்று,
''ஜோப்புக்கும் , உன்னிடத்தில் யோக்கியதை''
உண்டென்றும்,
செப்புதற்கு ஏலாமற் செய்து விட்டு நிற்கின்றாய்!
ஒப்பனையிற் கூடிட்ட ஒருவனை நீ வெறும்
கற்பனையிற் போட்டுக் களிக்கின்றாய்
புத்திரியே....!''
எனப்பாட்டு அந்த இலக்கியப் போட்டிக்கு
முனைப்பூட்டி நானெழுத முனைகின்ற போழ்து சீ
மாட்டி என்னருகே வந்து திருவாய் திறந்தே
"போட்டிக்குப் பாட்டுப் புனைகிறது போது முங்கள்
பாட்டுக்குக் (கு)
இருந்து கொண்டு பாப்புனைந்தாற்போதுமோ?
போட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படுங்கள்!
அன்னவளைக்-
கட்டிக் கொடுத்து "கரச்சலை" நீக்கிடுவோம்!
எட்டி நடந்து இனிவரனைத் தேடுங்கள்,
என்றிரைந்தாள்!
உச்சவரம்பு! உயிர்குடிக்கும்
சீதனத்தால்-
அச்சமிகக் கொண்டு அலைகிறேன்!
எவ்விடத்தும்
"பிச்சை"கிடைக்காது பின்வாங்கி நான்வந்த
அச்சமயம்-
கருணை யுள ஒருவன்
கை கொடுக்க முன் வந்தோன்!
வரனை யடைந்த மகிழ்ச்சியாலே-
துள்ளுகின்றேன்!
கட்டிக் கொள்ள வந்தோன்! கற்றவன் தான்
தான் நடத்தும்
பழக்கடையொன்றின் பேருரிமைக்காரன்.
சற்று தலை மொட்டை
சம்பியனைப் போற் தோற்றம்!
முற்றும் உடல் முறுக்கு!
முப்பதுக்கு கீழ் வயது!
மாப்பிள்ளை கிட்டி விட்டார்!
மாத வருமான ஆசிரய மாமன் ,யான் என்றனுக்குப்
பூதா காரமான பொல்லாச் சுமைகள்!
ஏதும் மீதமில்லை! என்றாலுங் கல்யாண
மாது! எனது மகள் மணமகளாய் ஆகுவதை
யானினி மேல்-
விரும்பாதிருக்கலாமோ? வேண்டாமே இப்பொறுப்பு
பெரும்பாடு!
ஈதென்றே பேசாதிருக்கனுமோ?
ஆம்
வாழ்வுச் சுமையை வாஞ்சையுடன் ஏற்று,மணக்
கோலம் புனைந்து கொழுநரா யாக வரும்
மருகர் தம்மைக்கு-
கணையாழி ஒன்றினைக் கட்டாயமிடும்பொறுப்பு
மனையாளும் இந்த மாமனுக்கு உண்டல்லோ?
அதை நினைத்தே -
இறைவனை, யான்வேண்டி எழுதுகிற போழ்திற்
குறையாதே ! வந்து குடும்பத் தரசியே!
பொறுப்புப் புரியாய்ப் புருஷன் என என்னை
வெறுப்புக் கொண்டு விடாது
இருந்து பார்!
போட்டிக்கு கவிதையைப் போட்டு-
முதற்பரிசை
ஈட்டிப் பணமெடுத்துப் இலங்கு பொன்மோதிரத்தை
வாங்கி,
அவர் விரலில் வதுவை நாட் சூட்டி
நீக்கித் துயர்.....பெரு மூச்சை..!
விடுகின்ற எண்ணத்தை விட்டு விடாமற்
பாடுகின்ற பாட்டோடு
பாட்டெழுதிப் போட்டேன்..!
மனையாளே...!
பார்
நமக்கே தான் பரிசு...!
ஈட்டிக் கொள வேண்டும்!என்னுமோராவலாற்
பாட்டுப் புலமை சார் பாவலர்கள் சூழ்ந்த,இந்
நாட்டுப் புலவர் நடுவன்,நான் தூசென்றே
எண்ணிக் கலங்கா (து), இறுககமுடன் யானின்று
மன்னும் பொருட் சார் மகுடத்தில் பாவாக்க முனைந்தேன்!
தலைப்பு தடுமாற்றம்! தக்கதலைப்பற்ற
மலைப்பு எனக்கு...!
மகிபனை வேண்டிடுங்கால்.....!
மோட்டு வளை போன்று ,முண்டு கொடுக்கின்ற
வீட்டுக்காராசி விற்புருவத்தால் வெட்டி விலாசுகிறாள்!
''புத்தகம் தூக்கிப்புறப்பட்டமுத்த மகளோ
வித்தகம் போதுமே! வேண்டாம் இனிப்படிப்பு''
என்று கூறாமலே இன்றவளோ வீட்டினிலே
நின்று விடடால்!அந்த நினைப்பு வருதா....?
ஆமாம்.........,
செல்வி எனதுமகள் சொல்லாது பள்ளிக்குக்
கல்விதனை விட்டகவலையால் நீ மட்டும்
கலங்குவதாய் எண்ணாதே!
கண்ணே! நின் கூற்று
விளங்குதடி என் செய்வேன்..?வேதனை தான்
என் மகளும்-
கற்று வரட்டும்! நற்கல்வியெனும் செல்வத்தைப்
பெற்று வரட்டும்! பெயர் பெறட்டும்!
என்றே நான் விட்டேன் !
மகளே! நீ மூத்த மகனாய்ப் பிறந்திருந்தால்
கவலையின்றி , யான் கட்டுப்படுகின்ற
நிலைமைக்கு ஆளாகி நிச்சயம் நான் வாடேன்!
வதுவைக்குச்சிதனங் கேட்டுச் சீணுங்கும் பொடியர்க்கு
மாதனமாய்க் கல்வியையும் வைக்கலாமென்று,
''ஜோப்புக்கும் , உன்னிடத்தில் யோக்கியதை''
உண்டென்றும்,
செப்புதற்கு ஏலாமற் செய்து விட்டு நிற்கின்றாய்!
ஒப்பனையிற் கூடிட்ட ஒருவனை நீ வெறும்
கற்பனையிற் போட்டுக் களிக்கின்றாய்
புத்திரியே....!''
எனப்பாட்டு அந்த இலக்கியப் போட்டிக்கு
முனைப்பூட்டி நானெழுத முனைகின்ற போழ்து சீ
மாட்டி என்னருகே வந்து திருவாய் திறந்தே
"போட்டிக்குப் பாட்டுப் புனைகிறது போது முங்கள்
பாட்டுக்குக் (கு)
இருந்து கொண்டு பாப்புனைந்தாற்போதுமோ?
போட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படுங்கள்!
அன்னவளைக்-
கட்டிக் கொடுத்து "கரச்சலை" நீக்கிடுவோம்!
எட்டி நடந்து இனிவரனைத் தேடுங்கள்,
என்றிரைந்தாள்!
உச்சவரம்பு! உயிர்குடிக்கும்
சீதனத்தால்-
அச்சமிகக் கொண்டு அலைகிறேன்!
எவ்விடத்தும்
"பிச்சை"கிடைக்காது பின்வாங்கி நான்வந்த
அச்சமயம்-
கருணை யுள ஒருவன்
கை கொடுக்க முன் வந்தோன்!
வரனை யடைந்த மகிழ்ச்சியாலே-
துள்ளுகின்றேன்!
கட்டிக் கொள்ள வந்தோன்! கற்றவன் தான்
தான் நடத்தும்
பழக்கடையொன்றின் பேருரிமைக்காரன்.
சற்று தலை மொட்டை
சம்பியனைப் போற் தோற்றம்!
முற்றும் உடல் முறுக்கு!
முப்பதுக்கு கீழ் வயது!
மாப்பிள்ளை கிட்டி விட்டார்!
மாத வருமான ஆசிரய மாமன் ,யான் என்றனுக்குப்
பூதா காரமான பொல்லாச் சுமைகள்!
ஏதும் மீதமில்லை! என்றாலுங் கல்யாண
மாது! எனது மகள் மணமகளாய் ஆகுவதை
யானினி மேல்-
விரும்பாதிருக்கலாமோ? வேண்டாமே இப்பொறுப்பு
பெரும்பாடு!
ஈதென்றே பேசாதிருக்கனுமோ?
ஆம்
வாழ்வுச் சுமையை வாஞ்சையுடன் ஏற்று,மணக்
கோலம் புனைந்து கொழுநரா யாக வரும்
மருகர் தம்மைக்கு-
கணையாழி ஒன்றினைக் கட்டாயமிடும்பொறுப்பு
மனையாளும் இந்த மாமனுக்கு உண்டல்லோ?
அதை நினைத்தே -
இறைவனை, யான்வேண்டி எழுதுகிற போழ்திற்
குறையாதே ! வந்து குடும்பத் தரசியே!
பொறுப்புப் புரியாய்ப் புருஷன் என என்னை
வெறுப்புக் கொண்டு விடாது
இருந்து பார்!
போட்டிக்கு கவிதையைப் போட்டு-
முதற்பரிசை
ஈட்டிப் பணமெடுத்துப் இலங்கு பொன்மோதிரத்தை
வாங்கி,
அவர் விரலில் வதுவை நாட் சூட்டி
நீக்கித் துயர்.....பெரு மூச்சை..!
விடுகின்ற எண்ணத்தை விட்டு விடாமற்
பாடுகின்ற பாட்டோடு
பாட்டெழுதிப் போட்டேன்..!
மனையாளே...!
பார்
நமக்கே தான் பரிசு...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக