வியாழன், 15 ஆகஸ்ட், 2013




தோழி ....உன் 
தூய அன்பினில் நான் 
துவண்டுதான் போனேன் .
மகுடிக்கு மயங்கும் பாம்பாய் 
எங்கே ...
நீ வாசித்த ம.குடியை 
எனக்கு காட்டு
கண்ணாடியல்லவா நீ ?
உன் முகத்தில் நான் 
முகம் பார்த்துக் கொண்டதால் 
என் 
அலங்கோலங்களையெல்லாம் 
சரிக் கட்டிக் கொள்கிறேன் !

இராக் காலக் கனவுகளில் -
உன் நித்தியா தரிசனம் 
அடி சகி 
உன் நினைவுகள் என்னில் வளர் பிறை 
உன் நினைவாளால் நானுருகி 
உடல் மெலிவது 
இனி உறுதி .
என் சொந்தக் கவலைகளை யெல்லாம் 
விழுங்கி 
ஏப்பமிட்டாய் 
இனி எனக்கு 
உந்தன் கவலைகள் மட்டும் தான் !

பட்டுப் போனதாய் 
நான் நினைத்த 
என் வாழ்வுச் சோலையில் 
பட்டு வண்ண ரோஜாவாய்  நீ ...!
 சாதித்தவைகள்  போக  
இன்னும் 
சாதிக்க  வேண்டியவைகளை 
எனக்கு -
நிதர்சனமாக்கியவளே 
நீ தான் !

உன் நினைவுகளையே 
என் சுவாச முச்சுக்களாய் 
உள்லெடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன் முகம்  பார்த்ததில்
சுரந்த
நினைவுப் பாலால் 
என் பசியே 
 அடங்கிப்போனது !
உன் மனதின் வாசம் 
நான் நுகர்ந்ததில் 
நெஞ்சில்  நிலைத்தது நேசம் 
சகீ ...,
ஒரு கொடியில் பூத்த
இரு பூக்களாய் 
நானும் நீயும் !
கடிகார முட்கள் 
அசையும் கணப் பொழுதெல்லாம்   
உன் நினைவுகள் 
என் நெஞ்சக்   கடி காரத்தின் 
நினைவு    முட்களை
அசைக்கின்றன .
 செக்கன்கள்  நிமிடங்களாகி 
மணித்தியாலங்கள்  யுகங்களாகும்  
வேளை -உன் 
நினைவுத் துளிகள் 
திக்கர் நாடாவைப் போல 
 தடங்களைப் பதிக்கின்றன !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக