வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பிறந்த மண்
சுகந்த மூச்சுக்கள் 
சிதைந்து போகின்றன 
அனல் மூச்சுக்களாக

இதயம் பாக்கி 
உயிரென்பது புரியாத புதிரா....?

உடம்பு 
மண்ணோடு மண்ணாகிப் 
போக வேண்டியது 
 எலும்புக் கூடு 
அழிந்து போகாதா....?
 பேணிக்காத்துத்தான் என்ன பயன்.....?

உடலமைப்பு 
நிலையானது அல்ல 

சிந்தனைத் துளிகள் 
மனதில் -
பட்டுத் தெறிக்காது 
 அடிக்கடி...!

நிரந்தரமில்லா 
மனித வாழ்வு 
கலங்குகின்றது 

கனவினுள் 
போராட்டமாக
சந்தோசம்  தேடிய 
என்னவளின் - 
முகம் மறந்து 
தூய நினைவுகள் அரிக்கிறது 
மனதில் 

துண்டாக்கப்பட்ட 
மீனாய் 
துடிக்கிறது 
பிறந்த பிரக்ஞை 

தூய மூச்சினை 
அவ்வப்போது 
சுவாசித்த 
கண்மணியின் 
மூக்கு - 
முத்தமிட்டு 
மகிழத் துடிக்கிறது 

பிறந்து வாழ்ந்த மண்ணில் 
ஏற்பட்ட -
அசம்பாவிதங்கள் மட்டும் 
மனதில் 
சுடராய் பிரகாசிக்கின்றது 

அடி சகீ ....
நான் 
அன்பை அணைத்து மகிழ்வதா....?
அல்லது - 
பிறந்த தாய் மண்ணை 
தேடிப்பிடிப்பதா ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக