திங்கள், 5 ஆகஸ்ட், 2013
மரணம் -
மண்ணில் தான் உள்ளது 

மனிதர்கள் வாழும் 
வாழ்க்கையில் தான் இன்னும் 
நம்பிக்கையில்லை ...!

உள்ளத்து உணர்வுகளுக்கு 
நிஜம் காட்டும் 
கனவுகளை மட்டும் 
நம் நயனங்கள்
ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டால் ....?

விடிந்து எழும்
உதயத்திலிருந்து
நம் செயற் பாட்டினை
மனசு -
நம்பிக்கையுடன்
தொடங்கி வைக்கும் !

எம் இதயங்களில்
படர்ந்திருக்கும்
குருதி ஓடையின் பாசிகளை
நீக்கியபடியே -
நன்மைகள் வந்து நம்மை
காப்பதற்கு
நோன்பாய் வந்து காத்து நிற்கும் !

பாவங்களை பாராதிருக்கும் -நம்
செயல்களைப் பார்த்து -
பொறாமைகளை பூரிக்கும்
பூவையர்களும்
புன்னகை சிந்தும் !

இறை அடியானே
நோன்பினியில்
அமல்புரியும்
நற்காரியங்களை
கைவிடாதே (நழுவ விடாதே)!

பிறகு ....
நன்மைகள் எதுவுமின்றி
தீமைகளுடன் தான்
மண்ணறையெனும் கப்ர்தனில்
மனம் நொந்தழுவோம் ...!

நம் உடம்பினை
கடிக்க துடிக்கும்
புழு பூச்சிகளின் வேதனைகளை
தாங்கிக் கொள்ளவும்

நம் உயிருக்கு
சோதனை தந்து
வேதனை பார்க்கும்
அவஸ்த்தை உள்ளங்களை
சம்பாலாக்கும் படியும்

படைத்த நாயனிடம்
தொழுகையில்
துஆ கேட்போம்

ரமளானில் ...
நம்மை -
பாவச் செயல்களால்
வேதனை தரும்
மனித ஆத்மாக்களை
பாசத்தால் திருத்துவோம் !
அன்பால் வெல்வோம் ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக