என் இருதயத்தின்
பார்வை புத்தகமே :
உன்-
ஆழமான நேஸத்தை
சுமக்கும் இவளின்
நெஞ்சு முழுவதும்
உனது நாமம்
பொறிக்கப் பட்டிருக்கிறது !
சமுதாயம்-
நம்மைப் பார்த்து
அதிசயிக்கிறது...
இப்படியும் அன்பு
இருக்கிறதா என்று ..?
அதற்கெங்கே
புரியப்போகின்றது...!
நமது ...
நட்பின் மகத்துவம் பற்றி ..
சரித்திர ஏடுகள்
நமது
நாமங்களைச் சுமக்காதிருக்க்லாம் ..
தோழி ...
இவளின்
கபுரின் மீசான்கட்டை கூட
உனது நாமத்தையே
உச்சரிக்கும்......!!!
என்னுயிருக்காக ._
ஹிருதயமெங்கும்
பிராத்தனைக் கசிவுகள் ..!
உன் வாழ்வு !
என் வாழ்வு !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக